ரயில் டிக்கெட் முன்பதிவு:
விரும்பிய இருக்கையை தேர்வு செய்ய இணையதளத்தில் புதிய வசதி
இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போதே, விரும்பிய இருக்கையையும் தேர்வு செய்து கொள்ளும் புதிய வசதி விரைவில் வரவிருப்பதாக மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கௌடா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ''ரயில்வே இணைய தளம் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே தங்களுக்கு விரும்பிய இருக்கை, படுக்கை வசதி, ரயில் பெட்டி ஆகியவற்றை பயணிகள் தேர்ந்தெடுக்கலாம்.
அதே போல, பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே தங்களுக்கு தேவையான உணவு வகைகளையும் தேர்ந்தெடுத்து குறிப்பிட வேண்டும்.
குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் அவர்கள் தேர்வு செய்த உணவு வழங்கப்படும்போது அதற்கான பணத்தை வழங்கலாம்'' என்று கூறியுள்ளார்.
இந்த அறிவிப்புகளை நடைமுறைப்படுத்துவதற்காக ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் உள்ள மென்பொருளில் புதிய அறிவிப்புகள் அடங்கிய மென்பொருளை இணைத்து 'அப்கிரேட்' செய்யும் பணி நடந்து வருகிறது.
'இதன்மூலம் நிமிடத்துக்கு 2 ஆயிரம் முதல் 7200 டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்யப்படும்.
ரூ.100 கோடி செலவில் நடைபெறும் இப்பணிகள் விரைவில் முடிக்கப்படும்.
ஆகஸ்டு 15-ந்தேதி முதல் இவை அனைத்தும் நடைமுறைக்கு வரும் என்று ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.










( hari krishnamurthy K. HARIHARAN)"think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''





No comments:
Post a Comment