http://www.facebook.com/pages/Khariharan/115524648579725
power by BLOGSPOT-PING
நம் வீட்டில் திருமணம் ஏதாவது பிரச்சினை காரணமாக தடைபட்டுகொண்டே செல்கிறதே இதற்கு தீர்வு ஏதும் உண்டா என்று கேட்கும்நமக்கு கலியுக்கடவுளான முருகனின் திருப்புகழில் ஒரு பகுதியைநமக்கு எடுத்துத் தருகிறார் நம் கிருபானந்த வாரியார் சுவாமிகள்
.வெறும் வார்த்தையாக இல்லாமல் உறுதியாகவும் நிச்சயமாகவும்கூறுகிறார். 1 மண்டலம் அதாவது 48 நாட்களுக்குள் திருமணம் நடக்கும் இதற்கு அருணகிரி நாதர் முருகனைப் பற்றிப் பாடி அருளியமந்திர திருப்புகழை திருமணம் ஆகாதவர்கள் தினமும் காலை அல்லதுமாலை வேளையில் ஒரு நாளைக்கு 6 முறை வீதம் , 48 நாட்கள்தொடர்ந்து பாராயணம் செய்தால் கண்டிப்பாக எந்த விதமான திருமணதோசங்கள் இருந்தாலும் அத்தனையையும் நீக்கி 48 நாள் முடிவதற்குள்நல்ல பதில் கிடைக்கும்.
திருமணம் ஆனவர்கள் இந்தத்திருப்புகழை படித்தால் குடும்பத்தில்விட்டு சென்ற உறவுகள் சேரும் என்பதும் நிதர்சனமான உண்மை.
விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
மிகவானி லிந்து வெயில்காய
மிதவாடை வந்து தழல்போல வொன்ற
வினைமாதர் தந்தம் வசைகூற
குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
கொடிதான துன்ப மயில் தீர
குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
குறைதீர வந்து குறுகாயோ
மறிமா னுகந்த இறையோன் மகிழ்ந்த
வழிபாடு தந்த மதியாளா
மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
வடிவே லெறிந்த அதிதீரா
அறிவா லறிந்த னிருதா ளிறைஞ்சு
மடியா ரிடைஞ்சல் களைவோனே
அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து
அலைவா யுகந்த பெருமாளே.
No comments:
Post a Comment