"
}
Google+
பெரியவாளின் நகைச்சுவையும்..நச்சும்-அனுக்ரகமும்
பெரியவா,இளையாத்தன்குடியில் இருந்த சமயம். கும்பகோணத்திலிருந்து டாக்டர் ஒருவர்,உயர்ந்த பழ வகைகளுடன் ஒவ்வொரு வாரமும் சுவாமிகளைப் பார்க்க போவது வழக்கம். ஒரு முறை அந்த டாக்டர், மடத்தில் கைங்கர்யம் செய்து வந்த மேலூர் ராமச்சந்திர ஐயர் என்பவரிடம் "மாமா பழமெல்லாம் வழக்கம்போல் கொண்டு வந்திருக்கேன். விலை உயர்ந்தவை;பத்திரமாக எடுத்து வைத்துப் பெரியவா சாப்பிடக்கொடுங்கள்.மடத்தில் பெருச்சாளியெல்லாம் இருக்கும்.பார்த்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
பெரியவா காதில் விழுந்துவிட்டது போலும்!
பூஜை முடித்து ஆகாரம் செய்த பின் பெரியவா அங்கிருந்த ஓர் அறையில் ஜன்னலோரமாக உட்கார்ந்துகொண்டார். "கும்பகோணம் டாக்டர் வந்தாரே! இருக்காரா பாரு..." என்று வினவினார். உடனே டாக்டரும் அவர் கூடவந்த ஒருவரும் அழைத்து வரப்பட்டனர். கூடவந்தவரிடம், "மேலூர் மாமாவிடம் கேட்டு இந்த டாக்டர் கொடுத்த பழங்களையெல்லாம் கூடையோடு எடுத்துண்டு வரச்சொல்லு!" என்றார் பெரியவர்.கூடை வந்தது.
உடனே டாக்டரைப் பார்த்து "எனக்கு என்ன வயதாகிறது தெரியுமா?" என்று ஒரு கேள்வி எழுப்பினார். "65 வயது! இந்தக் கிழவன் ஒருவனே இத்தனை பழத்தையும் தின்னால் உடம்பு என்ன ஆகும்? நீங்க டாக்டராயிற்றே சொல்லுங்கள் என்றார்,
மேலும் தொடர்ந்தார்; "இந்த மடத்தில் பெருச்சாளிகள் உண்டு. எல்லாவற்றையும்விட பழம் பெருச்சாளி நான்தான்டா!" என்று சிரித்தார். உடனே மேலூர் மாமாவிடம் தான் சொன்னதைத்தான் பெரியவா தெரிந்துகொண்டு நம்மை ஆழம் பார்க்கிறார் என்று டாக்டர் பதைக்கிறார்.
உடனே பெரியவா, "இங்கே வரவாள்ளாம் நாம் கொடுக்கறதை பெரியவாளே சாப்பிடணும் என்று நினைக்கிறீர்கள். என் மேலே உள்ள பிரியம்தான் காரணம் என்பது தெரியும். ஆனால், அது சாத்தியமா..இவ்வளவையும் ஒருவனே சாப்பிட முடியுமா என்பதை யோசிக்கணும்.இன்னொன்று உங்களுக்குப் புரியணும். நீங்கள் என்னிடம் எனக்காக என்று ஒன்றைக் குடுத்துட்டா, அப்புறம் அது என்னுடையது.நான் என்ன வேணுமானாலும் பண்ணலாம்.யாருக்கு வேணுமானாலும் கொடுக்கலாம்.இதற்காக நீங்கள் வருத்தப்படக் கூடாது. இந்த மடத்தில் எத்தனையோ பேர் குடும்பம்,குழந்தை குட்டி என்ற எல்லாவற்றையும் விட்டுவிட்டு எனக்குக் கைங்கர்யம் பண்ணியிருக்கா.அவாளுக்கெல்லாம் குடுக்காம நானே சாப்பிட முடியுமா? இவர்களையெல்லாம் பராமரிக்க வேண்டியது என் பொறுப்பு. நானோ சந்நியாசி.பக்த கோடிகள் கொடுப்பதைத்தானே நான் தர முடியும்?" என்று கூறுகிறார்.
"மன்னிக்கணும்; மன்னிக்கணும்! பெரியவா என் கண்ணைத் திறந்துட்டா...."என்று டாக்டர் அழுதார்,
அடுத்த கணம் அத்தனை பழங்களையும் ஜன்னல் வழியாக பெரியவா ஒவ்வொன்றாக எடுத்துப் போட்டார். அந்தப்புறம் யார் என்று பார்த்தால், சில நரிக்குறவர்கள் காட்சி தந்தார்கள். தங்களை நோக்கி போடப்படும் பழங்களை ஆவலாகவும் ஆச்சரியமாகவும் பொறுக்கி ஆனந்தப்பட்டனர்.அவர்களை எட்டிப் பார்த்தார் டாக்டர்.அவர்தான் பழங்கள் தருவதாக நினைத்த குறவர்கள், "சாமி! நீங்க நல்லா இருக்கணும்; குழந்தை குட்டிகளோடு சந்தோஷமா இருக்கணும்" என்று மனமார வாழ்த்தினார்கள்.
"இவாளுக்கெல்லாம் யாராவது ஆப்பிளும்,ஆரஞ்சும் வாங்கிக் கொடுத்திருப்பார்களா? அவா சந்தோஷ முகங்களைப் பார். யாராயிருந்தாலும் ஈசுவரார்ப்பணம் என்று முடிந்ததெல்லாம் கொடுக்கணும்!" என்று பெரியவா பேசப் பேச,டாக்டர் தன்னை மறந்து மகிழ்ச்சியில் மூழ்கினார்,
பெரியவா சந்நிதியில் எல்லாரும் ஒன்றுதான்.
[கருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர். எஸ்.கணேச சர்மா]என்ற புத்தகத்தில் இருந்து வரகூரான் நாராயணனால் டைப் செய்யப்பட்டது.
|
|
http://www.facebook.com/pages/Khariharan/115524648579725
Ranjani Geethalaya(Regd.)
(Registered under Societies Registration Act XXI of 1860. Regn No S/28043 of 1995)
A society for promotion of traditional values through,
Music, Dance, Art , Culture, Education and Social service.
REGD OFFICE A-73 Inderpuri, New Delhi-110012, INDIA
Email: ranjanigeethalaya@gmail.com
web: http://ranjanigeethalaya.webs.com (M)9868369793
all donations/contributions may be sent to
Ranjani Geethalaya ( Regd) A/c no 3063000100374737, Punjab National Bank, ER 14, Inder Puri, New Delhi-110012, MICR CODE 110024135 IFSC CODE PUNB00306300
power by BLOGSPOT-PING
No comments:
Post a Comment