ஸ்பெயின் நாட்டு அரண்மனை
ஒரு முறை ஸ்பெயின் நாட்டு அரச பரம்பரையைச் சேர்ந்த ப்ரபு ஒருத்தர் பெரியவாளை தர்சனம் பண்ண வந்தார். பக்கத்தில் ஸ்பானிஷ் மொழி பெயர்பாளர் ஒருவரும் இருந்தார். பெரியவா அவரிடம் ஸ்பெயினைப் பற்றியோ, கலாச்சாரம் பற்றியோ, மக்களைப் பற்றியோ எதுவுமே பேசவில்லை.......அவர் கேட்டது........
"ஒங்களோட அரண்மனைல new wing, old wing ...ன்னு ரெண்டு portion இருக்கோ?"
அவருக்கோ ஆச்சர்யம்! "ஆமாம் இருக்கிறது" என்றார்.
"நீங்க எந்த wing ல இருக்கேள்?"
சொப்பனத்தில் பதில் சொல்வது போல் "new wing ல இருக்கிறோம்"
அடுத்த குண்டு........"அங்க, ஜலம் மத்த வசதியெல்லாம் இருக்கோ?"
"ஆமாம் இருக்கு. அதனால்தான் அங்கே இருக்கிறோம்"
அடுத்த மஹா குண்டு.......வந்து விழுந்தது! "அப்போ.....அந்த old wing உபயோகத்ல இல்லேன்னா....அதை இடிச்சுட்டு, அழகா நந்தவனமா பண்ணிடலாமே!"
ஸ்பெயின் ப்ரபுவுக்கோ பொட்டில் அடித்தார்ப் போல் இருந்தது! தன் நாட்டு அரண்மனையைப் பற்றி இவ்வளவு விஸ்தாரமாக பேசுகிறாரே! தங்கள் குடும்பத்தார் அந்த பழைய பகுதியை என்ன பண்ணலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது, இந்த மஹானும் எல்லாம் அறிந்தவராக அதை என்ன பண்ணலாம் என்பதையும் சொல்கிறாரே! மெல்ல மொழி பெயர்ப்பாளரிடம் " இந்த மஹான் எப்போது ஸ்பெயின் நாட்டுக்கு வந்தார்?" என்றார். அவர் தமிழில் ஆரம்பிக்கும் முன், பெரியவாளே சிரித்துக் கொண்டு தரையில் ஒரு பெரிய வட்டத்தைப் போட்டுக் காட்டினார்! ஸ்பெயின் ப்ரபுவுக்கு எல்லாமே புரிந்தது!
இந்த உலகம் சிறியது.....என் கைக்குள் அடக்கம்! என்று சர்வேஸ்வரனான பெரியவா சொல்லாமல் சொன்னது புரிந்தது!
"எனக்கு புரிய வைத்துவிட்டார். அவர்தான் இந்த உலகின் ஆதார சக்தி என்பதை!" என்று கண்கள் பனிக்க சொல்லிவிட்டு, நமஸ்காரம் பண்ணிவிட்டு, அனுக்ரகத்துடன் தன் நாட்டுக்கு கிளம்பினார்.
------------------------------
No comments:
Post a Comment