Saturday 13 September 2014

இராஜேந்திரன் பற்றிய '25' ‪#‎celebrating‬ 1000th year of rajendra chola empire


இராஜேந்திரன் பற்றிய '25' #celebrating 1000th year of rajendra chola empire     கிரேக்க மன்னன் அலெக்சாண்டர்,பிரான்சின் நெப்போலியன்,கலிங்க மன்னர் அசோகர்,முகலாய மன்னர் அக்பர் இவர்களை விட போர் திறன்,அரசியல்,சாணக்கியம்,கலை,இலக்கியம் என அனைத்திலும் சிறந்து விளங்கி வரலாற்றில் மறைந்த, வட இந்திய அரசால் வரலாற்றில் மறைக்கப்படும் ஒரு ஒப்பற்ற தேசங்களை  ஆண்ட  மன்னன்,இங்கு இருக்கும் ஒவ்வொருவனும் மார் தட்டிக் சொல்லிகொள்ள வேண்டிய ஒரு தமிழன்,இந்த  'இராஜேந்திர சோழன்'.    1.இவ்வருடத்திலிருந்து சரியாக  1000வருடத்திற்கு முன்பு உலகின் கால் பகுதிகளை தன் காலடியில் வைத்திருந்த, மாமன்னன் இராஜேந்திர சோழன் ,சோழப் பேரரசின் தனி பெரும் மன்னனாக முடி சூட்ட பட்டான்.    2.இவனது போர் படையில் 12 லட்சம் வீரர்களில் இருந்து 14 லட்சம் வீரர்கள்,லட்சத்திற்கும் மேற்பட்ட குதிரைகள்,50,000 க்கும் மேற்பட்ட யானைகள் இருந்துள்ளன.இப்படை வீரர்களின் எண்ணிக்கை தற்போதுள்ள இந்திய ராணுவத்தின் எண்ணிக்கைக்கும்,அமெரிக்க ராணுவதின் எண்ணிக்கைக்கு இணையானது.கிரேக்க மன்னன் அலெக்சாண்டர்  படையில் இருந்ததும் 1 லட்சத்துக்கும் குறைவானவர்களே.    3.தரை வழியாக,தற்போதுள்ள கேரளம்,ஆந்திரா,ஒரிசா,பீகார்,மேற்கு வங்கம,தெற்கு கர்நாடகம்,வங்க தேசம் ஆகிய பெயர்களை கொண்ட பகுதிகளையும்,  கடல் வழியாக, இன்றைய இந்தோனேசியா,மலேசியா,சிங்கப்பூர்,தாய் லாந்து,வியட்நாம்,கம்போடியா,ஜாவா,மியான்மார்,இலங்கை,நிக்கோபார் ,மாலைதீவுகள்,லட்சத்தீவுகள் ஆகிய பகுதிகளையும் காலடியில் வைத்து இருந்தான்.சற்று இவரின் கடார படையெடுப்பின்  கப்பல் படையை கற்பனை செய்து பாருங்கள் , எத்தனை எத்தனை ஆயிரம் மைல்கள் ,எத்தனை கப்பல்கள் ,எவ்வளவு மனித முயற்சி தேவை பட்டு இருக்கும் , மனித இயந்திரங்கள், பாய் மரக் கப்பல்கெளை கொண்டு இத்தனை நாடுகளை வென்ற உலகின் முதற் பெரும் மன்னனாவான்.    4.இராஜேந்திரன் தனி பெரும் மன்னாக முடி சூட்டி கொள்ளும் பொழுது அவனுக்கு வயது 50ஆக இருக்கும் என கருதப்படுகிறது.கப்பற் படைக்கு தலைமை ஏந்தி கடாரம்(இந்தோனேசியா) செல்லும் பொழுது இவனின் வயது 61.அறுபது வயதிலும் இளைஞனுக்கு உரிய மனித நிலையில் இருந்துள்ளார்.    5.கங்கை படையெடுப்பின் போது,கங்கை ஆற்றில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் மறு முனைக்கு எப்படி செல்வது என்று புரியாமல் இருந்த போது,இவனது படையின் நூற்றுக்கணக்கான யானைகளை வரிசைப்படுத்தி, லட்ச கணக்கான வீரர்களை மறுமுனைக்கு கொண்டு சென்றனர்.    6.கங்கை படையெடுப்பில் வென்ற பிறகு,தோற்ற மன்னர்களின் தலையில் கங்கை நீர் குடங்களை வைத்து சோழ நாடு முடிய அவர்கள் நடந்தே கொண்டுவரப்பட்டனர்.இப்படையெடுப்பின் போது வங்கத்தை ஆண்ட புகழ் மிக்க  மன்னன் 'மகிபாலனை' பெரும் போரிட்டு வென்ற பெருமைக்குரியது இவனின் படை.    7.கங்கையில கொண்ட புனித நீரினை கொண்டு தலை நகரான சோழபுரத்தை  உருவாக்கியதால் அது 'கங்கை கொண்ட சோழபுரம் ' என்று அழைக்கப்பட்டது.பின்னாளில் அதுவே, அதிக ஆண்டுகள் (சுமார் 240 ஆண்டுகள் ) ஆண்ட சோழர்களின் தலை நகரானது.    8.கங்கை படையெடுப்பின் சந்தர்பத்தை பயன்படுத்தி பாண்டிய மன்னன் ஒரு பெரும் படையினை திரட்டி கொண்டு சோழ தேசம் நோக்கி வருகிறான்.இதனை அறிந்து ராஜாதிராஜன் அவர்களுடன் போர் புரிய ஒரு படையுடன் செல்கிறான்.சோழன் வருவதை கேள்வி பட்ட பாண்டியன் தனது மீன் கொடியை சுருட்டி கொண்டு ஓடினான்.இதுவே இந்நாளில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள  'மீன்சுருட்டி' என்று அழைக்கப்படுகிறது.இது ஒரு செவிவழி செய்தியாகும்.    9.முகமது கஜினி அதிஉத்வேகத்துடன் வட இந்தியா நோக்கி படையெடுத்த கால கட்டம் அது.அப்போரில் வட இந்திய மன்னர்கள் ஒரு சேர நின்று கஜினியை தோற்கடித்தனர்.இப் போரில் ராஜேந்திர சோழன் ஒரு பெரும் படையை வட இந்திய மன்னர்களுக்கு நட்புரீதியாக அனுப்பி வைத்தான்.தோற்ற பிறகு முகமது கஜினி சென்ற இடம் வரலாற்று புகழ் பெற்ற 'சோமநாதபுரம்'.    10.பெரும் மனித உழைப்பை கொண்டு,நீர் பாசனத்திற்காக இந்த நாட்டிலே மிகப்பெரிய ஏரியை,25கிமீ நீளமும் 6.5 கிமீ அகலமும் கொண்ட ஏரியை உருவாக்கினான்.இதனை கங்கை கொண்டு புனித மாக்கப்பட்டதால் இது 'சோழகங்கம்'எனப்பட்டது.இது இப்பொது மண்ணால் மூடப்பட்டுள்ளது , 'பொன்னேரி' எனப்படுகிறது.    11.ராஜேந்திர சோழன் கட்டிய கோவில்களின் எண்ணிக்கை '32'.இதில் கங்கை கொண்ட சோழ புறம், ஈழம்,ஆந்திரா,கர்னாடக ஆகிய இடங்களில் கட்டிய கோவில்களும்  அடங்கும்.    12.வாயுக் கடவுளுக்காக ஆந்திராவில் கட்டப்பட்டுள்ள புகழ் வாய்ந்த  'காளஹஸ்தி' திருக்கோயில் இவன் ஆட்சியில் தான் வளர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு, முழுவடிவம் பெற்றது.    13.பொன்னியின் செல்வன் படிச்சவங்க எல்லாம் வந்தியத்தேவன ஒரு கதா பாத்திரமா நினைச்சி வாழ்ந்துஇருப்பீங்க.ஆம்,அவன்தான் இவனுடைய ஆட்சியிலும் முதன்மை தளபதியாக விளங்கியவன்  தனது அத்தை கணவன்  'வல்லவராயன் வந்தியத்தேவன்'.    14.தனது மகன் ராஜாதிராஜனுக்கு இளம் வயதிலே முடி சூட்டப்பட்டு,தந்தையும்மகனும் '26' ஆண்டுகள் சேர்த்து ஆட்சி புரிந்தனர்.இவனது ஆட்சியில் பின்னாளில் ராஜாதிராஜனே பல போர்களுக்கு தலைமை புரிந்தான்.    15.வட இந்தியா,இலங்கை, பாரசீகம்,அரேபியம்,சீனா,ரோம்,கிழக்கிந்திய தீவுகள் ஆகிய நாடுகளுடன் வணிக தொடர்பு வைத்து இருந்தான்.    16.கடார படை யெடுப்பினை பற்றி நிலவும்  பல கருத்துகளில் ஒன்றாக, அங்கு வாழ்ந்து வணிகத்தில் ஈடுபட்டுவந்த தமிழர்களுக்கு விசய பேரரசால் வந்த இன்னல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும்,தனது செல்வாக்கினை,தனது படை வலிமையை அங்கு காட்டும் பொருட்டு ,தனது படையெடுப்பினை நிகழ்த்தி வெற்றி கொண்டான்.இவன் வெற்றிக்கு பரிசளிக்கும் விதமாக கம்போடிய மன்னன் தமிழன் சூரிய வர்மன் ராஜேந்திர சோழனின் தாய் பெயரில் கம்போடியாவில் கோவிலை ஏற்படுத்தினான்.    17.ராஜேந்திரன் தன்னை சுற்றி அனைத்து போர் திறன்களும் அறிந்த கடும் பயிற்சிக்கு உட்படுத்தப்பட்ட  ஒர் போர் குழுவினரை  தன்னுடைய நலனுக்கும்,நாட்டின் நலனுக்கும் வைத்து இருந்தான்.எப்படி பிரபாகரனை சுற்றி ஒரு 'கரும்புலி' படை இருந்ததோ அது போல.இவர்கள் 'வேலைகாரப் படை' எனப்பட்டனர்.    18.கங்கை கொண்ட சோழ புரத்தில் இருந்த இவனுடைய அரண்மனை மாளிகையின் பரப்பளவு 1.6 கிமீ.    19.மேலைசாளுக்கியர்களிடம் நிலவி வந்த கொடும்பகையினாளும், கீழை சாளுக்கியர்  அவர்கள் வசம் செல்லாமல் இருப்பதற்கும் ,சாணக்கிய தனமாக கீழை சாளுக்கியரை தன் வசப்படுத்த தனது மகள் அங்கம்மாளை தனது தமக்கை மகன் கீழை சாளுக்கிய இளவரசன் ராஜ ராஜ அரியனிற்கு திருமணம் செய்து வைத்து ,பின்னாளில் அவனையே மன்னனாக்கி,மேலை சாளுக்கியருக்கு எதிராக மூன்று முறை பெரும்களம் கண்டு பெரும் வெற்றி கண்டான்.    20.அந்தமான் தீவில் மலை உச்சியில்  ராஜேந்திரன் பற்றிய கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை ஆராய்ந்தால் மேலும் தகவல்கள் கிடைக்கும்.    21.ராஜேந்திர சோழனின் கப்பற்படை திறனை பாராட்டி கவுரவிக்கும் பொருட்டு இந்திய கப்பற்படை பயிற்சி கப்பலுக்கு  இந்திய அரசு TS Rajendra என்று பெயர் சூட்டியுள்ளது.    22.என்னதான் இது பொற்கால ஆட்சி என்று சொன்னாலும்  குறைகள் இல்லாமல் இல்லை.இவனது ஆட்சியிலும் அடிமை முறை,தேவதாசி முறைகள் பின்பற்றபட்டது.சாதி கட்டமைப்புகள் இருந்தன,ஆனால் 'தீண்டாமை' இல்லை,பறையர்களுக்கும் நிலங்கள் சரியாக பங்கிட்டு கொடுக்கபட்டது.    23.கிபி 910,முதலாம் பராந்தக சோழன் பெரும் படையும் பாண்டிய மன்னன் இராச சிம்மனின் பெரும் படையும் 'வெள்ளூர்' எனும் இடத்தில் பெரும் போர் புரிந்தனர்.போர் என்றால் அப்படி ஒரு போர்,போரின் முடிவில் சோழன் பெரும்  வெற்றி கொள்கின்றான்.பாண்டிய நாட்டை முடி சூட்டி கொள்ள வந்த சோழனுக்கு பெரும் அதிர்ச்சி,பாண்டியன் இராச சிம்மன் இந்திர ஆரத்தையும்,மணி முடியையும் போரில் உதவிய சிங்களமன்னனிடம் கொடுத்துவிட்டு சேர நாடுக்கு  தப்பி ஓடி விட்டான்.கடுங்கோபமடைந்த பாராந்தக சோழன் ஒரு பெரும் படயினை இலங்கைக்கு அனுப்பி இலங்கையை வென்றான்.ஆனால் இந்திர ஆரத்தையும்,மணி முடியையும் கண்டறிய முடியவில்லை.ஆண்டுகள் கழிந்தன,மன்னர்கள் பலர் வந்து சென்றனர்,ஏன் ராஜராஜ சோழனால் கூட கைப்பற்ற முடியவில்லை.சரியாக 107 வருடம் கழித்து இராஜேந்திர சோழன் ஒரு மிகப்பெரும் படையுடன் இலங்கைக்கு சென்று ,முழு இலங்கையையும் துவம்சம் செய்து இலங்கை மன்னன் 5ம் மஹிந்தனை வென்று இந்திர ஆரத்தையும்,மணி முடியையும் கைப்பற்றி, சோழ நாடு வந்த வேந்தன்,இந்த சோழன்.    24.இராஜேந்திர சோழனும் சைவ நெறியையே பின்பற்றினான்.தன்னுடைய ஆட்சியில் பிற சமயங்களுக்கும் அதே  முக்கியத்துவம் கொடுத்து வந்தான்.கங்கை முடிய படை எடுத்து வென்றாலும் எந்த நேரத்திலும் தான் சார்ந்த சமயத்தையோ,மொழியையோ யார் மீதும் தினிக்கவில்லை.    25.இராஜேந்திரன் இறந்தவுடன்,அவனிடம் இருந்த தீராத அன்பினால் அவன் மனைவியுள் ஒருத்தியான வீரமாதேவியும் உடன் இறந்தால்.பின்னாளில் அந்த இடத்தில் நீர் பந்தலை அமைத்த அவளின் சகோதரன் சேதுராமன் மதுராந்தகன் அவ்வழியில் செல்வோர்க்கு நீரிணை கொடுத்து வந்தான்.    -அ.ராம்

இராஜேந்திரன் பற்றிய '25' ‪#‎celebrating‬ 1000th year of rajendra chola empire

கிரேக்க மன்னன் அலெக்சாண்டர்,பிரான்சின் நெப்போலியன்,கலிங்க மன்னர் அசோகர்,முகலாய மன்னர் அக்பர் இவர்களை விட போர் திறன்,அரசியல்,சாணக்கியம்,கலை,இலக்கியம் என அனைத்திலும் சிறந்து விளங்கி வரலாற்றில் மறைந்த, வட இந்திய அரசால் வரலாற்றில் மறைக்கப்படும் ஒரு ஒப்பற்ற தேசங்களை ஆண்ட மன்னன்,இங்கு இருக்கும் ஒவ்வொருவனும் மார் தட்டிக் சொல்லிகொள்ள வேண்டிய ஒரு தமிழன்,இந்த 'இராஜேந்திர சோழன்'.

1.இவ்வருடத்திலிருந்து சரியாக 1000வருடத்திற்கு முன்பு உலகின் கால் பகுதிகளை தன் காலடியில் வைத்திருந்த, மாமன்னன் இராஜேந்திர சோழன் ,சோழப் பேரரசின் தனி பெரும் மன்னனாக முடி சூட்ட பட்டான்.

2.இவனது போர் படையில் 12 லட்சம் வீரர்களில் இருந்து 14 லட்சம் வீரர்கள்,லட்சத்திற்கும் மேற்பட்ட குதிரைகள்,50,000 க்கும் மேற்பட்ட யானைகள் இருந்துள்ளன.இப்படை வீரர்களின் எண்ணிக்கை தற்போதுள்ள இந்திய ராணுவத்தின் எண்ணிக்கைக்கும்,அமெரிக்க ராணுவதின் எண்ணிக்கைக்கு இணையானது.கிரேக்க மன்னன் அலெக்சாண்டர் படையில் இருந்ததும் 1 லட்சத்துக்கும் குறைவானவர்களே.

3.தரை வழியாக,தற்போதுள்ள கேரளம்,ஆந்திரா,ஒரிசா,பீகார்,மேற்கு வங்கம,தெற்கு கர்நாடகம்,வங்க தேசம் ஆகிய பெயர்களை கொண்ட பகுதிகளையும்,
கடல் வழியாக, இன்றைய இந்தோனேசியா,மலேசியா,சிங்கப்பூர்,தாய் லாந்து,வியட்நாம்,கம்போடியா,ஜாவா,மியான்மார்,இலங்கை,நிக்கோபார் ,மாலைதீவுகள்,லட்சத்தீவுகள் ஆகிய பகுதிகளையும் காலடியில் வைத்து இருந்தான்.சற்று இவரின் கடார படையெடுப்பின் கப்பல் படையை கற்பனை செய்து பாருங்கள் , எத்தனை எத்தனை ஆயிரம் மைல்கள் ,எத்தனை கப்பல்கள் ,எவ்வளவு மனித முயற்சி தேவை பட்டு இருக்கும் , மனித இயந்திரங்கள், பாய் மரக் கப்பல்கெளை கொண்டு இத்தனை நாடுகளை வென்ற உலகின் முதற் பெரும் மன்னனாவான்.

4.இராஜேந்திரன் தனி பெரும் மன்னாக முடி சூட்டி கொள்ளும் பொழுது அவனுக்கு வயது 50ஆக இருக்கும் என கருதப்படுகிறது.கப்பற் படைக்கு தலைமை ஏந்தி கடாரம்(இந்தோனேசியா) செல்லும் பொழுது இவனின் வயது 61.அறுபது வயதிலும் இளைஞனுக்கு உரிய மனித நிலையில் இருந்துள்ளார்.

5.கங்கை படையெடுப்பின் போது,கங்கை ஆற்றில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் மறு முனைக்கு எப்படி செல்வது என்று புரியாமல் இருந்த போது,இவனது படையின் நூற்றுக்கணக்கான யானைகளை வரிசைப்படுத்தி, லட்ச கணக்கான வீரர்களை மறுமுனைக்கு கொண்டு சென்றனர்.

6.கங்கை படையெடுப்பில் வென்ற பிறகு,தோற்ற மன்னர்களின் தலையில் கங்கை நீர் குடங்களை வைத்து சோழ நாடு முடிய அவர்கள் நடந்தே கொண்டுவரப்பட்டனர்.இப்படையெடுப்பின் போது வங்கத்தை ஆண்ட புகழ் மிக்க மன்னன் 'மகிபாலனை' பெரும் போரிட்டு வென்ற பெருமைக்குரியது இவனின் படை.

7.கங்கையில கொண்ட புனித நீரினை கொண்டு தலை நகரான சோழபுரத்தை
உருவாக்கியதால் அது 'கங்கை கொண்ட சோழபுரம் ' என்று அழைக்கப்பட்டது.பின்னாளில் அதுவே, அதிக ஆண்டுகள் (சுமார் 240 ஆண்டுகள் ) ஆண்ட சோழர்களின் தலை நகரானது.

8.கங்கை படையெடுப்பின் சந்தர்பத்தை பயன்படுத்தி பாண்டிய மன்னன் ஒரு பெரும் படையினை திரட்டி கொண்டு சோழ தேசம் நோக்கி வருகிறான்.இதனை அறிந்து ராஜாதிராஜன் அவர்களுடன் போர் புரிய ஒரு படையுடன் செல்கிறான்.சோழன் வருவதை கேள்வி பட்ட பாண்டியன் தனது மீன் கொடியை சுருட்டி கொண்டு ஓடினான்.இதுவே இந்நாளில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள 'மீன்சுருட்டி' என்று அழைக்கப்படுகிறது.இது ஒரு செவிவழி செய்தியாகும்.

9.முகமது கஜினி அதிஉத்வேகத்துடன் வட இந்தியா நோக்கி படையெடுத்த கால கட்டம் அது.அப்போரில் வட இந்திய மன்னர்கள் ஒரு சேர நின்று கஜினியை தோற்கடித்தனர்.இப் போரில் ராஜேந்திர சோழன் ஒரு பெரும் படையை வட இந்திய மன்னர்களுக்கு நட்புரீதியாக அனுப்பி வைத்தான்.தோற்ற பிறகு முகமது கஜினி சென்ற இடம் வரலாற்று புகழ் பெற்ற 'சோமநாதபுரம்'.

10.பெரும் மனித உழைப்பை கொண்டு,நீர் பாசனத்திற்காக இந்த நாட்டிலே மிகப்பெரிய ஏரியை,25கிமீ நீளமும் 6.5 கிமீ அகலமும் கொண்ட ஏரியை உருவாக்கினான்.இதனை கங்கை கொண்டு புனித மாக்கப்பட்டதால் இது 'சோழகங்கம்'எனப்பட்டது.இது இப்பொது மண்ணால் மூடப்பட்டுள்ளது , 'பொன்னேரி' எனப்படுகிறது.

11.ராஜேந்திர சோழன் கட்டிய கோவில்களின் எண்ணிக்கை '32'.இதில் கங்கை கொண்ட சோழ புறம், ஈழம்,ஆந்திரா,கர்னாடக ஆகிய இடங்களில் கட்டிய கோவில்களும் அடங்கும்.

12.வாயுக் கடவுளுக்காக ஆந்திராவில் கட்டப்பட்டுள்ள புகழ் வாய்ந்த 'காளஹஸ்தி' திருக்கோயில் இவன் ஆட்சியில் தான் வளர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு, முழுவடிவம் பெற்றது.

13.பொன்னியின் செல்வன் படிச்சவங்க எல்லாம் வந்தியத்தேவன ஒரு கதா பாத்திரமா நினைச்சி வாழ்ந்துஇருப்பீங்க.ஆம்,அவன்தான் இவனுடைய ஆட்சியிலும் முதன்மை தளபதியாக விளங்கியவன் தனது அத்தை கணவன் 'வல்லவராயன் வந்தியத்தேவன்'.

14.தனது மகன் ராஜாதிராஜனுக்கு இளம் வயதிலே முடி சூட்டப்பட்டு,தந்தையும்மகனும் '26' ஆண்டுகள் சேர்த்து ஆட்சி புரிந்தனர்.இவனது ஆட்சியில் பின்னாளில் ராஜாதிராஜனே பல போர்களுக்கு தலைமை புரிந்தான்.

15.வட இந்தியா,இலங்கை, பாரசீகம்,அரேபியம்,சீனா,ரோம்,கிழக்கிந்திய தீவுகள் ஆகிய நாடுகளுடன் வணிக தொடர்பு வைத்து இருந்தான்.

16.கடார படை யெடுப்பினை பற்றி நிலவும் பல கருத்துகளில் ஒன்றாக, அங்கு வாழ்ந்து வணிகத்தில் ஈடுபட்டுவந்த தமிழர்களுக்கு விசய பேரரசால் வந்த இன்னல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும்,தனது செல்வாக்கினை,தனது படை வலிமையை அங்கு காட்டும் பொருட்டு ,தனது படையெடுப்பினை நிகழ்த்தி வெற்றி கொண்டான்.இவன் வெற்றிக்கு பரிசளிக்கும் விதமாக கம்போடிய மன்னன் தமிழன் சூரிய வர்மன் ராஜேந்திர சோழனின் தாய் பெயரில் கம்போடியாவில் கோவிலை ஏற்படுத்தினான்.

17.ராஜேந்திரன் தன்னை சுற்றி அனைத்து போர் திறன்களும் அறிந்த கடும் பயிற்சிக்கு உட்படுத்தப்பட்ட ஒர் போர் குழுவினரை தன்னுடைய நலனுக்கும்,நாட்டின் நலனுக்கும் வைத்து இருந்தான்.எப்படி பிரபாகரனை சுற்றி ஒரு 'கரும்புலி' படை இருந்ததோ அது போல.இவர்கள் 'வேலைகாரப் படை' எனப்பட்டனர்.

18.கங்கை கொண்ட சோழ புரத்தில் இருந்த இவனுடைய அரண்மனை மாளிகையின் பரப்பளவு 1.6 கிமீ.

