"
}
Google+
சேப்பங்கிழங்கு ரோஸ்ட்
தேவையான பொருட்கள்
சேப்பங்கிழங்கு – 500கிராம்
சோள மாவு – 1 டீஸ்பூன் (தேவைப்பட்டால்-மொறு மொறுவாக இருக்க)
அரிசி மாவு கடலை மாவு மிளகாய்த்தூள் – தலா ஒரு ஸ்பூன்
எண்ணெய் – 200மில்லி
உப்பு – தேவையான அளவு
செய்முறை;-
சேப்பங்கிழங்கை குக்கரில் வைத்து 2 விசில் விட்டு இறக்கவும். ஆறியவுடன் தோல் உரித்து பாதியாக நறுக்கவும். அரிசிமாவு கடலை மாவு மிளகாய்த்தூள் சோளமாவு உப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து நறுக்கிய சேப்பங்கிழங்கு துண்டுகளில் சேர்த்து நன்கு கலக்கவும்.வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பைமிதமான தீயில் வைத்து சிறிது சிறிதாக சேப்பங்கிழங்கு துண்டுகளைப் போட்டு பொரித்து எடுக்கவும்.
குறிப்பு;-மாவுடன் தண்ணீர் சேர்க்கக்கூடாது.சேப்பக்கிழங்குடன் சோள மாவு சேர்ப்பதால் மொறு மொறுவென இருக்கும்.
|
|
http://www.facebook.com/pages/Khariharan/115524648579725
power by BLOGSPOT-PING
No comments:
Post a Comment