Thursday, 3 May 2012

பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்



power by BLOGSPOT-PING



அறிந்து கொள்வோம் .

திருப்பதி செல்கிறோம்திருவேங்கடமுடையான் ஏழுமலை வாசனை வணங்கிமகிழ்கின்றோம்ஆனால் திருப்பதியில் நம்மில் சிலருக்குத் தெரியாதஅதிசயங்கள்உண்மைகள்நடைமுறைகள் எவ்வளவோ உள்ளனஅவற்றில் சிலவற்றைதொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
 

பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்
 

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச் சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன
அவைகளில் சில.........
 

1. திருப்பதி ஆலயத்திலிருந்து கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்என்ற அபூர்வ பாறைகள்உள்ளன.உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன. இந்த பாறைகளின்வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின்  திருமேனியும்இந்த பாறைகளும் ஒரே விதமானவை.

2. 
ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள்இந்த பச்சைக்கற்பூரம் ஒருஇரசாயனம்.அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம்இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில்தடவினால் கருங்கல் வெடித்துவிடும்ஆனால்சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத்தடவினால் அந்தப்பறைகள் பெடிப்பதில்லை.ஏழுமலையாக் திருவுருவச்சிலைக்கு 365 நாளும்பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள்ஆனாலும்வெடிப்புஏற்படுவதில்லை .

3. 
எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பிகளின் உளிபட்டிருக்கும் இடம்தெரியும்உலோகச்சிலையானாலும் உலோகத்தை உருக்கி வார்த்த இடம்தெரியும்ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லைஎந்தகருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும்ஆனால்ஏழுமலையான்திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டதுபோல் இருக்கின்றன.ஏழுமலையான் விக்ரகத்தில்நெற்றிச்சுட்டிகாதணிகள்புருவங்கள் நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல்பளபளப்பாகஇருக்கின்றன.

4. 
ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில்இருக்கிறதுதிருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம் அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்தநீர்பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள்ஆனால்அபிஷேகம் முடிந்தவுடன்ஏழுமலையானுக்கு வியர்க்கிறது .பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள்வியாழக்கிழமைஅபிஷேகத்திற்கு முன்னதாகநகைகளைக் கழற்றும் போதுஆபரணங்கள் எல்லாம்சூடாகக்கொதிக்கின்றன.
திருப்பதி ஆலயம்அதன் வழிபாடுஉண்டியல் வசூல்பூஜை முறைகள்சரித்திர சம்பவங்கள்அனைத்தும் அதிசய நிகழ்வுகளாகஇருக்கின்றன .

1. 
திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிகவும்  பெரியதாகும்பொங்கல்தயிர்சாதம்புளிச்சாதம்,சித்ரான்னம்வடை,முறுக்குஜிலேபிஅதிரசம்போளிஅப்பம்மெளகாரம்,லட்டுபாயசம்தோசைரவாகேசரிபாதாம் கேசரிமுந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரியஅளவில் தயார் செய்யப்படுகின்றன.

2. 
ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள்இதில் தயிர்சாதம் தவிர வேறுஎந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப் படியைத்தாண்டாதுவைரம்வைடூரியம்தங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத்தாண்டச் செல்லாதுஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும் ,தயிர்சாதமும்ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும் .

3. 
ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் கிலோ எடையும் கொண்ட புடவை பட்டுபீதாம்பரமாகும்இந்த ஆடையை கடையில் வாங்க முடியாதுதிருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில்12500  ரூபாய் செலுத்த வேண்டும்.வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தான்வஸ்திரம் சாத்துவார்கள்இது மேல் சாத்து வஸ்திரம்பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்குமூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

4. 
உள் சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய் கட்டணமாகும் .ஒவ்வொருவெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சார்த்துவதற்கு சமர்ப்பிக்கப்படும்பணம் செலுத்திய பிறகுவஸ்திரம் சாத்துவதற்கு பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

5. 
பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பிக்கும் சீர் வஸ்திரங்கள் ஆண்டுக்குஇரண்டு முறை சாத்தப்படுகிறது.

6. 
ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள்காத்திருக்க வேண்டும்.

7. 
அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூநேபாளத்திலிருந்து கஸ்தூரிசைனாவிலிருந்துபுனுகுபாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள்வரவழைக்கப்பட்டுதங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 51 வட்டில் பால் அபிஷேகம்செய்யப்படும்பிறகு கஸ்தூரி சாத்திபுனுகு தடவப்படும்காலை 4,30 மணி முதல் 5,30 மணி வரைஅபிஷேகம் நடைபெறுகிறதுஅபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்.

8. 
ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால்திருப்பதிக்கு விமானத்தில் அனப்பி வைக்கப்படுகின்றனஒரு ரோஜா மலரின் விலை சுமார் 80 ரூபாய்.

9. 
சீனாவிலிருந்து சீனச்சூடம்அகில்சந்தனம் , அம்பர்தக்கோலம்இலவங்கம்குங்குமம் , தமாலம்,நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன.

10. 
ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடிஇவருடைய நகைகளை வைத்துக்கொள்ளஇடமும் இல்லைசாத்துவதற்கு நேரமும் இல்லைஅதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ளநகைகளை செய்தித்தாட்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள் .

11. 
ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடைஇதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவைசூரிய கடாரி 5 கிலோ எடைபாதக்கவசம் 375 கிலோகோவிலில் இருக்கும்ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாதுஇதன் மதிப்பு ரூ .100கோடி.

12. 
மாமன்னர்களான இராசேந்திர சோழர்கிருஷ்ண தேவராயர்அச்சதராயர் போன்றோர் .ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும்அறக்கட்டளைகளையும் செய்து அவற்றைகல்வெட்டுகளிலும்செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர்சோழ அரசியும் இங்கு வந்து காணிக்கைசமர்பித்து இருக்கிறார்.

13. 
ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை ஆண்டவனைப்போலவேஅபிஷேக அலங்காரம்செய்து பார்க்க ஒரு சிறிய விக்கிரகம் கி.பி.966 ஜுன் 8ஆம் தேதி வெள்ளியால்செய்யப்பட்டதுஇந்த விக்ரகத்திற்கு பல்லவ குறுநில மன்னன் சக்தி விடங்கனின் பட்டத்து அரசிகாடவன் பெருந்தேவி நகைகளைத்தந்துபூஜைக்கு அறக்கட்டளையும் வைத்தார்.முதலாம்குலோத்துங்க சோழன் திருமலை தேடிவந்து காணிக்கைசெலுத்திஉள்ளார் .

14. 
திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.

15. 
வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது . மார்கழிமாதஅர்சனைக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது .

16. 
சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது . அன்று உற்சவப்பெருமானுக்குவைரத்தில் விபூதி நெற்றிப்பட்டை  சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெருகிறதுதாளப்பாக்கம்அன்னமய்யாஏழுமலையானை பரப்பிரம்மமாகவும்சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும்சக்திஸ்வரூபமாகவும் பாடிஅந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதிவைத்துள்ளார்திருப்புகழ் பாடியஅருணகிரிநாதப் பெருமான் திருப்பதிக்கோயிலுக்கு வந்திருக்கிறார்அவரும் அன்னமய்யாவும்சமகாலத்தவர்கள்சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர்,மந்திர சாஸ்திரம் தெரிந்தவர் , நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார்ஏழுமயைான்மீதுசேஷசல நாமம் வராளி ராகத்தில் பாடியுள்ளார் .

17. 
அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம்உள்ளது.

18. 
ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம் .

19. 
எந்த சாத்வீகசாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமாகிலும்இருக்கும்ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாதுஅவர்நிராயுதபாணிஅதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால் , வெறுங்கை வேடன் என்றுஅழைக்கப்பட்டார்.

20. 1781 
ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில் முகாமிட்டிருந்தது.அப்படையின் 33 ஆவது பிரிவைச்சேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார்அவர் குணமடைய ஏழுமலையானை பிராத்தித்திருகிறார்குணமடைந்ததும் ஓர் இந்து சிப்பாய்மூலம் நேர்த்திக்கடன்செலுத்தியிருக்கிறார் .

