சுவையான சிறுதானிய ரெடி மிக்ஸ்கள்!
(ராணி பொன்மதி.)
எம்.எஸ்.சி. முடித்துவிட்டு ஐடி கம்பெனியில் 12 ஆண்டுகள் வேலை பார்த்தவர் ராணி பொன்மதி. புராஜக்ட் மேனேஜர் எனும் பதவி உயர்வால் வேலை பளூ அதிகரிக்க, வேலையை விட்டார். வீட்டில் வெறுமனே தூங்கி பொழுதை கழிக்க விருப்பமில்லாமல் தையற்கலை, நகைவடிவமைப்பு, தயாரிப்பு என பல பயிற்சிகளையும் எடுத்துக் கொண்டார். அது கைகொடுக்காது போக, சிறுதானியங்களை பற்றி கேள்விப்பட்டு, பயிற்சி எடுத்துக் கொண்டு, தற்போது சிறுதானிய உணவுகளை கொண்டு ரெடிமிக்ஸ் செய்ய கற்றுத் தரும் பயிற்சியாளராக இருக்கிறார். இவரை சென்னை அம்பாள் நகரில் சந்தித்தோம்:
""வேலையை விட்டு வீட்டில் இருந்த காலத்தில் எனது உடல் எடை 90 கிலோவைத் தொட்டுவிட்டது. அதை குறைப்பதற்கு என்ன வழி என்று யோசிக்கும் பொழுதுதான் நண்பர்கள் சிலர் சிறுதானிய உணவு வகைகளைப் பற்றி கூறினார்கள். இதனை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு கட்டுப்படும், அதில் மருத்துவ குணங்கள் நிறைய இருக்கிறது என்றனர்.
அதனால் முயற்சி செய்து பார்க்கலாம் என்று சிறுதானிய உணவுகளைச் சாப்பிட தொடங்கினேன். முதலில் தினமும் ஒரு வேலை சாப்பிட்டு வந்தேன், உடல் எடையில் நல்ல மாற்றம் தெரிந்தது. தொடர்ந்து எடை குறைய ஆரம்பித்தது. அதன் பிறகு மூன்று வேளையும் சிறுதானிய உணவுகளையே சாப்பிட்டேன். உடல் நன்றாக குறைந்தது. ஆனால் தினமும் ஒரே மாதிரி சாப்பிட பிடிக்கவில்லை. அதற்காக சிறுதானிய உணவுகளை எப்படி சமைப்பது என்று நான்கு, ஐந்து இடங்களில் பயிற்சி வகுப்புகளுக்கு சென்று கற்றுகொண்டேன். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வகையில் சமைக்க சொல்லித் தந்தார்கள். இதனால் பல வகையில் சிறுதானியங்களைச் சமைக்க கற்றுக் கொண்டேன். இருந்தாலும் என் கணவருக்கும் இதையே சாப்பிடக் கொடுத்தேன். ""தினமும் பச்சைக் கலர், சிவப்பு கலர்ன்னு சாப்பிடக் கொடுக்குறீயே? ரொம்ப போர் அடிக்குது'' என்றார். அதனால் வித்தியாசமாக என்ன செய்யலாம் என்று யோசித்து,மாலை நேர சிற்றூண்டி வகைகளை சமைத்து பார்த்தேன், அருமையாக இருந்தது. விதவிதமாக சமைத்ததால் சலிப்பும் ஏற்படவில்லை.
அப்போதுதான் எனக்கு யோசனை வந்தது என்னைப் போல் எத்தனையோ பேர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகிறார்களே, அவர்களுக்கு ஏன் இந்த சிறுதானிய உணவு வகைகள் சமைப்பது பற்றி பயிற்சி கொடுக்கக் கூடாது என்று தோன்றியது. அதற்காக பிரத்யேகமாக சிறுதானிய ரெடி மிக்ஸ் வகைகளை எப்படித் தயார் செய்வது என்ற பயிற்சி வகுப்புகளுக்கு சென்று கற்றுக் கொண்டு வந்து, தற்போது பயிற்சி வகுப்புகள் எடுத்து வருகிறேன்.
இந்த சிறுதானிய ரெடி மிக்ஸ்களில் எந்தவித கெமிக்கலும் கலக்காமல் ஆரோக்ய முறையில் தயாரிக்கப்படுகிறது. ஒரு டப்பாவில் அடைத்து வைத்துக்கொண்டால் மூன்று மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். பிரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியமும் இல்லை.
எங்கள் பயிற்சி கூடத்தைப் பற்றி கேள்விப்பட்டு மருத்துவர்கள், மருந்தாளுநர்(பார்மஸிஸ்ட்) , குழந்தைகளுக்கு சத்தான உணவு கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் இல்லத்தரசிகள், நீரிழிவு நோய் உள்ளவர்கள், இதை பிஸினஸôக செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் பலரும் ஆர்வத்துடன் வந்து சிறுதானிய வகைகளை சமைப்பது குறித்து பயிற்சி பெற்று செல்கிறார்கள். மதுரையில் இருந்து வந்து இந்த பயிற்சியை எடுத்துக் கொண்டு போன ஒருவர் இதனை தற்போது பெரிய அளவில் பிஸினஸôக நடத்தி வருகிறார். சமீபகாலமாக சிறுதானிய உணவு வகைகளைப் பற்றிய விழிப்புணர்வு பெருகி வருவதால் இந்த தொழிலுக்கு நல்ல வரவேற்பும் இருக்கிறது. சிறுதானிய சத்துமாவு மிக்ஸ், சாமை அடை மிக்ஸ், தினை பாயசம் மிக்ஸ், வரகு பொங்கல் மிக்ஸ், தினை முறுக்கு மிக்ஸ்,கேழ்வரகு இட்லி மிக்ஸ், சோள ரொட்டி மிக்ஸ், கம்பு தோசை மிக்ஸ், கேழ்வரகு புட்டு மிக்ஸ், கம்பு குழிபணியார மாவு, குதிரை வாலி மிக்ஸ் போன்ற பத்து வகையான ரெடிமிக்ஸýக்கு பயிற்சி தருகிறோம்.
சிறுதானியத்தில் பனி வரகு என்று ஒரு வகை இருக்கிறது இதை சமைத்து உண்டு வந்தால் கேன்சர் நோய் கூட குணமாகிறது. அந்த அளவிற்கு சத்துக்கள் நிறைந்த இந்த உணவுவகைகளின் பயன்கள் பற்றி தெரிந்து கொண்டபின் அரிசி சாதம் வேறும் சக்கையாகத் தோன்றுகிறது '' என்கிறார். |
No comments:
Post a Comment