Thursday, 12 March 2015

ஹர ஹர சங்கரா அல்லாஹூ அக்க்பர்...........

ஹர ஹர சங்கரா அல்லாஹூ அக்க்பர்...........

cropped-periyava_vishranthi_painting_sreeram.jpg
சுமார் ஐம்பந்தைந்து வருடங்களுக்கு முன் நடந்த ஓர் சுவையான சம்பவம்…
ஸ்ரீ சரணாள் சேலம் பகுதியில் யாத்திரையாகப் போய்க் கொண்டிருந்தபோது, அவருடன் சிலரும் நதிவழியாகவும், பரிவாரங்கள் சாலை வழியாகவும் போய்க் கொண்டிருந்தனர். அப்போது குதிரையின்
மேல் நகரா அடித்துச் செல்வது வழக்கம். இது ஒரு மசூதி வழியாகச் சென்றபோது மசூதி வழியாக
இதெல்லாம் போகக் கூடாது என்று குதிரையின் முன்கயிற்றைப் பிடித்துத் தடுத்தார்கள். இதனால்
சிறு சலசலப்பு ஏற்பட்டு ,சிலர் மத்யஸ்தம் செய்தார்கள்.
மறுதினம் மேற்படி மசூதியைச் சேர்ந்த ஒருவர் மடத்து அதிகாரிகளிடம் ஸ்ரீசரணாளை தனியாக சந்தித்துப்
பேச அனுமதி கேட்டார்கள். மடத்து அதிகாரி, முதல் நாள் சம்பவத்தை மனதில் கொண்டு, அதற்கு மறுப்பு சொல்லிவிட்டார். வேண்டுமானால் எல்லாரும் இருக்கும்போது சந்திக்கலாம் என்றும் சொல்லிவிட்டார். இந்த விஷயம் ஸ்ரீ சரணாள் காதிர்கு எட்டியது. ஆனால் அவர் தனியாகச் சந்திப்பதில் தனக்கு
ஆக்ஷபணை எதுவும் இல்லை என்றும் அவரை வரும்படியும் கூறிவிட்டார். இதில் மடத்தில் உள்ளவர்களுக்கு விருப்பம் இல்லாவிடினும், வேறு வழியில்லாமல் எதிரே இருந்த ஒரு வீட்டில் சந்திக்க ஏற்பாடாயிற்று. மறு தினம் பெரியவா அந்த வீட்டு வாசல் கதவை உள்தாழ்ப்பாள் போட்டுக்
கொண்டு தான் அவரிடம் பேசச் சென்றார்.
மடத்து அதிகாரிகள் கலக்கத்துடன் வெளியே காத்திருந்தனர். பெரியவாளிடம் சென்றவர் பெரிய காகித உறை ஒன்றை எடுத்துக் கொடுத்தாராம். அதில் என்ன என்று பெரியவா கேட்டதற்கு பெரியவாளைப் பற்றி தான் எழுதிய சம்ஸ்க்ருத ஸ்லோகங்கள் என்று சொல்லி அதை அவரே வாசித்துக் காண்பித்தாராம். நாக பந்தம், கருட பந்தம், சக்ர பந்தம் போன்ற சாகித்ய மரபுகளுடன் அழகாக வாசித்தாராம்.
" இதை யார் எழுதியது யார் சொல்லிக் கொடுத்தார்கள்' என்று கேட்டதற்கு தன் பரம்பரையினர் சம்ஸ்க்ருதத்தில் விசேஷ பயிற்சி பெற்றவர்கள் என்றும், பரம்பரையாக  வருவதாகவும் பதில் சொன்னார். அவர்கள் கசாப்புக் கடை நடத்தி வருவதாகவும் கூறினாராம். இதை ஸ்ரீ சரணாள்  ஹாஸ்யத்துடநும், த்ரில்லிங்காகவும்,ஸஸ்பென்ஸாகவும் சொல்லி எல்லா ஜாதியிலும் மதத்திலும் நல்லொழுக்கம்,
பண்பு உள்ளவர்கள் இருக்கிறார்கள் என்பதனையும் குறிப்பிட்டார்.
இவர்தான் பின் நாளில் வேத பாஷ்ய கல்லூரி ஆரம்பிக்க மிக முயற்சி எடுத்துக் கொண்ட ஸப் ஜட்ஜ் திரு கமாலுதீன்!
இந்த சமயத்தில் நான் ஒன்று கூர நினைக்கிறேன். என் சித்தப்பா ஸ்ரீ லக்ஷ்மிகாந்த சர்மாவை அழைத்து
பெரியவா ராஜா வேத பாடசாலை கும்பகோணம் , ஸ்ரீ கோவிந்த தீக்ஷிதர் அவர்களால் சுமார் நானூற்றைம்பது வருடங்களுக்குமுன் ஸ்தாபிக்கப்பட்டது அதன் நிர்வாகத்தைச்  சிறப்பாகச் செயல் படுத்த திரு கமாலுதீன் அவர்களை சந்திக்குமாறு  சொல்ல சித்தப்பா குடும்ப ஆசாரம் கருதி அதனை தள்ளிப் போட்டு வந்தார். ஆனால் ஒரு நாள் பெரியவாள் கொடுத்த நெருக்கடியில் ஜட்ஜ் அவர்களை சந்தித்து ஆசார்யாள் ஆஜ்ஞைப்படி அவருடன் அராபிக் வகுப்புகள் எப்படி நடைபெறுகிறது என்று போய் பார்த்து அதன் பிறகு ராஜா வேத பாடசாலை நிர்வாகத்தை மேற்கொண்டதுமன்றி, வேத சம்ரக்ஷண பரிபாலன சபை ஒன்று நிறுவி அது இன்றளவில் நல்லவிதமாக நடை பெறுகிறது. ராஜா வேத பாடசாலையில் பயிலும் மாணாக்கர்களுக்கு அரசாங்க உதவித்தொகையும், ஆசிரியர்களுக்கு மத்திய அரசாங்க ஊதியமும் பெற்றுத்தந்தார்.
திரு கமாலுதீன் அவர் ஜீவன் இருக்கும் வரை எங்கள் அகத்தில் வந்து சாப்பிட்டுச் செல்லும் பழக்கம் இருந்தது. இன்றளவும் அவர்கள் சந்ததியினரும் என் சித்தியைப் பார்த்துச் செல்கின்றனர்.
பெரியவாளிடம் திரு கமாலுதீன் கொண்டிருந்த பக்தி அளவிட முடியாதது. அதுபோல் ஜஸ்டிஸ் கம்பராமாயண விளக்கவுரை எழுதிய இஸ்மாயிலும் பெரியவாளிடம் அளவு கடந்த பக்தியும் மரியாதையும் கொண்டிருந்தார். பெரியவாளும் இவர்களிடத்தில் மத இன பேதமின்றி அவர்கள் அறிவு, ஆற்றலுக்கு
மிக்க மதிப்பளித்து வந்தார் . பக்தி என்பது ஜாதி, மத இனம் கடந்தது என்பதற்கு இதுவும் ஓர் சான்று!
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கரா
__._,_.___


 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 

http://perlbal.hi-pi.com/blog-images/571750/gd/130789420493/Stor-Kram.gif
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ''
"Keep away from people who try to belittle your ambitions. Small people always do that, but the really great ones make you feel that you too, can become great."- Mark Twain.
யாம் பெற்ற இன்பம் 
பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator