Monday 10 November 2014

மஞ்சள் காமாலை- A(HEPATITIS-A) அவசியம் அறிய வேண்டியவை!

மஞ்சள் காமாலை-

A(HEPATITIS-A) 

அவசியம் அறிய வேண்டியவை!

மஞ்சள்காமாலை என்பது பொதுவாக அனைவரும் கேள்விப்பட்ட வியாதிதான். 

ஆனால் அது ஏன் வருகிறது வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பவை பற்றித் தேவையான தெளிவு மிக அவசியம். 

அவற்றைப் பற்றியே நாம் இப்போது சுருக்கமாகப் பார்க்கப் போகிறோம்.

1.மஞ்சள்காமாலை ஹெபடைட்டிஸ் என்றால் என்ன?
மஞ்சள் காமாலை என்பது கல்லீரலில்(LIVER) கிருமித்தொற்று ஏற்படுவதைக் குறிக்கிறது.

2.பொதுவாக மஞ்சள் காமாலை எதனால் ஏற்படுகிறது? 
பொதுவாக A,B,C என்று வகைப்படுத்தப்பட்டுள்ள வைரஸ் கிருமி( தீ நுண்மம்) களால் ஏற்படுகிறது.

3.மஞ்சள்காமாலை ஏ (HEPATITIS-A) மஞ்சள்காமாலை ஏ பற்றி பார்ப்போம்

• இது குழந்தைகளை அதிகம் தாக்குகிறது. 

• மனித மலம் சிறு அளவில் விரல்களில், நக இடைவெளியில் இருக்கும். இது உணவில், நீரில் கலக்கிறது. 

• அந்த நீர் மற்றும் உணவை நாம் சாப்பிடும்போது அது நம்மைத் தொற்றிக்கொள்கிறது. 

• சமையல்காரர்கள் மற்றும் உணவுக்கூடங்களில் இருப்போர் மற்றும் அனைவரும் மலம் கழித்த பின் சோப்புப்போட்டுக் கை கழுவுதல், கையுறை அணிந்து சமைத்தல், குடிக்கும் தண்ணீரில் கை படாமல் இருப்பது ஆகியவை அவசியம். 

• ஆகையாலேயே வெளியில் சாப்பிடும்போது நல்ல சுகாதாரமான உணவகங்களில் சாப்பிட வேண்டும். 

• இந்தக் கிருமி தொற்றிய 15-50 நாட்களில் நோய்க்குறிகள் தோன்றும்.

• மிதமான காய்ச்சல், அதிக சோர்வு, உமட்டல், மேல் வயிற்று வலி, வாந்தி ஆகியவை இருக்கும். 

• குழந்தைகள் படிக்காமல் சோர்வாகப் படுத்திருந்தாலும், குறைந்த மிதமான காய்ச்சல் தொடர்ந்து இருந்தாலும் சாதாரண வைரஸ் காய்ச்சல் என்று மிதமாக இருத்தல் தவறு.

• அதன் பின் சிறு நீர் மஞ்சள், அடர் மஞ்சள் நிறத்தில் போகும். கண்ணின் வெண்ணிறப்பகுதி, உடலின் தோல் பகுதிகளில் மஞ்சள் நிறம் காணப்படும். 

இந்த மஞ்சள் நிறம் ஒரு வாரத்தில் இருந்து நான்கு வாரங்கள் வரை இருக்கும்.

• A வைரஸினால் வரும் மஞ்சள் காமாலை தன்னாலேயே சரியாகிவிடும் தன்மை உடையது. 

• ஆயினும் சில குழந்தைகள் வாந்தி, தலைவலி,சாப்பாடு செரிக்காமல் இருத்தல், பசியின்மை ஆகியவற்றால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவர். 

• ஆதலால் அவர்களுக்கு குளுக்கோஸ் ஏற்றுதல் அவசியமாக இருக்கும். 

• காய்ச்சலுக்கு பாரசிடமால் போன்ற சாதாரண மாத்திரையும், வாந்திக்கு மருந்துகளும் எடுத்துக்கொள்வது அவசியம். 

• இந்நோய் ஒருமுறை தாக்கினால் வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உருவாக்கி விடுவதால் இது மறுபடியும் வருவது இல்லை.

• இதற்கு இரத்தப் பரிசோதனை செய்து கல்லீரலின் செயல்பாடு எப்படி உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். 

• இரத்தப்பரிசோதனை மூலம் A வகை மஞ்சள்காமாலைதானா அல்லது B, C போன்ற வேறு வகை மஞ்சள்காமாலையா என்பதனையும் அறிவது அவசியம்.

• வயிறு ஸ்கேன் செய்து கல்லீரல், பித்தப்பை ஆகியவற்றின் வீக்கம், நோய் எவ்வளவு தூரம் அவற்றை பாதித்துள்ளது என்பதனையும் அறிவது அவசியம்.

• இந்நோய் வராமல் தடுப்பதற்கு தடுப்பூசி உள்ளது. 

• இத்தடுப்பூசியானது 20 வருடத்துக்கும் மேல் இந்த ஏ வகை மஞ்சள் காமாலை வராமல் தடுக்கும்.

