I am committed to help others as much I can and bring smile in their faces..when no one is following you,you walk alone on your path with full sincerity,honesty and commitment and the world would automatically fall behind you.Do send in your comments about the blog and suggest me ways to make it more interesting and inspiring.Be kind to others and God would be with you always. Om Parashakti Namo Namaha.
கணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள். கணவன், மனைவி மண வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே அனைவருக்கும் மகிழ்வாய் குடும்பம் நடத்த ஆசை தான். அது சிலருக்கு எளிதாகவும், அனேகருக்கு சிரமமாகவும் இருக்கிறது.
கணவன் மனைவி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்கள்.
* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை...? * கணவன் மனைவி எதிர்பார்ப்புகள் என்னென்ன..? * குழந்தைகளை தன்னம்பிக்கையுடன் வளர்ப்பது எப்படி..? * குடும்ப மகிழ்ச்சியில் உறுப்பினர்களின் பங்கு என்ன..?
1. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும். 2. மனது புண்படும்படி பேசக்கூடாது. 3. கோபப்படக்கூடாது. 4. சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது. 5. பலர் முன் திட்டக்கூடாது. 6. எந்த இடத்திலும் மனைவியை விட்டு கொடுக்கக்கூடாது. 7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும். 8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். 9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும். 10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும். 11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும். 12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும். 13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும். 14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும். 15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும். 16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும். 17. ஒளிவு, மறைவு கூடாது. 18. மனைவியை நம்ப வேண்டும். 19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும். 20. மனைவியிடம் அடுத்த பெண்ணை பாராட்டக்கூடாது. 21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்படவேண்டும். 22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும். 23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும். 24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும். 25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும். 26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் “இது உன் குழந்தை” என்று ஒதுங்கக்கூடாது. 27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி. 28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டு, சொல்ல வேண்டும். 31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும். 32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும். 33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும். 34. மனைவிக்குப் பிடித்தவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும். 35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது. 36. மனைவி வீட்டாரை குறை சொல்லக்கூடாது. 37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.
மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன...?
1. பள்ளி, அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல். 2. காலையில் முன் எழுந்திருத்தல். 3. எப்போதும் சிரித்த முகம். 4. நேரம் பாராது உபசரித்தல். 5. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும். 6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும். 7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக்கூடாது. 8. அதிகாரம் பண்ணக்கூடாது. 9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது. 10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும். 11. கணவனை சந்தேகப்படக்கூடாது. 12. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக்கூடாது. 13. பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும். 14. வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்து பேசக்கூடாது. 15. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும். 16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும். 17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது. 18. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். 19. கொடுக்கும் பணத்தில் சீராக குடும்பம் நடத்த வேண்டும். 20. கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது. 21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும். 22. எதிர்காலத் திட்டங்களை சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும். 23. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும். 24. தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேசவேண்டும். 25. அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற்போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும். 26. குழந்தையை கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது. 27. சுவையாக சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும். 28. கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும்படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும். 29. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். 30. உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும். 31. தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது. 32. உடம்பை சிலிம் ஆக வைத்து கொள்ள வேண்டும்.
தன்னம்பிக்கை என்பது மனித வாழ்க்கைக்கு ஒரு நெம்புகோல் போன்றது. அது இல்லையேல் வாழ்க்கை இல்லை. இதனைப் பெற்றோர் தம் குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும். 1. சுயமாக சிந்திக்க, சுயமாக செயல்பட குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். 2. படிப்பில், அதோடு கூட வீட்டு வேலைகளில் குழந்தைகளுக்கு பெற்றோர் போதிய பயிற்சி அளிக்க வேண்டும். 3. குழந்தைகளை அச்சுறுத்தி அடித்துக் கண்டிக்கக் கூடாது. ஆனாலும் அதன் போக்கில் எதேச்சையாக விட்டு விடவும் கூடாது. 4. குழந்தைகளுக்கு அன்புப்பால் ஊட்டி, அரவணைத்துப் பெருமைப்படுத்தவேண்டும். 5. ’நீ ராசா அல்லவா..? ராசாத்தி அல்லவா..?’ என்கிற வாசகங்கள் பெற்றோர் வாயிலிருந்து வர வேண்டும். 6. “மக்கு,மண்டு,மண்டூகம்” போன்ற வாசகங்கள் மலையேற வேண்டும். 7. பயம், கூச்சமின்றி, உறுதியான நெஞ்சம், உண்மையான பேச்சு, உயர்வான பண்பு இவை குழந்தைகளுக்கு அமைய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
உங்கள் பங்கு என்ன...?
உங்கள் குடும்பம் மகிழ்வாக இருக்க அல்லது அதில் மகிழ்ச்சியைக் குறைக்க, தான் எந்த அளவு காரணம் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து, இல்லாததை கொண்டு வர வேண்டும்.
1. அன்பாகப் பேசுவது. 2. பிறர் மீது அக்கறை காட்டுவது. 3. வீட்டை அழகாக வைத்துக் கொள்வது. 4. குறை கூறாமல் இருப்பது. 5. சொன்னதை செய்து கொடுப்பது. 6. இன்முகத்துடன் இருப்பது. 7. முன் மாதிரியாக நடந்து கொள்வது. 8. பிறரை நம்புவது. 9. ஒன்றாக பயணம் போக விரும்புவது. 10. பணிவு. 11. எதையும் எடுத்த, உரிய இடத்தில் வைப்பது. 12. பிறர் வேலைகளில் உதவுவது. 13. பிறருக்கு விட்டுக் கொடுப்பது. 14. பிறர் வருந்தும் போது ஆறுதல் கூறுவது. 15. சுறுசுறுப்பு. 16. சிறிய விசயங்களைக் கூட பாராட்டுவது. 17. புதிய முயற்சிகளை ஊக்குவிப்பது. 18. நகைச்சுவையாக பேசுவது. 19. அதிகமாக வேலை செய்ய விரும்புவது. 20. செலவுகளைக் குறைக்க ஆலோசனை கூறுவது. 21. நேரம் தவறாமை. 22. தற்பெருமை பேசாமல் இருப்பது. 23. தெளிவாகப் பேசுவது. 24. நேர்மையாய் இருப்பது. 25. பிறர் மனதை புண்படுத்தாமல் இருப்பது.
Very good collection of thoughts by bandhu Subramanian. In my opinion, Husband and Wife must be first good friends.If bascially they are good friends, every thing else will follow automatically. Though the hubby -wife relationship is different from friendship, unless the couple are friends of each other the " zing" will be missing!
Submit link
http://picasaweb.google.com/lh/photo/60zW28Bt0yMKF4esQAoxlg?feat=directlink
website counter Inspirational Quotes
Post as thumbnail in MySpace, your blog or website
Post in a forum
Search Engine Submission - AddMe
http://www.hindujagruti.org/hinduism/knowledge/category/index.php
http://www.hindujagruti.org/hinduism/knowledge/category/shraddha
http://www.p4panorama.com/panosnew/ mookambika_ temple/saraswa.html
http://www.stilltasty.com/
http://lokakshema.webduniya.com
No comments:
Post a Comment