Friday 24 January 2014

ஆண்டவன் -உணருதல் -விரதம் -தானங்கள் ஒரு சிறிய சிந்தனை

ஆண்டவன் -உணருதல் -விரதம் -தானங்கள் ஒரு சிறிய சிந்தனை கிறுக்கல் பதிவு :-

நாம் நம்மை உணராவிட்டால், அந்த ஆண்டவனே ஊணமாகிவிடுகிறான். அழகு, அறிவு, திறமை, நிறம், பொருளாதாரம், ஆரோக்கியம் … ..(etc..) என்று பல ஏற்றத்தாழ்வுகளை கொடுத்தவன், உணர்ச்சியை மட்டும் ஒரெ மாதிரி படைத்தது ஏன்? என் உணர்ச்சியுடன் விளையாடும் அந்தஆண்டவன் பொல்லாதவன் தான். இது ஒரு மூடனின் கருத்து.

ஆண்டவனோ மனோ - வாக்கு காயத்திற்கு அப்பாற்பட்டவன். அதாவது மனம் செயல்பட்டால் நம்மை விட்டு போய்விடுகின்றான் மாயாவி . பேச்சு இருந்தால் வெளியே தான் போகின்றது.உடலுக்கு அப்பால் ஒரு ஆலயம் வெளியில் தான் போகும்.

மனம் இருந்தால் , சொல் இருந்தால் , உடற்பற்று இருந்தால் அவனைஉணரமுடியாது அவனை எப்படி மனதால் உணர , எண்ண முடியும்? எப்படி சொல்லி விளக்கி வைக்க முடியும். உடலால் உணர முடியுமா ? பார்க்க முடியுமா ? தத்துவ மேதைகள் பலர் வினா எழுப்புவர். கடவுளை காண முடியுமா ?? உணர்த்து,
மனித உருவில் காணமுடியும். இந்த சொல்லிலே கடவுளை காண முடியும். 

மனம் , சொல் ,உடல் பற்றுயற்ற நிலையில் வெளியே அல்ல , நம் உள்ளே இறைவனை உணரலாம் , பேசி மகிழலாம். சுருக்க சொன்னால் இறைவன் வெளியே இல்லை, உன்னுள் தான் கோவில் கொண்டுள்ளான் என்பதே பொருள் அதுவே சூட்சமம்.

'எப்போதுமே 'எல்லாம் அவன் செயல்!' என்பதை நினைவில் நிறுத்துங்கள். நல்ல காரியங்களைச் செய்யுங்கள்; அப்படியான செயலில் ஈடுபடுபவர்களை மனதாரப் பாராட்டுங்கள். குடும்பத்தாரிடமும் சுற்றத்தாருடனும் அன்பையும் பாசத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள். நம்மைப்போலவே எல்லோரும் வாழ பிரார்த்தியுங்கள்!'' 

ஒன்றென்று இரு,அது உண்டென்று இரு. மனமே உனக்கு உபதேசம் இதுவே என்று சொன்னார் பட்டினத்தார் 

வழிபாட்டு முறைகளில் மவுன விரதமும் ஒன்று.'மோனம் என்பது ஞான வரம்பு'

புராண- இதிகாசங்கள் அனைத்திலும் வாழ்வியல் தத்துவம் ஒளிந்திருக்கும் உயிர்ச் சக்தியான பிராண வாயுவைச் சமன்படுத்தும் மூச்சுப் பயிற்சியானது ஆரோக்கியத்துக்கும் ஆயுள் நீட்டிப்புக்குமான பயிற்சி முறை! தேவையற்ற பேச்சால், கரையும் பிராண சக்தியை உள்ளிருத்திப் பயன் தருவதே மவுன விரதம்!

விரதம் கடைப்பிடிக்கிற நாட்களில், உடலில் தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்பட்டு சக்தியாக மாற்றப்படுகிறது

கொழுப்பு, ஹார்ட் அட்டாக், வாயுக் கோளாறு, நீரிழிவு போன்ற பல பிணிகளுக்கான வாசற்கதவைத் திறந்து வைப்பதே அசைவ உணவுகள்தான். எனவே அசைவம் தவிர்ப்பது நல்லது. 

சைவ உணவு சாத்வீகமான உணவு. 'சாத்வீகமான உணவே சாந்தமான மனநிலைக்கு உத்தரவாதம்'

அடுத்தது, மனக்கட்டுப்பாடு! தியானம், யோகா, பிராணாயாமம் ஆகிய எல்லாமே அலைபாயும் மனதை, ஒருபுள்ளியில் நிறுத்துவதுதான்! எந்தவித மன சஞ்சலமும் இல்லாத அந்த நிலைதான் உடலுக்கும் மனதுக்குமான ஓய்வு!

தியானப் பயிற்சியைத் தொடர்ந்து செய்தால், மன அழுத்தம் மறையும்; மனச்சோர்வு விலகும்; பதட்டம் காணாமல் போகும்; கோபதாபங்கள் குறையும்; நல்ல சிந்தனைகள் பெருகும். எவர் மனமும் புண்படாமல் பேசுகிற பக்குவம் வந்துவிடும். காரியத்தில் வீரியம் பொருந்திக் கொள்ளும்.

"செத்தாரைப் போலத் திரி " இப்படியும் ஒரு ஞானி சொல்லியிருகின்றார். இப்போது நமக்கு விடை கிடைத்து விட்டது. என்ன சாமி பிதற்றுகிறீர்கள் என்று நினைகின்றீகளா !!! பரவா இல்லை. மனம் திறந்து மௌனமாகி ஜடம் போலாகவேண்டும். மனமிறந்து மௌனமாகி செத்தாரைப் போலத் ஆனால் இறைவனை நமது உடலாகிய ஆலயத்தில் உள்ளே காணலாம்.

தன் வயிறு, தன் குடும்பம் என்று சுயநலமாக வாழ்வது என்பது மிகப்பெரிய சோகம்.

அன்னதானம் வழங்கும்போது, ஏழைக்கு வயிறும் தானம் அளித்தவருக்கு மனதும் ஒருசேர நிரம்புகிறது.

'எப்போதுமே 'எல்லாம் அவன் செயல்!' என்பதை நினைவில் நிறுத்துங்கள். நல்ல காரியங்களைச் செய்யுங்கள்; அப்படியான செயலில் ஈடுபடுபவர்களை மனதாரப் பாராட்டுங்கள். குடும்பத்தாரிடமும் சுற்றத்தாருடனும் அன்பையும் பாசத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள். நம்மைப்போலவே எல்லோரும் வாழ பிரார்த்தியுங்கள்!'' 

தானத்தினால் ஏற்ப்படும் பலன்கள் என்ன என்ன?

அன்னதானம்- வறுமையும் கடன்களும் நீங்குகின்றன.
பூமிதானம்- பிரம்ம லோகத்தையும் ஈஸ்வர தரிசனத்தையும் அளிக்கும்.
கோதானம்- ரிஷிக்கடன், தேவகடன், பித்ருக்கடன் ஆகியவற்றைப் போக்குவிக்கும்.
வஸ்திரதானம்- ஆயுளை விருத்தி செய்யும்.
தீப தானம்- கண்பார்வையை தீர்க்கமாக்கும். பித்ருக்களை இருட்டிலிருந்து வெளிச்சத்துக்குக் கொண்டு வரும்.
தேன் தானம்- புத்திர பாக்கியம் உண்டாக்கும்.
அரிசி தானம்- பாவங்களைப் போக்கும்.
தயிர் தானம்- இந்திரிய விருத்தி உண்டாக்கும்.
நெய் தானம்- நோய்களை நிவர்த்தி செய்யும்.
நெல்லிக்கனி தானம்- ஞானம் உண்டாக்கும்.
பால் தானம்- துக்கம் நீக்கும்.
தேங்காய் தானம்- பூரணநலன் உண்டாக்கும். நினைத்த காரியத்தில் வெற்றியளிக்கும்.
தங்க தானம்- குடும்ப தோஷம் நிவர்த்தி செய்யும்.
வெள்ளி தானம்- மனக்கவலை நீக்கும்.
பழங்கள் தானம்- புத்தியும் சித்தியும் தரும்.
இப்படி ஒவ்வொரு பொருளுக்கும் பலன்கள் உண்டு.

தனக்குள் சோதித்து தன்னைக் கண்டவனே காட்சியுற்றவன். நீசர்களிடத்திலும் கருணை இருந்தால் ஈஸ்வரபற்று உண்டாகும். வாழ்நாள் வீழ் நாளாகாமல் உன்னை யாரென்று நீயே சிந்தனை செய்து அறிவாயாக. சாந்தமே தெய்வீக காந்தம் (இந்து தர்மசாஸ்திரம்)


                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''

follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator