|
|
|
கண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை
வெந்தயக் கீரையைக் கொண்டு அல்வா தயாரித்துக் காலைமாலை கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் உடல் சூடுதணிந்து சமப்படும். சீதபேதி குணமாகும். வயிற்றுப்போக்கை நிறுத்தும். மாதவிடாய் தொல்லை நீங்கவும்,உடலை வளர்க்கும் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும்.உடலுக்கு நல்ல பலம் தரும். வெந்தயக்கீரையைக் கூட்டு வைத்துப் பகலில் சாப்பிட்டால்வாய்வு கலைந்து விடும். மூன்றே நாட்களில் வாயுமுழுவதையும் கலைத்து விடும். வயிற்று உப்பிசம்இருந்தாலும் தணிந்து விடும். வெந்தயக் கீரையைப்பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு வதக்கி, இரண்டுடம்ளர் தண்ணீர் விட்டு,ஒரு டம்ளர் அறவிற்குச்சுண்டக்காய்ச்சி, காலை மாலை அரை டம்ளர் வீதம்கொடுத்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும். வெந்தயக் கீரையை ஆய்ந்து வேரை நீக்கி, கழுவி ஒருசட்டியுல் போட்டுச் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாகவேகவைக்க வேண்டும். வெந்தயக்கீரை இருக்கும் அளவில்இரண்டு பங்கு கோதுமை ரவையை எடுத்து லேசாக வறுத்துஇதில் கொட்டி, எல்லாம் எந்த அளவு இருக்கிறதோ அந்தஅளவிற்கு சர்கரை சேர்த்து இலேசாகக் கிளறிக் கொண்டேஇருந்தால் அல்வா போல வரும். வயதுக்கு வரும் பெண்கள் இதைச்சாப்பிட்டால் இரத்தவிருத்தியுண்டாகும். வெந்தயக்கீரையில் ஏ வைட்டமின்சத்தியும், சுண்ணாம்புச் சத்தும் இருப்பதால் இதைப்சாப்பிடும் போது மாரடைப்பு, கண்பார்வை குறை, வாதம்,சொறி சிரங்கு, இரத்தசோகை ஆகியவை குணமடையவும்,, பசியைப்போக்கவும் பயன்படுகிறது. வெந்தயக்கீரையில் 49கலோரி சத்துள்ளது. வெந்தயக்கீரையுடன் பாசிப்பயிர்சேர்த்து குழம்பு வைத்துச் சாப்பிட்டால் கல்லீரல்பலப்படுகிறது வாய்ங்குவேக்காடு வராது.
K.Raman.
|
|
|
http://www.facebook.com/pages/Khariharan/115524648579725
power by BLOGSPOT-PING
No comments:
Post a Comment