மஞ்சள்காமாலை உருவாகக் காரணம் மற்றும் தீர்வு 
என்னவென்று பார்ப்போம் 

பொதுவாக மஞ்சள் காமாலை நோய் பித்தம் அதிகரிப்பதால் வருகிறது.

பித்தமானது பல காரணங்களால் மிகுதியாகி ரத்தத்தில் கலந்து விடுவதால் மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகிறது.

உடல் உஷ்ணத்தாலும், இரவில் கண்விழித்து வேலை பார்ப்பதாலும், தூக்கமின்மையாலும், வயிற்றில் புளிப்புத்தன்மை ஏற்பட்டு சளி பிடித்து, ரத்தம் சூடேறி, காமாலைக் கிருமிகள் உண்டாகி, மஞ்சள் காமாலை நோயைத் தோற்றுவிக்கிறது.

இந்த பித்தமானது நஞ்சு போல் உடலில் எங்கும் வியாபிக்கக்கூடிய தன்மையுள்ளது. 

அதோடு மட்டுமல்லாமல், நவீன உலகத்தில் உணவுப் பழக்கங்களாலும், மிதமிஞ்சிய உணவுகளாலும், பாமாயில் கலக்கப்பட்ட எண்ணெய்களாலும் ஒருதடவை சமைத்த உணவை குளிர்சாதன பெட்டியில் வைத்து தேவைப்படும் போது மாறி மாறி சூடுபண்ணி பல நாட்கள் சாப்பிடுவதாலும், உண்ட உணவானது உடலில் புளிப்புத் தன்மையை உண்டாக்கி செரியாமை ஏற்பட்டு குடலின் பித்தமானது சளியோடு கலந்து ரத்தத்தில் சேர்ந்துவிடுகிறது. 

இப்படிப்பட்ட உணவுப் பழக்கங்களால், மஞ்சள் காமாலை நோய்த் தொற்று ஏற்படுகிறது.

மேலும், தலையில் எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கத்தை மறந்ததாலும் நரம்புகள் சூடாகி பித்தம் அதிகரித்து மஞ்சள் காமாலை நோய் உண்டாகிறது. 

பித்தமானது அலர்ஜியாகும் போது காமாலை நோய்க்கிருமி தோன்றி, முதலில் கல்லீரலைப் பாதித்து, கண்களில் மஞ்சள் நிறம் தோற்றுவிக்கிறது. சிறுநீர் மஞ்சளாக வெளியேறுகிறது.

மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிறுநீர், மலம் கழித்த இடத்தை மற்றவர்கள் பயன்படுத்தினால் அவர்களையும் நோய்த் தொற்ற வாய்ப்புண்டு. 

ஆகையால், பாடசாலை முதல், கல்லூரி வரை ஏதேனும் ஒரு மாணவருக்கு மஞ்சள்காமாலை நோய் இருந்தால் அது மற்றவர்களுக்கு எளிதில் பரவி விடுகிறது.

பொதுவாக இப்படிப்பட்ட பித்த அலர்ஜியால் உண்டாகும் மஞ்சள் காமாலைக்கு நாட்டு மருத்துவத்தில் கீழாநெல்லி என்ற மூலிகையை அதிகம் பயன்படுத்துவார்கள்.

மஞ்சள்காமாலைக்கு நாட்டு மருந்து 

கீழாநெல்லி - ஒரு கைப்பிடி

சீரகம் - 1 ஸ்பூன்

இரண்டையும் நீர்விட்டு அரைத்து கஷாயம் செய்து காலை, மாலை இருவேளையும் கொடுத்து வந்தால் பித்தம் தணிந்து, காமாலை நோய்த்தொற்று கிருமிகள் அழியும்.

கீழாநெல்லி, சுக்கு, மிளகு, சீரகம், சோம்பு, மஞ்சள் இவற்றை சம அளவு எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து, சர்க்கரை கலந்து 4 மணி நேரத்திற்கு ஒரு முறை அருந்தி வந்தால் மெல்ல மெல்ல முழுமையாக குணமடையும்.

கீழாநெல்லி, சீரகம், பூவரச பழுத்த இலை, கரிசலாங்கண்ணி (வயல் வெளியில் வெள்ளைப்பூக்கள் நிறைந்து காதில் அணியும் கம்மல் போன்று இருக்கும்) இவை அனைத்தும் 3 கிராம் அளவிற்கு எடுத்துக் கசாயம் செய்து காலை, மாலை வேளைகளில் சாப்பிடும் முன் அருந்தினால் காமாலை நோய் குணமாகும்.

காய்ச்சல், குளிர்சுரம் வந்தால், பித்தத்தை அதிகப்படுத்தும் உணவுகளை தவிர்ப்பது நல்லது.

பித்தத்தைத் தணிக்க, காய்கள், கீரைகள், பழவகைகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.

நாள்பட்ட உணவுகளை சூடாக்கி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

மழைக்காலங்களில் நீரை கொதிக்க வைத்து ஆறிய பின் அருந்தவேண்டும்.

புளி, உப்பு, காரம் குறைத்து சாப்பிட வேண்டும். எண்ணெய்ப் பலகாரங்களையும், அதிக எண்ணெய் சம்பந்தப்பட்ட பொருள்களையும் தவிர்க்க வேண்டும்.

நன்கு ஓய்வு எடுக்க வேண்டும்.


 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் 
பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator