வானவில் வளைவதுண்டு,
ஞாண் இழுத்தெய்தோர் உண்டோ?
வேள்வி நெய் ஆவியுண்டு,
நீறென்று கொய்வார் உண்டோ?
ஸ்த்ரீ ஜனம் தெய்வமென்றால்
புருஷன் முன்-தெய்வமன்றோ?
பதி-ஸதி ஐக்யமின்றி
ஸந்தானம் யேதுமுண்டோ?
கோலகம் குடிசை என்றால்
மாளிகை மரத்தடியோ?
அண்டம் நிறை பரமசிவன்
சிறு கல்லில் கண்டதில்லையோ?
கண்காணா கடல் வேந்தன்
கிண்ணத்தில் கண்டதுண்டு;
பொங்கும் அஹம் மட்டும்
ஆகாயம் துளாவுவதேன்?
பரம்மொருள் அகிலமென்று
பணிந்து நாம் அறிந்து விட்டால்,
"மாளிகை! மாது!" -- வாதம்
தலை குநிந்தடங்கிடாதோ?
உறுமிவிட்டான்.... இல்லை இல்லை....
ஊளையிட்டான்...... புன்மதி படைத்த புல்லன்.......
பொறாமையால் பிதற்றிவிட்டான் - பதில்
தராமையும் நன்றே ஆகும்.......
மதுமாந்தி மகிழும் மூடன்
மெதுவாக புகழை நச்சி
உதவாத வாதம் செய்யும்
பொதுவான பேதை வார்த்தை.......
தெருமுனை கோயில் நிழலில்
பெருமனை என்றே கொண்டு
எருமைபோல் மூர்க்கன் சென்று
பெருமைமேல் அமர்ந்தேறட்டும்.....
பொன்மாளிகை பசுபெண்டிர்
வேண்டியது யானே ஆவேன்.....
அளப்பவன் அளக்கட்டும் அன்றி
மறுக்கட்டும் ஈஸ்வரன் எண்ணம்......
பொறாமை பொச்சரிப்பு இங்கு
பிறர்க்கேன்? சிறுமதி கண்டீர்!
புதுமை யாவும் பழமையாகும் என்று சொன்னேன்
பொறுமையோடு படிக்காமல் புலம்புகிறான் அவன்!
பத்தினி பெண் தான் வேண்டினேன் என்கிறான்
பண்ணிசை யாழ் மிசை மிகு கன்னி நாடியவன் !
கேவலம் என்று விமர்சிக்கிறான் - இருவர் மடலும்
ஊர்வலம் சென்று வந்தால் உண்மை வெளி வரும்!
ஏசுகிறான் என் கருத்தை , வீசுகிறான் வார்த்தை !
ஊர்வலம் சென்று வந்தால் உண்மை வெளி வரும்!
ஏசுகிறான் என் கருத்தை , வீசுகிறான் வார்த்தை !
புவனத்து ஈஸ்வரன் பெயர் கொண்டான் அல்லவா ?
'பவனம்' ஜனாதிபதிபோல் விரும்பியது குற்றமா என்கிறான்!
கவனிக்க வில்லையா கேட்கிறான் கற்றவர் உறவு நாடியதை ?
கற்றவரோடு கலந்து உரையாட கடலோர கரை போதுமே!
தெருவு மூலையில் இருக்கும் கோவில் வளாகம் உண்டே!
நகருக்கு புற வெளியில் உள்ள நூல் நிலையம் போகலாமே ?
அவருக்கெல்லாம் சிறந்த பொன் மாளிகை தான் வேண்டுமா!
இவருக்கு இனி மறுபடி கொடுப்பதில் ஒரு பயனுமில்லை!
பேசுவது வெள்ளி , 'மௌனம்' தங்கம் என்றார் !
மடித்து வைக்கிறேன் என் மன நெகிழ்ச்சியை!
முடித்து விடுகிறேன் இந்த கடி கவிதையை ! ! !
இப்படிக்கு அன்புடன் பெ ந சு மணி
No comments:
Post a Comment