21. 
ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோகர்னல் ஜியோ ஸ்டிராட்டன் போன்றவர்கள்ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர்.

22. 
திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை எந்த ஆங்கிலேயரும் மலைஏறவில்லை.ஆங்கிலப்பாதிரிகள் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நடவிரும்பினார்கள்ஆனால் அதற்கு ஆங்கிலேயத் தளபதிகளே அனுமதி அளிக்கவில்லைதிருமலைதிருக்கோயிலில் நித்யபடி பூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள்விரும்பினார்கள். பூஜைகள் சரிவர நடக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கம் வரும் எனக்கவலைப்பட்டார்கள்.

23. 
திருப்பதி அலமேல்மங்கைக்கு உள்பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார்செய்யப்படுகிறதுசெஞ்சு இனத்தைச்சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள்உள்பாவாடை சீமாட்டியின் திருமேனியில் படுவதால்இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளைகுளிப்பார்கள்அவர்கள் மதுமாமிசம் உண்ணமாட்டார்கள்வெள்ளிக்கிழமை அபிஷேகத்திந்கு பரிமளஅறையில் வியாழன் இரவு அறைத்து தயார் செய்யப்படுகிறதுகுங்குமப்பூ கலவையும் அபிஷேகத்திக்குசேர்கப்படுகிறதுவெளிநாடுகளிலிருந்து வாசனை திரவியங்கள் பக்தர்கள் அனுப்பிய வண்ணம்உள்ளனர்ஒரு வாரத்திற்கு ரூ,50000 மதிப்புள்ள வாசனை திரவியங்கள் வருகின்றன.
24. 
ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்ணுவாகவும்ஒருநாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று வந்துள்ளது.

25. 
ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறதுஆகவே இது புனிதமானநீராகும்இங்கே குளித்துவிட்டு நீரில் நின்ற படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயேவிடவேண்டும்இது விசேஷ வழிபாடாகும்.

25. 
வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்து முறை நடக்கும்.வடகலைசம்பிரதாய த்தில் '' வேங்கடமெனப்பெற்றஎன்ற பாசுரமும்தனியன்களும் இடம் பெறும்.சாத்துமுறையின் போது பூவஸ்திரம் இல்லாமல் ஏழுமலையான் திருமேனியுடன் இருப்பார்முதலில்ஒரு தீபாராதனை எடுக்கப்படும்பிறகு தென் கலை சாத்து முறை சேவிக்கப்படும்பிறகு நைவேத்தியம்செய்யப்படும்பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும்ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணைப்பறிக்கும் அழகோடு இருப்பார்.

26. 
கி.பி.1543ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர் பத்மாவதிதாயாருக்கு திருக்கோயில் எழுப்பிகும்பாபிஷேகம் செய்துள்ளார்கி.பி.1764ல் நிஜாம் தெளலா என்பவனின் தலைமையில் வந்தமுஸ்லீம் படைகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டனஇதன் இடிபாடுகள் இன்றைக்கும்உள்ளன.

27. 
திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள் திருபதி கொண்டுவரப்பட்டு ஏழுமலை ஆண்டவனுக்கு சாத்தப்படுகிறதுஸ்ரீ ஆண்டாள் ஏழுமலையானை கடவுளாகவழிபட்டு வாழ்த்தி வணங்கிணார் .

28. 
திருமலை திருக்கோவிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளனஇதில்236 பல்லவசோழபாண்டியர் காலத்தவை. 169 கல்வெட்டுக்கள் சாளுவ வம்ச மன்னர்கள்காலத்தவை. 229 கிருஷ்ண தேவராயர் காலத்தவை. 251 அச்சுதராயர் காலத்தவை. 147 சதாசிவராயர் காலத்தவை. 135 கொண்டை வீடு அரசர் காலத்தவை.நந்திவர்மன் (பல்லவர்ஆண்ட கி.பி.830 தொடங்கி 1909 வரை உள்ளனகல்வெட்டுகளில் 50கல்வெட்டுக்கள் தான் தெலுங்குகன்னட மொழிகளில் உள்ளனமீதம் 1130 கல்வெட்டுக்கள்தமிழில் தான் உள்ளன.

 
 









No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator