Wednesday, 30 December 2015

K Visalini is a child prodigy

IndiBlogger - The Largest Indian Blogger Community 
K Visalini is a child prodigy, who resides in a quaint little town called Palayamkottai in Tirunelveli, Tamil Nadu. This 15 year old not only holds the distinction of having the highest IQ in the world but is an IT whiz kid as well. With an IQ of 225, Visalini holds the world record of cracking the toughest networking exams like MCP, CCNA, CCNAS, OCJP, MCTS, MSCPD & CCNP, all achieved when she was all of 10. Ambitious and hard working, Visalini dreams of becoming a CEO of her own IT company one day.

11வயதில், தனக்குரிய இணைய தளத்தைத் தானே வடிவமைத்தவர்-
அதுவும்  24  மணிநேரத்தில்.   தான் கற்றதோடு மட்டும் நிறுத்தவில்லை இவர். கற்பிக்கவும் தொடங்கினார்.  தன் 11வயதில்,   25 க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு அழைக்கப்பட்டு அங்கு   Final Year மாணவர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள் (HOD’s),   முதல்வர்களுக்கு Seminar வகுப்புகளை நடத்தியவர்.
இவரது திறமையை அறிந்த Indian Overseas Bank நிர்வாகம் சர்வதேச தலைமையகத்துக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்த போது விசாலினிக்கு வயது 12 தான்.  அங்கு உலக அளவிலான IOB GM தலைமையிலான  IT Professional களுக்கு 1/2 மணி நேரம் வகுப்பு எடுக்கச் சொன்னார்கள். ஆனால் விசாலினியோ 2 மணி நேரம் பாடம் நடத்தி அனைவரையும் பிரமிக்க வைத்தாள்.
தன் சொந்த முயற்சியால் மட்டுமே, உலகின் பல்வேறு நாட்டு அறிஞர்களின் பாராட்டைப் பெற்ற விசாலினி,
ஓர் இந்தியர். அதுவும் தமிழர்.
ஆம்! உண்மை தான். தமிழனின் மூளை தரணியையே வெல்கிறது.
HCL  நிறுவனம்  The Pride of India - Visalini  என பாராட்டிய போது அவருக்கு வயது 11.  TEDx   சர்வதேச மாநாட்டில் தலைமை உரை ஆற்றிய  விசாலினி  11 வயதில்,  The Youngest TEDx  Speaker  என்ற பட்டமும் பெற்றார்.  London, World Records University, Dean  தாமஸ் பெய்னிடம் பாராட்டு பெற்றார்   விசாலினி.
Times   Now English   News   நிறுவனமோ ஒருபடி மேலாக விசாலினியின் வீட்டிற்கே வந்து 2  நாட்கள் தங்கி அவரைப் பற்றிய தகவல்களைத் திரட்டி, The  Amazing  Indian -  Visalini  என அரை மணி நேர Documentry
படத்தை ஒளிபரப்பியது.
நியூ சவுத் வேல்ஸை தலைமையிடமாகக் கொண்டு, காமன் வெல்த் ஆப் ஆஸ்திரேலியாவால் தொடங்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் முன்னணிச் செய்தி   நிறுவனமான SBS ஆஸ்திரேலியா,  உலகின்
74 மொழிகளில் 174  நாடுகளில்  விசாலினியின் அரைமணி நேர பேட்டியை  ஒலிபரப்பி கௌரவப் படுத்திய போது  விசாலினிக்கு
வயது 13 தான்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை  மாலையில்  விசாலினியின்  தந்தைக்கு வந்தது ஒரு Phone Call.  Our Prime Minister   Mr. Modi
wants to meet your Daughter Visalini  என்று.  பிரதமரைக் கண்ட விசாலினி, எழுந்து நின்று
தமிழில் வணக்கம் என்று  சொல்ல,  பதிலுக்கு தமிழிலேயே வணக்கம்
என்றார் பிரதமர் மோடி.  பிரதமர் மோடி  விசாலினியுடன் உரையாடிய போது,  இந்தச் சிறுவயதில் நீ செய்துள்ள சாதனைகளே, இந்திய நாட்டிற்கான  சேவைதான் என்று நெகிழ்ந்து பாராட்டினார்.
திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் கருணாகரனோ,  விசாலினி இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில் முக்கியப் பங்காற்றுவார்
என்று  பெருமை பொங்க வாழ்த்தினார்.  உலக அளவில்  பாராட்டு பெற்றுள்ள விசாலினிக்கு,  தான் இன்னும்  தமிழக  முதல்வரின்  பாராட்டைப்  பெற வில்லையே  என்பது மிகப்பெரிய ஆதங்கம்.
உங்களுக்குத் தெரியுமா,  சாதாரண மனிதர்களின் அறிவுத்திறன் 90 முதல் 110 வரை இருக்கும். கம்ப்யூட்டர்  ஜாம்பவான் பில்கேட்ஸுக்கு IQ level 160.  ஆனால்  விசாலினியின்   IQ level 225.  உலகிலேயே மிக அதிக அறிவுத்திறன் கொண்டவர் என்ற உலக சாதனை படைத்த விசாலினி,  நம் இந்தியாவின் தமிழ்நாட்டின் திருநெல்வேலியைச் சேர்ந்தவர்.  உலகிலேயே இல்லை  இப்படி ஒரு குழந்தை என்று சாதித்துக் கொண்டிருக்கும் விசாலினியின் தந்தை ஓர் எலக்ட்ரீசியன். தாத்தாவோ வெல்டராக இருந்து, பின் தமிழாசிரியராக  ஆனவர்.
நண்பர்களே, விசாலினி என்னும் விருட்சத்தின் சாதனைகளை முடிந்தவரை அனைவரும் Facebook,  Whatsapp ல் Share செய்யுங்கள். இந்தத் தமிழ்மகள் பெருமையை தரணி எங்கும் பறைசாற்றுங்கள்

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator