சேமியா உப்புமா"
தேவையான பொருள்கள்:
சேமியா – 200 கிராம் (1 பாக்கெட்) வெங்காயம் – 1 தக்காளி – 2 குடமிளகாய் – 1 பச்சைப் பட்டாணி – 100 கிராம் (உரித்தது) பச்சை மிளகாய் – 4 மஞ்சள் தூள் – 1 சிட்டிகை எண்ணை – 1 டேபிள்ஸ்பூன் பனீர் – 150 கிராம் உப்பு – தேவையான அளவு
தாளிக்க – எண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, முந்திரிப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.
செய்முறை:
பாக்கெட்டில் சொல்லியிருக்கும்படி சேமியாவை வேகவிடவும் அல்லது ஒரு லிட்டர் கொதிக்கும் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் எண்ணை, சிறிது உப்பு சேர்த்து, பின் சேமியாவையும் சேர்த்து வேகவிடவும்.
நன்கு வெந்ததும் வடிதட்டில் வடித்து, பின் ஒரு கப் குளிர்ந்த நீர் சேர்த்து வடிய விடவேண்டும்.(*)
வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணையைச் சூடாக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, உடைத்த முந்திரிப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்துக் கொள்ளவும்.
அதனுடன் நீளவாக்கில் அரிந்த பச்சை மிளகாய், வெங்காயம், குடமிளகாய், பச்சைப் பட்டாணி சேர்த்து, வதக்கவும்.
நன்றாக வதங்கியதும், பொடியாக அரிந்த தக்காளியைச் சேர்த்து வதக்க வேண்டும். உதிர்த்த பனீர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும்.
மேலே வேகவைத்தை சேமியாவைச் சேர்த்து குறைந்த தீயில் நன்றாகக் கலக்கும்வரை ஓரிரண்டு நிமிடங்கள் கிளறி இறக்கவும் . எலுமிச்சைச் சாறு பிழிந்து, கொத்தமல்லித் தழை சேர்த்துப் பரிமாறவும்.
* எந்த ப்ராண்டாக இருந்தாலும் சேமியாவைத் தனியாக வேகவைத்து குளிர்ந்த நீரில் அலசி, பின் உபயோகித்தாலே சேமியா ஒன்றோடொன்று ஒட்டாமல் இருக்கும். நேரிடையாக வாணலியில் சேர்த்து வேகவைத்தால் உதிரியான உப்புமா கிடைக்காமல் களி கிண்டியதுபோல் ஆகலாம். இது மிக முக்கியம்.
* இந்த உப்புமாவை ஃபோர்க் உபயோகித்து சாப்பிடுவதே வசதியானது மற்றும் ருசியானது. :) |
No comments:
Post a Comment