" Google+"
வேதமும்
பன்பாடும்’
புஸ்தகத்திலிருந்து . .
.
கேள்வி
: பெரியவர்களுக்கு
நமஸ்காரம் செய்வதில்
ஏதாவது நியமம்
உண்டா?
பதில்:
*
படுத்துக்
கொண்டிருப்பவர்களையும்,
ஜபம் செய்து
கொண்டிருப்பவர்களையும்
ஈரத்துணி உடுத்திக்
கொண்டிருப்பவர்களையும்
நமஸ்கரிக்கக்
கூடாது.
* பெண்களுக்கு
நமஸ்காரம்
செய்யும்போது
அபிவாதனம் சொல்லக்
கூடாது. ஆனால்
தாயாருக்கு மட்டும்
அபிவாதனம் உண்டு.
* அதே போல்
ஸன்னியாசிகளுக்கும்
அபிவாதனம் கிடையாது.
* பலர் கூடியிருக்கும்
சபையிலும் நமஸ்காரம்
மட்டும்தான் செய்ய
வேண்டும். அபிவாதனம்
கிடையாது.
* கோவில்களில்
மனிதர்களுக்கு
நமஸ்காரம் செய்யக்
கூடாது.
* கடவுளுக்கு நமஸ்காரம்
செய்யும்போது ஆண்கள்
“தண்டவத் ப்ரணமேத்”
என்று சொல்லியுள்ளது.
தண்டம் சமர்ப்பித்தல்
என்பது, ஒரு கொம்பை
(கோலை) எடுத்து
நிறுத்தி கைகளை
எடுத்துவிட்டால்
எப்படி கீழே விழுந்து
விடுமோ அதுபோல் இந்த
உடல் என்னுடையதில்லை
நீர் தந்தது தான் என்ற
உணர்வுடன் அப்படியே
கடவுளின் முன்
விழுவதாகும்.
இதையே ஸாஷ்டாங்க
நமஸ்காரம் என்றும்
கூறலாம்.
* ஸ்த்ரீகளுக்கு
ஸாஷ்டாங்க நமஸ்காரம்
கிடையாது.
பதிலாக பஞ்சாங்க
நமஸ்காரம்
சொல்லியுள்ளது.
நமஸ்காரம்
செய்யும்போது பிறர்
நம்மை பார்ப்பார்களே
என்று நினைப்பதோ,
வெட்கப்படுவதோ,
கூச்சப்படுவதோகூடாது.
--
Anger is the wind that blows
out the candle of reason. Don't blow out the light that
guides you!
Follow @lokakshema_hari Tweet
No comments:
Post a Comment