19.மேலைசாளுக்கியர்களிடம் நிலவி வந்த கொடும்பகையினாளும், கீழை சாளுக்கியர் அவர்கள் வசம் செல்லாமல் இருப்பதற்கும் ,சாணக்கிய தனமாக கீழை சாளுக்கியரை தன் வசப்படுத்த தனது மகள் அங்கம்மாளை தனது தமக்கை மகன் கீழை சாளுக்கிய இளவரசன் ராஜ ராஜ அரியனிற்கு திருமணம் செய்து வைத்து ,பின்னாளில் அவனையே மன்னனாக்கி,மேலை சாளுக்கியருக்கு எதிராக மூன்று முறை பெரும்களம் கண்டு பெரும் வெற்றி கண்டான்.

20.அந்தமான் தீவில் மலை உச்சியில் ராஜேந்திரன் பற்றிய கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை ஆராய்ந்தால் மேலும் தகவல்கள் கிடைக்கும்.

21.ராஜேந்திர சோழனின் கப்பற்படை திறனை பாராட்டி கவுரவிக்கும் பொருட்டு இந்திய கப்பற்படை பயிற்சி கப்பலுக்கு இந்திய அரசு TS Rajendra என்று பெயர் சூட்டியுள்ளது.

22.என்னதான் இது பொற்கால ஆட்சி என்று சொன்னாலும் குறைகள் இல்லாமல் இல்லை.இவனது ஆட்சியிலும் அடிமை முறை,தேவதாசி முறைகள் பின்பற்றபட்டது.சாதி கட்டமைப்புகள் இருந்தன,ஆனால் 'தீண்டாமை' இல்லை,பறையர்களுக்கும் நிலங்கள் சரியாக பங்கிட்டு கொடுக்கபட்டது.

23.கிபி 910,முதலாம் பராந்தக சோழன் பெரும் படையும் பாண்டிய மன்னன் இராச சிம்மனின் பெரும் படையும் 'வெள்ளூர்' எனும் இடத்தில் பெரும் போர் புரிந்தனர்.போர் என்றால் அப்படி ஒரு போர்,போரின் முடிவில் சோழன் பெரும் வெற்றி கொள்கின்றான்.பாண்டிய நாட்டை முடி சூட்டி கொள்ள வந்த சோழனுக்கு பெரும் அதிர்ச்சி,பாண்டியன் இராச சிம்மன் இந்திர ஆரத்தையும்,மணி முடியையும் போரில் உதவிய சிங்களமன்னனிடம் கொடுத்துவிட்டு சேர நாடுக்கு தப்பி ஓடி விட்டான்.கடுங்கோபமடைந்த பாராந்தக சோழன் ஒரு பெரும் படயினை இலங்கைக்கு அனுப்பி இலங்கையை வென்றான்.ஆனால் இந்திர ஆரத்தையும்,மணி முடியையும் கண்டறிய முடியவில்லை.ஆண்டுகள் கழிந்தன,மன்னர்கள் பலர் வந்து சென்றனர்,ஏன் ராஜராஜ சோழனால் கூட கைப்பற்ற முடியவில்லை.சரியாக 107 வருடம் கழித்து இராஜேந்திர சோழன் ஒரு மிகப்பெரும் படையுடன் இலங்கைக்கு சென்று ,முழு இலங்கையையும் துவம்சம் செய்து இலங்கை மன்னன் 5ம் மஹிந்தனை வென்று இந்திர ஆரத்தையும்,மணி முடியையும் கைப்பற்றி, சோழ நாடு வந்த வேந்தன்,இந்த சோழன்.

24.இராஜேந்திர சோழனும் சைவ நெறியையே பின்பற்றினான்.தன்னுடைய ஆட்சியில் பிற சமயங்களுக்கும் அதே முக்கியத்துவம் கொடுத்து வந்தான்.கங்கை முடிய படை எடுத்து வென்றாலும் எந்த நேரத்திலும் தான் சார்ந்த சமயத்தையோ,மொழியையோ யார் மீதும் தினிக்கவில்லை.

25.இராஜேந்திரன் இறந்தவுடன்,அவனிடம் இருந்த தீராத அன்பினால் அவன் மனைவியுள் ஒருத்தியான வீரமாதேவியும் உடன் இறந்தால்.பின்னாளில் அந்த இடத்தில் நீர் பந்தலை அமைத்த அவளின் சகோதரன் சேதுராமன் மதுராந்தகன் அவ்வழியில் செல்வோர்க்கு நீரிணை கொடுத்து வந்தான்.

-அ.ராம்



 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator