" } Google+
நீ என்ன பெரிய "மேதையா" ?
ஒரு ஆணின் விந்து பன்னிரண்டு வருடம் அவன் உடம்பை விட்டு வெளியேறாமல் இருந்தால், அவனது உடம்பில் சூஷ்மமான (கண்ணிற்கு தெரியாத) நாடி ஒன்று வளர்ந்து வரும். அதன் பெயர் "மேதா நாடி". அதற்கு என்ன சிறப்பு என்றால் அந்த ஆண் மகனுக்கு அதீத ஞாபக சக்தி வந்து விடும். அவன் பிறந்தது முதல் நடந்த ஒவ்வொன்றும் அவனுக்கு ஞாபகம் வரும். ஏன் அவனுடைய மற்றும் எல்லாருடைய முன் ஜன்மமும் ஞாபகத்திற்கு வரும். அவன் எதை பார்த்தாலும் அவனுக்கு அதன் நுணுக்கம் புரிந்து விடும். அவனுக்கு எதையும் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அவன் ஒரு "மேதாவி" ஆகி விடுகிறான்.
இப்படி பட்ட அதிசயமான ஒரு சக்தியை அவன் உண்ணும் உணவு அவனுக்கு பாதகம் செய்து விடாமல் இருக்கவே நம் முனோர்கள் கண்ட இடங்களில் உணவு அருந்த மாட்டார்கள். இதை எல்லோரும் அனுபவிக்கவேண்டி சாஸ்திரப்படி அனுமதிக்க பட்ட உணவுகளை மட்டும் உண்ண வேண்டும் என்று சொல்லி வைத்தார்கள். பிறகு வந்த சந்ததியினர் இதை உணராமலேயே சாஸ்த்ரம் சம்ப்ரதாயம் என்று தீண்டாமையை வளர்த்து விட்டனர். இன்று கூட வட இந்தியாவில் சிலர் தானே சமைத்த உணவைத்தான் உண்பார்கள்.ஹோட்டல் மற்றும் வேறு இடங்களில் உணவு உண்ண மாட்டார்கள். இப்படிப்பட்ட அதிசயமான சக்தியை சிதறடிக்க கூடாதென்று வெங்காயம், பூண்டு , முருங்கை மற்றும் வேறு சில சாஸ்திர சம்மதம் இல்லாத உணவுகளை ஒதுக்கி வைத்தார்கள்.
இதைத்தான் நாம் பேச்சு வழக்கில் யாரவது எல்லாம் தெரிந்த மாதிரி பேசினால் நீ என்ன பெரிய "மேதையா" என்று கேட்கிறோம் அனால் அதன் அர்த்தம் தெரியாமலே .
பெண்ணின் உடம்பிற்கு இப்படி பட்ட ஒரு அமைப்பு இருபதற்காக தடயம் எதுவும் காணப்படவில்லை . யார் இப்படி மேதையாக வாழ்ந்தார்கள் என்று பார்த்தல், சமீபத்தில் காஞ்சி பெரியவர் மற்றும் ரமண மஹரிஷி.
Follow @lokakshema_hari Tweet
No comments:
Post a Comment