Saturday 15 June 2013

அருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி’

" } Google+





Kumar Ramanathan14 June 23:54
அருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி’ - ஐம்பதி ஒன்னாவது பாடல் - கடைசி பாடல் என்று சொல்வதை விட, இதை கடைசி முத்து என்று கூறலாம்.

இது ஆச்சர்யசுவாமிகள் உபன்யாசங்கள் 1957-58 என்ற புத்தகத்தில் இருந்து தட்டு அச்சில் என்னால் பதிவு செய்யப்பட்டது.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!!

விளக்கம் : உருவாக, உருவமில்லாததாக, உள்ளதாக, இல்லாததாக, நறுமணமாக, மலராக, மணியாக, உலகின் மூலப்பொருளாக, உயிருக்கு உயிராக, வீடுபேறை அடைகின்ற விழியாக விளங்கும் வந்து அருள் புரிவாய்.

இந்த பாடலை பற்றி ஒரு ரசமான, ஹாசியமான சம்பவம் :

ஒரு நல்ல அந்தணர் (சங்கீத வித்வான்), காஞ்சி பெரியவாளை – சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளை தரிசிக்க வந்து இருந்தார். வறுமை நிலையில் குடும்பம். அந்த நிலையை போக்க, செல்வத்தை பெருக்க, ஏதாவது மந்திரம், தந்திரம், பிரார்த்தனை உண்டா என்று பெரியவாளிடம் வினவினார்.

பெரியவா : நான் சொல்வான் ஏன், உனக்கே தான் தெரியுமே, நீ தான்
சங்கீத வித்வான் ஆச்சே

அந்தணர் : இல்லையே. நான் ஏதோ பாட்டு தான் பாட்டுவேன். மந்திரம், தந்திரம் எல்லாம் தெரியாது !

பெரியவா : திருபுகழ்ல உனக்கு பரிச்சியம் உண்டில்ல, நோக்கு கந்தர் அநுபூதி தெரியுமோ ?

அந்தணர் : ஓ, மனப்பாடமா, நான்னா தெரியும்…..

பெரியவா : அநுபூதியிலே அருணகிரிநாதரே அத கேக்குராரே !

அந்தணருக்கோ ஒரே அதிர்ச்சியாக இருந்தது, கந்தர் அநுபூதியோ ஞான மயமான நூல், அதில் இகத்துக்கு (பணத்துக்கு) என்ன கேட்டு இருக்க போறார்…..

அந்தணர் : எனக்கு புரியலையே, பெரியவாள் புரியற மாதிரி சொன்னால் சுபம்.

பெரியவாள் : எங்க கடைசி பாட்ட பாடு…

(எங்கும் நிசப்தம். வெண்கல குரல். ஸ்வரம், லயம் சேர்த்து அந்தணர் மேலே உள்ள பாடலை பாடுகிறார்….. நல்ல சாரீரம். கண்ணை மூடி ஆழ்ந்து ரசித்தார் பெரியவாள்)

பெரியவா : எங்க கடைசி வரிய சொல்லு…

அந்தணர் : குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

பெரியவாள் : பாத்தியா இதுல இருக்கு பாரு

அந்தணர் : …….!?!……. (அவருக்கு இன்னும் புரியல)

பெரியவாள் : மெல்ல கடைசி வரிய, ஒரு ஒரு வாரத்தையா திருப்பி சொல்லு.

அந்தணர் : குருவாய்….. வருவாய்….. அருள்வாய்….. குகனே!

பெரியவாள் : பாத்தியா ‘வருவாய் அருள்வாய் குகனே, வருவாய் அருள்வாய் குகனே’ அப்பிடீன்னு கேக்குறார்

அவர்க்கு ஆச்சரியமாக இருந்தது, நமக்கும் தான் !!! பதத்தை பிரித்து படியுங்கள், ’குருவாய்…, வருவாய் அருள்வாய் குகனே!’ {குருவாய், நீ வந்து வருவாய் (பணம்) தருவாய் குகனே}

பெரியவா : அவர் எப்படி வேணாலும் சொல்லி இருக்கட்டும், ஆனா நாம இப்படி கேக்கலாம்ல… அதே குருவான சுவாமிநாதன், நமக்கு பரத்துடன், இகத்தையும் கொடுத்து விட்டு போறார். அதுனால, இதுக்கு மேல என்ன பெரிய மந்திரம் வேணும். இதையே திரும்ப திரும்ப சொல்லி வா… உன்னுடைய கஷ்டம் எல்லாம் தீரும்

இந்தப் பாடலை பல முறை பாடியும்/உணர்ந்தும் மகிழ்ந்து உள்ளேன். குறிப்பாக அந்த கடைசி வரி எனக்கு மிகவும் பிடிக்கும். ‘மாதா, பிதா, குரு, தெய்வம்‘ என்பது வேதம். இங்கு கடவுளையே நாம் குருவாக வந்து அருள் செய்ய வேண்டுகிறோம். என்ன ஒரு அழகான சிந்தனை, என்ன ஒரு அழகான (தேன் தமிழ்!) வார்த்தைகளின் பிரயோகம்! சத்தியமாக, சொக்க வைக்கும் தமிழ்!

ஆனால், ஒரு முறை கூட, காஞ்சி பெரியவாள் மாதிரி யோசித்தது இல்லை. இது தான் கவிதையின் சிறப்பு. வெளிப்படையாக ஒரு விளக்கம், உள்ளே பொதிந்துகிடப்பதோ பல அருமையான கருத்துகள், சிந்தனைகள், விளக்கங்கள். ஆழ்ந்து, அதனுடன் சென்று ஆர்வத்துடன் பார்க்க வேண்டும் இதையும், எதையும் !

வருவாய் (எ) income அருள்வாய் குகனே மட்டுமல்ல!
அந்த வருவாயைப் பெருக்கும் Financial Consultant = குருவாய், எனக்கு வருவாயை அருள்வாய் -ன்னும் பொருள்:)
அநுபூதியின் கடைக்குட்டி இந்தப் பாடல்…
பல சுவைகளைத் தன்னகத்தே ஒளித்துள்ளது!
உரு-வாய் அரு-வாய் உள-தாய் இல-தாய்
மரு-வாய் மல-ராய் மணி-யாய் ஒளி-யாய்க்
கரு-வாய் உயி-ராய்க் கதி-யாய் விதி-யாய்க்
குரு-வாய் வரு-வாய் அருள்-வாய் குக-னே!!
வாய் வாய் ஆய் ஆய்
வாய் ஆய் ஆய் ஆய்
வாய் ஆய் ஆய் ஆய்
வாய் வாய் வாய் ஏ! – என்னும் வாய்ப்பாடு;

அதைக் காணுங்கள் ஒவ்வொரு அடியிலும்; You will notice a geometric pattern!

ஆய் = ஆய்வு;
பொதுவா, எதை ஒன்னையும் எடுத்தவுடனே ஆய மாட்டோம்
அதனிடம் ஒரு பிரியம் வளர்த்துக் கொண்ட பின்னரே, அதை நுணுக்கி நுணுக்கி ஆய்ந்து மகிழ்வோம்
முதலில் = வாய் (வாய்த்தல்); பிறகு = ஆய் (ஆய்தல்)

1) முதலில் உரு-வாய் அரு-வாய் அவனே வந்து, வாய்க்கின்றான்;
ஆனா, உளது-ஆய், இலது-ஆய்
= அவன் உள்ளானா? இல்லானா? -ன்னு ஆய்வு செய்யுது நம்ம மனசு

2) அடுத்து, மரு-வாய் மனசுக்குள் மறுபடியும் வாய்க்கின்றான் (மரு=மணம்);
மணத்தைக் காண முடியாது, உணரத் தான் முடியும்!
டேய், இன்னும் என் காதலை உணரலையா? -ன்னு கேட்டு மனசுக்குள் மணமாய்ப் பூக்கின்றான் என் முருகவன்!
ஆனா அப்பவும், மலர்-ஆய், மணி-ஆய், ஒளி-ஆய் -ன்னு
கண்ணால காணும் பொருளையே நம்புவோம் -ன்னு, நம்ம போக்கு!

3) தூய காதலை எப்படிக் காட்ட முடியும்?
கண்ணால காட்டிச் சைட் அடிக்கலாம்; உடம்பும் உடம்பும் உரசி வெளிப்படுத்தலாம்; இன்னும் என்னென்னமோ செய்யலாம்!
ஆனா, இது எல்லாத்துக்கும் மூலம் அந்த மனசு = அதுவே காதலை “உணர்த்தும்”; அதைக் காணவே முடியாது; ஆனா ஆயுசுக்கும் “உணர்ந்து” கொண்டே இருக்கலாம்! அதான் கரு-வாய்; மூலக் கருவாய் மறுபடியும் வாய்க்கின்றான்! அந்தக் கருவில், உயிர்-ஆய், கதி-ஆய், விதி-ஆய் -ன்னு வளர்ந்து ஆய்வு செய்து கொண்டே இருக்கிறோம்!

4) ஆய்வால் = முருகவன் காதலை அளக்க முடியாது; அவனைக் கொள்ளத் தான் முடியும்! அதான், போதும் உன் ஆய்வு -ன்னு… “ஆய்” என்பதே இல்லாமல், இறுதி அடியில், எல்லாமே “வாய்” என்றே வாய்த்து விடுகிறான்!

குரு-வாய், வரு-வாய், அருள்-வாய்!
வாய் வாய் வாய்
யாரு? = குகனே!
என் காதல் முருகவா, எனக்கொரு நாள் உன்னை வாய்ப்பாயா?
//இந்த பாடலில் எத்தனை வாய்கள் உள்ளதோ//
மொத்தம் ஏழு வாய்கள் = எழுவாய்!
மொத்தம் எட்டு ஆய்கள் = எட்டாய்!
நான் ஆய்ந்த, நீ எட்டாய் = எட்ட மாட்டாய்
நான் கொள்ள, நீ எழுவாய் = எழுந்து கொள்வாய்

இது ஆச்சர்யசுவாமிகள் உபன்யாசங்கள் 1957-58 என்ற புத்தகத்தில் இருந்து தட்டு அச்சில் என்னால் பதிவு செய்யப்பட்டது
http://www.facebook.com/pages/Khariharan/115524648579725


Ranjani Geethalaya(Regd.) (Registered under Societies Registration Act XXI of 1860. Regn No S/28043 of 1995) A society for promotion of traditional values through,  Music, Dance, Art , Culture, Education and Social service. REGD OFFICE A-73 Inderpuri, New Delhi-110012, INDIA Email: ranjanigeethalaya@gmail.com  web: http://ranjanigeethalaya.webs.com (M)9868369793 all donations/contributions may be sent to Ranjani Geethalaya ( Regd) A/c no 3063000100374737, Punjab National Bank, ER 14, Inder Puri, New Delhi-110012, MICR CODE 110024135  IFSC CODE PUNB00306300

power by BLOGSPOT-PING






No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator