Monday 4 January 2021

உலகிலேயே அழகான நடராஜர் வீற்றிருக்கும் கோனேரிராஜபுரம்.


 





🙏🏼

*புண்ணியம் செய்தவர்  மட்டுமே, உலகிலேயே அழகு ததும்பி வழியும், இந்த நடராஜரை தரிசித்து மகிழும் பாக்கியம் பெற முடியும்...!*

உலகிலேயே அழகான நடராஜர் வீற்றிருக்கும் கோனேரிராஜபுரம்.
 
சிற்பி, ஆறாவது முறையாக நடராஜப் பெருமாள் திருவுருவத்திற்கு அச்சு செய்து பஞ்ச உலோகங்களை தனியே காய்ச்சி வார்த்துக் கொண்டிருந்தான்.
பெரிய திருவாச்சியை தனியே வார்த்தாகி விட்டது. 
சிவனுக்குரிய சடையை, அந்த சடையில் இருக்கும் நாகத்தை கங்கை உருவத்தை வார்த்தாகிவிட்டது.

சிவகாமிக்கும், நடராஜருக்கும் தனித்தனியே பீடம் செய்து முடித்தாகி விட்டது. இப்போது நடராஜரையும், சிவகாமியையும் வார்க்க வேண்டும். 

மழு தொலைவே கொதித்துக் கொண்டிருக்கிறது. அவன் அடுப்பைத் துருத்தியால் வேகமாக ஊதி உலையின் தீவிரத்தை அதிகப்படுத்தி மழுவைக் கொதிக்க வைத்துக் கொண்டிருந்தான். மழு தயார் நிலையில் இருந்தது. 

திரும்பி மனைவியைப் பார்த்து துவங்கி விடட்டுமா? என்று கேட்டான். மனைவி சரியென்று தலையசைத்தாள்.

படுக்க வைக்கப்பட்ட பெரிய களிமண் அச்சுக்கு முன் கைகூப்பி நின்றான்.

இது ஆறாவது முறை. என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு பின்னம் நடந்து கொண்டிருக்கிறது.

உன்னை நான் உருவமாகச் செய்கிறேன் என்ற கர்வம் எனக்கில்லை.

 ஈசனே, நீயே வந்து குடி கொண்டாலொழிய உன் உருவத்தை ஒரு நாளும் செய்ய முடியாது.எங்கேனும் ஒரு கர்வத்தில் நான் இருப்பின் தயவுசெய்து என்னை தண்டித்துவிடு. இந்த உருவத்திற்குள் வராமல் போகாதே என்று வேண்டினார்.

அந்தப்பகுதி, அரசனுடைய குரல் அவன் காதில் விழுந்தது.
"வேண்டுமென்றே தவறு செய்கிறாய் சிற்பியே, என்னிடம் காசு வாங்குவதற்காகவே நீயாக ஏதேனும் தவறு செய்துவிட்டு, பின்னமாகிவிட்டது குறையாகிவிட்டது, என்று வருத்தப்படுகிறாய்.

கடந்த நான்கு வருடங்களாக நடராஜர் சிலையை செய்வதாக கூறி என்னுடைய சம்பளத்திலே தின்றுகொழுத்து செய்துவருகிறாய், இதுவே கடைசி முறை இன்னும் இரண்டு நாட்களில் நடராஜர் சிலையை செய்யவில்லையெனில் நீ இங்கிருந்து புண்ணியமில்லை!

உன்னை சிற்பி என்று நாங்கள் அழைத்து லாபமில்லை. எனவே உன் கதையை என் வாளால் முடிப்பேன் "என்று சீறினான் அரசன்.

அந்த அரசன் நான்கு வருடங்கள் பொறுமையாக இருந்ததே பெரிய விஷயம். அவன் பொறுமை மீறும்படியாக என்ன ஏற்பட்டது தெரியவில்லை, அரசனிடம் இருந்து நடராஜர் சிலை செய்ய உத்தரவு சிற்பிக்கு வந்ததுமே அற்புதமான ஒரு நடராஜர் ஆயிரமாயிரம் காலத்திற்கு நிற்க வேண்டிய நடராஜர் செய்ய வேண்டும் என்ற வேகம் வந்தது. அந்த வேகத்தோடு கர்வம் வந்ததோ, என்னவோ தெரியவில்லை. ஐந்து சிலைகள் செய்தும் சரியாக வரவில்லை.

இது ஆறாவது சிலை.
ஒரு சிறு தவறும் நேராதவாறு எல்லா விஷயங்களையும் ஒரு முறைக்கு இரு முறை சோதித்து மெழுகால் சிலை செய்து பிறகு அதன் மீது களிமண் பூசி, சரியான இடத்தில் ஓட்டைகள் வைத்து காற்றுப் போக வழிகள் செய்து அவன் மழுவைக் காய்ச்சி இறைவனை வழிபடத் தொடங்கினான்.

மழு உச்ச நிலையில் கொதித்துக் கொண்டிருக்க, "என்னுடைய வாழ்க்கை உயர்வதும், தாழ்வதும் இப்பொழுது உன்கையில் இருக்கிறது. உனக்கு விருப்பம் இருப்பின் இதற்குள் வந்து உட்கார்ந்து கொள் இல்லையெனில் என்னை சாக விடு...! "என்று சொல்லிவிட்டு முழுமனதோடு மழுவை கிளரத் தொடங்கினான்.
உலையின் அனல் உடம்பு முழுவதும் அடித்தது.

இருட்டில் யாரோ தொலைவிலிருந்து வருவது தெரிந்தது. வந்தவர்கள் ஆணும், பெண்ணுமான வயதான அந்தணர்கள். 
"அப்பா திருநல்லம் என்கிற ஊர் எது, ஏனப்பா மிகப்பெரிய ஊர் என்று சொல்கிறார்கள், ஏன் இப்படி வயல்களுக்கு நடுவே இருக்கிறது. இதை தேடிக் கண்டுபிடித்து வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. 

ஐயா, சிற்பியே, தயவுசெய்து குடிப்பதற்கு ஒரு குவளை நீர் கொடு" என்று கேட்டார் அந்தணர்.
சிற்பி திரும்பி ஆச்சரியத்தோடு அந்தணர்களைப் பார்த்தான், என்ன இந்த அந்தணர் தன்னிடம்  போய் நீர் கேட்கிறாரே, என்று ஆச்சரியப்பட்டான்.
"அய்யா, நான் சிற்பி, கருமார் இனத்தை சேர்ந்தவன்.
 அந்தணர்கள் வசிக்கும் பகுதி கோயிலுக்கு பின்புறம் இருக்கிறது. நீங்கள் பார்ப்பதற்கு அந்தணர்கள் போல் இருக்கிறீர்கள். எனவே, கோயிலுக்கு பின்புறம் போய் அந்தணர் வீட்டில் குடிக்க நீர் கேளுங்கள், தருவார்கள் "என்று சொன்னான்.

மறுபடியும் வேலையில் மூழ்கினான். வந்தவர் கைதட்டி அழைத்து "எனக்கு தாகமாக இருக்கிறது ஐயா, அக்ரஹாரம் போகிறவரையில் என்னால் தாங்க இயலாது சுருண்டு விடுவேன் என்று தோன்றுகிறது. எனவே உன் கையால் ஒரு குவளை நீர் கொடு "என்றான்.

"நான் இங்கு வேலை செய்து கொண்டிருப்பது உன் கண்ணில் படவில்லையா, ஒரு சிலை வடிப்பது எவ்வளவு கடினம் என்பது உங்களுக்கு தெரியாது...?

 கவலையோடு நான் இங்கு நின்று கொண்டிருக்கிறேன். குடிக்க தண்ணீர் கொடு என்று என் உயிரை ஏன் வாங்குகிறீர்கள். என்னிடம் தண்ணீர் இல்லை, இந்த மழு தான் இருக்கிறது வேண்டுமானல் இதை குடியுங்கள்" என்று பதட்டத்தோடு சொல்ல.

"சரி அதையே குடித்துக் கொள்கிறேன்" என்று அருகே வந்த கிழவர், உஞ்சவர்த்தி பிராமணர் போல ஒரு சொம்பை இடுப்பில் கட்டி தொங்கவிட்டிருந்தார். அந்தச் சொம்பை விட்டு மழுவை மொண்டார், கொதிக்கின்ற நெருப்பு ஒளியோடு வீசுகின்ற மழுவை எடுத்து உயர்த்திக் குடித்தார். மழு வாய்க்குள் போயிற்று, மழுவை அவர் குடித்துக் கொண்டிருக்கும் போது சற்றுத் தொலைவில் நின்றிருந்த அவரது மனைவி வாய்விட்டுச் சிரித்தாள்..

சுற்றியுள்ள உதவியாட்களும், சிற்பியும் பயந்து போய் ஓவென்று கூவ, வந்தவரையும் காணோம், வந்தவர் மனைவியும் காணோம்.
 
ஐயா, கொதி நிலைக்கு வந்துவிட்டது என்று உதவியாளர் கூவ, எல்லாரும் கொதிக்கும் பாத்திரத்தின் அடிப்பக்க குழாயைத் திறந்து விட்டார்கள். மழு தரைவழிந்து பள்ளத்தின் வழியே சிற்பத்திற்குள் நதிபோல் ஓடி புகுந்து கொண்டது. சரியாய் எண்பது நொடிகளில் எல்லா உருக்கு உலோகமும் சிலைக்குள் போய் தங்கிவிட்டது.

அடுத்தது சிவகாமி சிலைக்கும் அவ்விதமே திறந்து ஊற்ற, அதுவும் சிலைக்குள் போய் அமர்ந்து மெழுகை வெளியே அனுப்பியது, மெழுகு உருகி வெளியேறும் புகையில் அடுத்தவர் முகம் தெரியவில்லை.
கிழவரையும், கிழவியையும் யாரும் தேடவில்லை. 

உருக்கு மொத்தமும் வழிந்ததும் அவரவர் ஓரம் போய் திண்ணைகளில் சாய்ந்தார்கள். தலைக்கு துணிவைத்துக் கொண்டு மயக்கத்தில் ஆழ்ந்தவர்கள் போல் தூங்கினார்கள், விடிந்து என்ன நடந்தது என்று விவாதித்தார்கள்...! யோசித்தார்கள்...!

வந்தது சிவபெருமானே என்று முடிவு செய்தார்கள்.
ஓடிப்போய் களிமண்ணில் நீர் ஊற்றி மெல்ல மெல்ல பிரித்து சிலையைப் பார்த்தார்கள். சிலை ஆறடி உயரத்திற்கு மேலாய் அற்புதமாய் வந்திருந்தது.

குமிழ் சிரிப்பும், கோவைச் செவ்வாயும், அகலமான கண்களும், தீர்க்கமான நாசியும் அற்புதமான கோணத்தில் நடனமாடும் சிவனுருவம் மிகச் சிறப்பாக வந்திருந்தது.

நிமிர்த்தி பீடத்தில் நிற்க வைத்தார்கள், சடையையும், திருவாச்சியையும் மாட்டினார்கள். சிவகாமியையும் நிமிர்த்தி பீடத்தோடு பொருத்தினார்கள்.

 ஊர்கூடிப் பார்த்து வியந்தது, கன்னத்தில் போட்டு கொண்டது. மன்னனுக்கு ஓடிப்போய் மந்திரிகள் செய்தி சொல்ல, மன்னனும் விரைந்து வந்து பார்த்தான். 

"உங்களுக்கெல்லாம் கத்தி எடுத்தால் தானடா காரியம் செய்ய முடிகிறது. தலையை கொய்து விடுவேன் என்று நான் ஆணையிட்டதனால் தானே இரண்டு நாளில் இத்தனை அற்புதமான ஒரு சிற்பத்தை செய்து முடித்தாய், இதுவரை நீ ஏமாற்றிக் கொண்டிருந்தது உண்மை என்று இப்போது தெள்ளத் தெளிவாக புரிந்து விட்டது பார்" என்று சிரிப்போடும் கடுப்போடும் மன்னன் பேசினான்.

சிற்பி இல்லை என்று தலையாட்டினார், "என்ன சொல்ல வருகிறாய்?" மன்னன் மறுபடியும் சீறினான்.

"இது சிவனால் செய்யப்பட்ட சிலை, இப்படி அந்தணர் உருவத்தில் சிவன் வந்து நின்றார். மனைவியுடன் வந்து என்னிடம் பேசினார், தண்ணீர் கேட்டார் மறுத்தேன், இது தான் இருக்கிறது என்று மழுவை காண்பித்தேன், மழுவை ஏந்திக் குடித்தார் மறைந்தார்," என்று சொல்ல.... 
"இந்த கதையெல்லாம் என்னிடம் விடாதே" என்று மறுபடியும் சீறினான்.

"இல்லை அரசே .இது சிவன் இருக்கிற சிலை, சிவன் மழுவுக்குள் கரைந்த சிலை. எனவே இதனுள் இறைவன் இருக்கிறான். இது என்னால் செய்யப்பட்ட சிலை அல்ல," என்று பணிவாக சொல்ல, அரசன் கெக்கலித்து கிண்டலாகச் சிரித்தான்.

 உளியை சிற்பியிடமிருந்து பிடுங்கி, இது சிவன் உருவம் சிவன் இருக்கிற உருவம் என்றால் இதை குத்தினால் ரத்தம் வருமோ என்று காலில் ஒரு காயத்தை ஏற்படுத்தினான்.

 பளிச்சென்று குருதி கொப்பளித்து கொட்டியது!  தரையை நனைத்தது. 

மக்கள் பயந்தார்கள், அரசன் திகைத்துப் போனான். பயத்தில் சுருண்டு விழுந்தான்.
இறைவனை சோதித்த அரசனின் உடம்பு முழுவதும் தொழுநோய் பரவியது. அவன் சிற்பியிடமும், இறைவனிடமும் கைகூப்பி மன்றாடி மன்னிப்பு கேட்டான் என்பது கோனேரி ராஜபுரத்தின் கதை.🙏

எங்கே இருக்கிறது இந்த கோனேரிராஜபுரம், கும்பகோணம் காரைக்கால் பேரூந்து பாதையில் புதூர் என்ற ஊரை அடைந்து, அங்கேயிருந்து வலதுபுறமாக போகும் சாலையில் விசாரித்துக் கொண்டு போக வேண்டும்.
வயல் வெளிகளுக்கு நடுவே ஒரு பெரிய கிராமம் அமைதியாக உட்கார்ந்திருக்கிறது.
கோனேரி ராஜபுரத்திற்கு முற்காலப் பெயர் *திருநல்லம்*. இந்த கோனேரி ராஜபுரத்திற்கு சோழமன்னன் கண்டராதித்தனும் அவன் மனைவி செம்பியன் மாதேவியும் பல நிவந்தங்கள் விட்டிருக்கிறார்கள்.
ஊர் மிகச் செழிப்பான ஊர். நடராஜர் விக்ரகத்தை பார்க்க வேண்டுமானால் அதை கோனேரி ராஜபுரத்தில் தான் பார்க்க வேண்டும்.
 உலகத்திலேயே மிகப் பெரிய நடராஜர் சிலை இந்த ஊரில் தான் இருக்கிறது. அழகு என்றால் அழகு அப்படியொரு கொள்ளையழகு. சிற்ப கலை தெரிந்தவர்கள் மட்டுமல்ல, சிற்பக் கலைப்பற்றி தெரியாதவர்கள் கூட அருகே போய் நின்றார்கள் என்றால் அப்படியே பரவசமாகிவிடுவார்கள்.
சிற்பக் கலை தெரிந்தவர்கள் மயக்கமாகி விடுவார்கள்!
கைரேகை, அக்குள் பக்க கருப்பு, அங்கு வழக்கமாய் எல்லா ஆண்களுக்கும் இருக்கின்ற கொழுப்புக் கட்டி, புறங்கை தேமல் என்று பல்வேறு விஷயங்கள் அற்புதமாக அந்த சிற்பி செய்திருக்கிறான்.
அரசன் உளியால் செதுக்கிய இடமும் பாதத்திற்கு மேல் அப்படியே இருக்கிறது. கோயில் ஆயிரம் வருடத்து கோயில். கோனேரி ராஜபுரம் சுவாமியின் பெயர் உமாமகேஸ்வரர் அல்லது பூமீஸ்வரர்!
தோட்டமும் துறவுமாய் பூமி பாக்கியம் வேண்டும் என்று விரும்புபவர்கள் இவரை வணங்கினால் நிச்சயம் பெறலாம் என்று சொல்லப்படுகிறது. நான் செழிப்பாக இருக்க நல்ல பூமியை கொடு என்று இந்த இறைவனிடம் வேண்டிக் கொண்டு உழைத்தால் நிச்சயம் அவன் கையகல பூமிக்காவது சொந்தக்காரனாவான் என்று நம்பப்படுகிறது.
தவிர அங்கு வைத்தியநாதன் சன்னதி இருக்கிறது, அந்த வைத்திய நாத சன்னதியில் ஜபம் செய்தால், வேறு யாருக்கேனும் உடம்பு சரியில்லை என்று நாம் இறைவன் பெயரை திரும்பத் திரும்பத் சொன்னால் சம்மந்தப்பட்டபவருக்கு நோய் குணமாவதாகவும் அன்பர்கள் சொல்கிறார்கள்.
இறைவி பெயர் தேகசௌந்தரி, 
ஸ்தலமரம் அரசு, 
தீர்த்தம் பிரம்ம தீர்த்தம்.

☘️🌹🙏🏼🙏🏼🌹☘️
Attachments area

Sunday 12 May 2019

பகுதி 2 பிரயாகை

IndiBlogger - The Largest Indian Blogger Community
Folloபகுதி  2 பிரயாகை

அனைவருமே இறைவனின் படைப்புகள்தான். அவ்விதம் இருந்தும், சிலர் செல்வந்தர்களாக இருக்கின்றனர். சிலர் வறுமையில் வாடுகின்றனர். சிலர் சுகத்தில் திளைக் கிறார்கள். பலர் துன்பத்தில் வாடி, வதங்குகிறார்கள். சிலர் ஆரோக்கியத்துடன் வாழ்கிறார்கள். சிலர் வியாதியில் வருந்துகின்றனர்.
இது ஏன்? மனிதனின் மனதிற்குப் புரியாத புதிர் இது!. சாதாரண மனிதனின் மனதிற்கு எட்டாத, மனித வாழ்க்கையின் சூட்சுமங்களை த்தான்  நமது வேதகால மகரிஷிகள் தங்கள் ஆத்ம சக்தியினால் அறிந்து, நம் பிறவியின் இரகசியங்களை, - பரம கருணையுடன்.
நமது நன்மைக்காகவே வெளிப்படுத்தியுள்ளனர்  நம் பிறவியின் நோக்கம் நல்ல காரியங்களைச் செய்து, மேலும், மேலும் நல்ல பிறவிகளை எடுத்து, அதன் பலனாக மேலும் பல புண்ணிய காரியங்களைச் செய்யும் வசதியும்,  மனமும் உள்ள நல்ல பிறவிகளை எடுத்து, உயரவேண்டும். இவ்விதம், தொடர்ந்து படிப்படியாக உயர் பிறவிகளை எடுத்து, மேலும் பல புண்ணிய காரியங்களச் செய்து, சிறுகச் சிறுக, இறைவனை அணுகி, இறுதியில் அவனுடன் இரண்டறக் கலந்துவிடும் முக்தி நிலையை அடைந்துவிட வேண்டும். இதுதான் நம் பிறவியின் உண்மையான நோக்கம் ஆகும்.பிறவியும் ஒரு புனித யாத்திரைதான்! பலவகைகளிலும், மனிதப் பிறவியும் ஒரு புனித யாத்திரைதான்! ஆனால், அது ஒரு ஆபத்துகள் நிறைந்த யாத்திரை ஆகும்!!
மனித வாழ்க்கை என்பது கொடிய விலங்குகள் நிறைந்த காட்டைக் கடப்பதற்குச் சமமாகும் என்று விவரித்துள்ளார் அவதார புருஷரான ஸ்ரீ வேதவியாசர். பொன்னாசை, பெண்ணாசை, மண்ணாசை என்ற மூன்று ஆசைகளும் புனிதமான நம் பிறவியைச் சீர்குலைக்கும் கொடிய விலங்குகள் என அருளியுள்ளார் அவர். தெய்வ பக்தி, நேர்மை, ஒழுக்கம், சத்தியம் ஆகியவற்றின் துணையுடன் தனது வாழ்க்கை காலத்தைக் கடக்கும் விவேகமுள்ள மனிதன், தன் வயோதிக காலத்திலும் மனநிம்மதியுடனும், மனநிறைவுடனும் கவலையின்றி வாழ்கிறான். உடலில் பலமும், வாழ்வில் ஓரளவு வசதியும் உள்ளபோதே நற்செயல்களைச் செய்து புண்ணிய பலன் களைச் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். மனிதப் பிறவியில் நமக்கு என்றும் துணையிருந்து, துன்பங்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் உண்மையான, அழியாத, எவராலும், எக்காலத்திலும் அழிக்கமுடியாத சொத்து நாம் செய்யும் புண்ணிய காரியங்களின் பலன்கள் மட்டுமே. புண்ணியத்தைச் செய்யாவிடினும் பாவச் செயல்களைத் தவிர்ப்பது மிகவும் அவசியம்.
மனிதப் பிறவி எடுத்தவர்கள் செய்யவேண்டிய தர்ம காரியங்களை நம் வேத கால மகரிஷிகள் இருவகை புண்ணியச் செயல்களாகப் பிரித்துக் காட்டியுள்ளனர். ஒன்று - நாம் தேடிச் செல்லும் புண்ணியம். மற்றொன்று - நம்மை நாடிவரும் புண்ணியம்!. நாம் தேடிச்செல்லும் புண்ணியங்கள் எவை என்பதை நாம் தெரிந்துகொள்ளுதல் அவசியம்.
1.
திருத்தலங்கள் தரிசனம்
2. புண்ணிய நதிகளில் ஸ்நானம்,
3.தினமும் செய்யும் தான, தர்மங்கள்,
4.
திருக்கோயில் உழவாரப் பணிகள்,
5. சிதிலமடைந்த திருக்கோயில்களைச் சீரமைத்தல்,
6.
திருக்கோயில்களில் தீபம் ஏற்றுதல்,
 7. பகவானுக்குப் புஷ்ப கைங்கர்யம் செய்தல்,
8.
பகவானுக்குத் தினமும் பூஜை செய்தல்,
 9. பித்ரு (தந்தை), மாத்ரு (தாய்) பூஜைகள்.
 10. அனாதைப் பிரேத ஸம்ஸ்காரம்.
இவையனைத்தும் நாம் செய்யவேண்டிய மிக முக்கிய கடமைகளாகும்.. அளவற்ற புண்ணியத்தை நமக்கு அளிப்பவை இவை. இது போன்றே நம்மை நாடிவரும் புண்ணியம் :1. நவராத்திரி, 2. புரட்டாசி சனிக்கிழமைகள், 3. ஏகாதசி விரதம், 4. பிரதோஷம், 5. சஷ்டி, 6. சிரவணம், 7. கிருத்திகை ஆகிய தினங்களில் உபவாசம், 8. மகாளய பட்சம் 15 நாட்கள், 9. தீபாவளி அன்று இல்லந்தோறும் எழுந்தருளும் கங்கா தீர்த்தத்தில் ஸ்நானம் (அதிகாலை 3.00 முதல் 4.00 வரை). 10. ஆண்டுத் திதி அன்று நம் இல்லத்திற்கு எழுந்தருளும் பித்ருக்களைப் பூஜித்தல்..
பித்ருக்களின் கருணை
அளவற்ற புண்ணியத்தை மிக, மிக எளிதில் நமக்குப் பெற்றுத் தருவது மறைந்த நம் முன்னோர்களை சிரார்த்தம் மற்றும் தர்ப்பணம் போன்றவற்றால் பூஜிப்பதாகும். அமாவாசை, மாதப் பிறப்பு, சூரிய கிரகணம், சந்திர கிரகணம், பித்ரு பட்சம் (மகாளய பட்சம்) ஆகிய புண்ணிய காலங்களில் நாம் செய்யும் பித்ரு பூஜைகள் நம் குழந் தைகளுக்கு இப்போதே நாம் சேர்த்து வைக்கும் வைப்புநிதி (Deposit) ஆகும். பல தலைமுறைகளுக்கு இப் புண்ணிய பலன்கள் நம் குழந்தைகளுக்கு நாம் சேர்த்து வைக்கும் பூர்வீக சொத்து என தர்ம சாஸ்திரம் கூறுகிறது. பித்ரு பூஜைகளினால் நாம் சேர்த்து வைக்கும் புண்ணியத்தை நம் குழந்தைகள் பூர்வீக சொத்தாக அனுபவிக்க லாம். ஆனால், அதனை அழிக்க முடியாது. இது எப்படி என்று கேட்கலாம்.
அதாவது, ஒருவர் செய்யும் புண்ணியம், அவர் செய்யும் பாவங்களால் கரைந்துவிடும். ஒரு பக்கம் புண்ணிய காரியங்களைச் செய்து கொண்டே, மறுபக்கம் பாவச் செயல்களையும் செய்வது, அடியில்லாத பாத்திரத்தில் நீர் நிரப்ப முயற்சிப்பதைப் போலாகும். ஆனால், மறைந்த நம் மூதாதையர்களுக்குச் செய்யும் திதிபூஜைகள், தர்ப்பணம் ஆகியவற்றால் நமக்குக் கிடைக்கும் புண்ணிய பலனை, எதனாலும், எவராலும் அழிக்க முடியாது. அது, தலைமுறை தலைமுறையாக, நம் குழந்தைகள், பேரன்கள், பேத்திகள் ஆகியோருக்கு நாம் வைத்துச் செல்லும் சாஸ்வதமான சொத்தாக நீடிக்கும்.
ஆதலால்தான், நாம் பித்ரு பூஜைகளை அவசியம் செய்து வர வேண்டும் என மகரிஷிகள் உபதேசித்துள்ளனர்.

பித்ருக்கள் ஏன் நேரில் வருவதில்லை..?
திரேதாயுகத்தின் முதல் பகுதி வரையில், பித்ருக்கள் நேரில் எழுந்தருளி நாம் செய்யும் திதி பூஜைகளை ஏற்று வந்தனர். அளவற்ற தேஜஸ்(ஒளி)ஸுடன் வரும் அவர்களை, புத்திரர்கள் தங்கள் இல்லங்களின் வாயிலில் காத்திருந்து, பாத பூஜை செய்து, வீட்டினுள் வரவேற்று, ஆசனங்கள் சமர்ப்பித்து, விசேஷ அன்னம் அளித்து, குடும்பத்தினர் அனைவரும் பித்ருக்களின் திருவடிகளில் வணங்கி, அவர்களது ஆசியைப் பெற்று, வழி அனுப்புவது வழக்கத்தில் இருந்து வந்தது.
ஸ்ரீ ராமபிரான், தன் தேவி ஸ்ரீ சீதையுடன் கயா திருத்தலத்திற்கு எழுந்தருளி, கயா சிரார்த்தம் செய்தபோது, தசரதர், ரகு மற்றும் அஜன் ஆகிய பித்ருக்கள் நேரில் வந்து, பல்குனி நதிக் கரையில் சிரார்த்தத்தை ஏற்று, ஸ்ரீராமபிரானையும், ஸ்ரீசீதாதேவியையும் ஆசீர்வதித்த நிகழ்ச்சியை கயா திருத்தல வரலாறு விவரித்துள்ளது.
துவாபர யுகத்தின் பிற்பகுதியிலிருந்து மனிதர்களின் தேஜஸ் (ஒளி), வீர்யம் (சக்தி), ஆரோக்கியம், உருவம் ஆகியவை படிப்படியாகக் குறைந்துகொண்டே வந்ததால், பித்ருக்கள் எழுந்தருளும்போது அவர்களின் ஒளியையும், சக்தியையும் தாங்கிக் கொள்ளும் பலம் கண்களுக்கு இல்லாமல் போய்விட்டது. அதனால்தான், இக்கலியுகத்தில் சிரார்த்தங்களின் போது நம் முன்னோர்கள் வருவதை நம்மால் பார்க்க முடியவில்லை.
கலியில் பித்ருக்கள் நேரில் வரும் புனித தலங்கள்!
கலியுகத்தில் நம் முன்னோர்கள், சிரார்த்தங்கள் மற்றும் அமாவாசை, மாதப் பிறப்பு, கிரகண புண்ணிய காலங்கள் ஆகியவற்றின்போது செய்யும் தர்ப்பணம் ஆகியவற்றை வசுக்கள், ருத்ரர்கள், ஆதித்யர்கள் ஆகிய தேவர்களின் மூலம், அவர்களது அம்சமாகவே வந்து நாம் செய்யும் பூஜைகளை ஏற்று நம்மை ஆசிர்வதித்து, அதன் பின்பு அவர்களின் புண்ணிய உலகங்களுக்குச் செல்கின்றனர் என்பதைப் புராதன நூல்கள் விளக்கியுள்ளன.

மகாளய பட்சம் 15 நாட்கள் மற்றும் மகாளய அமாவாசை ஆகிய விசேஷ காலங்களிலும், கயை, குருக்ஷேத்திரம் (சூரிய குண்டம், பிரம்மசரஸ்), பதரி ஆஸ்ரமம் (பிரம்ம கபாலம்), வர்க்கலை (ஜனார்த்தனம் - கேரளம்), கோமுகம், மானஸசரோவரம் ஆகிய ஆறு(6) பரம பவித்திரமான இடங்களில் நாம் அளிக்கும் பித்ரு பூஜையையும், அன்னத்தையும் நமது முன்னோர்கள் நேரில் வந்து, ஏற்று நம்மை ஆசீர்வதிக்கின்றனர்.

ஒவ்வொருவரும் புண்ணிய காரியங்களைச் செய்து, அதன் பலனாக கடன், வறுமை, நோய்கள் மற்றும் இதர துன்பங்கள் நீங்கி நல்வாழ்வு பெற்று மகிழ வேண்டும் என்பதே எங்கள் ஆசை! அதற்காகத்தான், தேடிச்செல்ல வேண்டிய புண்ணியங்களையும், நம்மை நாடிவரும் புண்ணியங்களையும் தவறாமல் ஏற்று பிறவி என்னும் ஒப்பற்ற வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொண்டு பகவானின் பரிபூரணமான கருணையைப் பெற வேண்டுகிறோம். புண்ணியம் என்னும் ஒப்பற்ற வழியிருக்க நாம் ஏன் வருந்த வேண்டும்?

தோஷத்தில் மிகக் கொடிய தோஷம் பித்ரு தோஷம். இவர்களது குடும்பம் ஜோதிட ரீதியில் எவ்வளவு அதிர்ஷ்ட்டமான கிரகநிலைகள் பெற்று இருந்தாலும் அந்தப் பலனை இவர்கள் அடைய முடியாமல் பித்ருக்களும் பித்ரு தேவதைகளும் தடை செய்கிறார்கள்.

பித்ருக்களின் சாபம் கடவுள் நமக்குத் தரும் வரங்களையே தடுத்து நிறுத்தும் சக்தியுடையது இவர்களது குடும்பம் ஜோதிட ரீதியில் எவ்வளவு அதிர்ஷ்ட்டமான கிரகநிலைகள் பெற்று இருந்தாலும் அந்தப் பலனை இவர்கள் அடைய முடியாமல் பித்ருக்களும் பித்ரு தேவதைகளும் தடை செய்கிறார்கள் ஒருவன் தனது தாய் தந்தைக்கு சிரார்த்தம் செய்யாமல் எனக்குச் செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக் கொள்வதில்லை என விஷ்ணுவும் சிவனும் கூறியுள்ளனர்.
நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ரு தோஷம் எனப்படும்.

ராமேஸ்வரம் சென்று தில ஹோமம் செய்வதும், கயா சிரார்த்தம் செய்வதும், காசி, அலகாபாத், பத்ரிநாத் சென்று  திவசம் செய்வதும், திருவெண்காடு சென்று திதி கொடுப்பதும் இந்த தோஷத்துக்குப் பரிகாரம். குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில் இறந்திருந்தாலோ, அல்லது தற்கொலை செய்துகொண்டிருந்தாலோ மட்டுமே தில ஹோமம் செய்யவேண்டும். அனைவரும் இயற்கை மரணம் அடைந்திருந்தால், தில ஹோமம் செய்யவேண்டியதில்லை. 

அந்த தோஷத்தினால் ஏற்படும் தீய விளைவுகள் என்ன
 இந்த தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் நடக்காது. அல்லது மிகவும் தாமதமாக நடக்கும். விவாகரத்து ஏற்படலாம். அல்லது தம்பதியரிடையே அன்னியோன்னியம் இருக்காது. அல்லது குழந்தைப் பாக்கியம் இருக்காது. 

ஒரு சிலருக்கு கடுமையான உடல் உபாதைகள், மனநோய் காரணமாக தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கும். ஒரு சிலருக்கு பலமுறை திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு. கலப்புத் திருமணம் நடக்கவும், பெற்றொருக்குத் தெரியாமல் ரகசியத் திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு. இந்த தோஷம் உள்ள சில தம்பதிகள் ஒருவருக்கொருவர் உண்மையானவர்களாக நடந்துகொள்வதில்லை. 

எத்தகைய பாவங்கள் செய்திருந்தால், இந்த தோஷம் வரும்? 
 இந்த தோஷம் வருவதற்கான கரணங்கள்:
 கருச்சிதைவு செய்துகொண்டால், இந்த தோஷம் வரும். பெற்றோர்களின் இறுதி நாட்களில் அவர்களை சரிவர கவனிக்காமல் இருந்து அதனால் அவர்கள் மன வேதனை அடைந்தால், பித்ரு தோஷம் வரும். ஒருவரின் இளைய தாரத்துப் பிள்ளைகள் மூத்த அன்னைக்கு திதி கொடுக்காவிட்டாலும் வரும். தந்தைக்கு எத்தனை தாரங்கள் இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் தவறாமல், திவசம் செய்யவேண்டும்.

ஆண்வாரிசு இல்லாத சித்தப்பா, பெரியப்பா, அத்தை, சகோதரர் ஆகியோருக்கு திதி கொடுக்காவிட்டால் வரும். துர்மரணம் அடைந்தவர்களுக்கு திதி கொடுப்பதோடு மட்டுமின்றி கயா சென்று கூப சிரார்த்தம் செய்யாவிடில் பித்ரு தோஷம் வரும். 

தெய்வ வழிபாட்டை விட சிறந்த வழிபாடு முன்னோரை வழிபடும் நாட்களில் அமாவாசைகளில் தை அமாவாசை மிக முக்கியமானது. ஆடி மாத அமாவாசையன்று நம்மைக் காண வரும் பித்ருக்கள் எனப்படும் முன்னோர் தை அமாவாசையன்று விடை பெற்று திரும்புவதாக ஐதீகம்.

காசியாத்திரை செல்ல வேண்டும் என நினைப்பவர்கள், காசிக்கு மட்டும் செல்வதால் யாத்திரை நிறைவு பெற்றுவிடாது. காசிக்குச் செல்ல நினைப்பவர்கள் முதலில் செல்ல வேண்டிய புனிதத் தலம் ராமேஸ்வரம். 
ராமநாத ஸ்வாமி கோயில் ராமேஸ்வரம்

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் நீராடிய பின் கடலில் மூன்று முறை மூழ்கி எழ வேண்டும். ஒவ்வொரு முறையும் ஒரு கைப்பிடி மணல் எடுக்க வேண்டும்.
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a1/Agni_theerth%2C_Rameshwaram%2C_Tamilnadu%2C_India.jpg/250px-Agni_theerth%2C_Rameshwaram%2C_Tamilnadu%2C_India.jpg
அக்னி தீர்த்தம்
முதல் கைப்பிடி மண்ணை, `சேது மாதவ லிங்கம்' என்ற பெயரிலும், இரண்டாவது கைப்பிடி மண்ணை, `பிந்து மாதவ லிங்கம்' என்ற பெயரிலும், மூன்றாவது கைப்பிடி மண்ணை, `வேணு மாதவ லிங்கம்' என்ற பெயரிலும் மூன்று லிங்கங்களைச் செய்து, அந்த லிங்கங்களைத் தலைவாழை இலையில் வைத்து பூஜை செய்ய வேண்டும். பூஜை செய்ததும், பிந்து மாதவ லிங்கம், சேது, மாதவ லிங்கம் ஆகியவற்றைக் கடலில் விட்டுவிட வேண்டும். 
சிவன்
சேது மாதவ லிங்கத்தைப் பத்திரமாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு முன்னோர்களுக்குத் தர்ப்பணம் முதலியவற்றைக் கொடுக்க வேண்டும். கொடுத்து முடித்துவிட்டு, ராமநாத சுவாமி ஆலயத்தில் இருக்கும் தீர்த்தங்களில் நீராட வேண்டும். கோடி தீர்த்தத்திலிருந்து ஒரு கேனில் தீர்த்தத்தை எடுத்து பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும்.
ராமநாதசுவாமியை மனமுருக வேண்டிக்கொண்டு சொந்த ஊருக்கு வந்து அங்கிருந்து காசியாத்திரையை மேற்கொள்ளலாம். உடனடியாக, காசிக்குச் செல்ல முடியாவிட்டால், சேது லிங்கத்தையும் கோடி தீர்த்தத்தையும் பூஜையறையில் வைத்து, தினமும் பூஜை செய்ய வேண்டும். காசிக்குப் புறப்படும்போது வேணு லிங்கத்தையும் கோடி தீர்த்தத்தையும் எடுத்துச் செல்ல வேண்டும்.
காசி யாத்திரையின்போது முதலில் அலகாபாத் எனப்படும் பிரயாகைக்குத்தான் செல்ல வேண்டும். அங்கிருக்கும் திரிவேணி சங்கமத்தில், நாம் கொண்டு வந்திருந்த வேணு மாதவ லிங்கத்தைக் கரைக்க வேண்டும்.
இதன் பிறகு நாம் காசிக்குச் சென்று கங்கையில் நீராடி நாம் கொண்டு வந்திருக்கும் கோடி தீர்த்தத்தால் காசி விஸ்வநாதரை அபிஷேகம் செய்து பூஜிக்க வேண்டும். பின்னர் அங்கிருக்கும் அன்னபூரணி, விசாலாட்சி ஆகிய ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்து இறுதியில் கால பைரவரை வழிபட்டு, கயாவுக்குச் செல்ல வேண்டும். 
காசி யாத்திரை: கங்கையில் நீராடுதல்
கயாவில் நம் மூதாதையர்களுக்குச் சிராத்தங்களை முறையாகச் செய்ய வேண்டும். அதன்பிறகு, மீண்டும் காசிக்கு வந்து கங்கையில் நீராடி காசி விஸ்வநாதரை வணங்க வேண்டும். பிறகு மீண்டும் பிரயாகை வந்து ஒரு கேனில் கங்கை தீர்த்தத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வரவேண்டும். பிறகு வீட்டிலிருந்து புறப்பட்டு ராமேஸ்வரம் சென்று ராமநாத சுவாமிக்கு கங்கை நீரால் அபிஷேகம் செய்து வழிபட்டுவிட்டு வரும்போது தான் நம் காசியாத்திரை நிறைவடையும்.   இதன் மூலம் பித்ரு தோஷம் உள்ளிட்ட சகல தோஷங்களும் நீங்கி, வாழ்க்கையில் மகிழ்ச்சியே எப்போதும் நிறைந்திருக்கும்..
ஆத்ம ருணம் தேவ ருணம் பித்ரு ருணம் என்ற மூன்று கடன்களுடன் நாம் பிறக்கின்றோம் .இவைகளை அகற்றினால் தான் முக்தி பெறலாம். ப்ரயாகையில் ஆத்ம ருணம்;காசியில் தேவ ருணம் கயா வில் பித்ரு ருணம் அகலும் முக்தி பெற விரும்புவோர் அவசியம் இதை செய்ய வேண்டும் இந்த  கடன்களிலிருந்து விடுபடத்தான் தெய்வங்களையும் பித்ருக்களையும் ஆராதிக்க வேண்டும். தீர்த்தாடனம் செய்ய வேண்டும் என யாத்ரா கல்பம்  கூறுகிறது. மத்ஸ்ய புராணம் வாயு புராணம் பத்ம புராணங்களில் இந்த ப்ரயாகை காசி கயா யாத்திரை மிக சிறந்தது என கூறுகின்றது.


ப்ரயாகையில் செய்ய வேண்டியது 
அலகாபாத்திலிருந்து 6 கிலோ மீட்டரில் உள்ளது. ப்ரயாகை; தாரா கஞ்ச் என்ற ரயில்வே ஸ்டேஷனுக்கு மிக சமீபம்.. இங்கு சிவ மடம் உள்ளது. இந்த சிவ மடத்தில் உள்ள பண்டிதரிடம் என்னால் இவ்வளவு தான் முடியும் என சொல்லி பணம் கொடுத்தால் அதற்கு தகுந்த மாதிரி அவர் உங்களுக்கு எல்லாம் செய்து வைக்கிறார்..

1.
ப்ராஹ்மணர்களுக்கு தக்ஷிணை தந்து த்ரிவேணி ஸ்நானம்/ வேணி தானம் செய்ய முதலில் யோக்கியதை உண்டாவதற்கு அநுமதி பெற வேண்டும்.

2
ஸகல பாபங்களும் அகல ப்ராஜாபத்ய க்ருச்சர தானம் செய்ய வேண்டும். இதற்கு ஒரு மட்டை தேங்காயுடன் தக்ஷிணை ப்ராமணருக்கு கொடுக்கவும்.

3.
பார்வதி பரமேஸ்வரர் ; லக்ஷ்மி நாராயணர் அருளை பெற பல தாநம் செய்ய வேண்டும். பழம் தாம்பூலம், தக்ஷிணை தர வேண்டும்.

4.
கங்கா புத்ரர்களாக க்ஷேத்ர வாஸிகளாக உள்ளவருக்கு முழு தேங்காயும் தக்ஷிணையும் தந்து தீர்த்த ராஜனது பேட்டி பெற வேண்டும்.

5.
ஸ்நானம் செய்த பிறகு நமது பீடை அகல நாம் உடுத்திய புதிய அல்லது பழைய வஸ்திரத்தை பண்டாவிற்கு தக்ஷிணையுடன் தானமாக தர வேண்டும்..

6
ஸேதுவிலிருந்து கொண்டுவந்த வேணி மாதவர் மணலை பூஜை செய்து ஜலத்தில் போட வேண்டும்.

7.
மறு நாள் தீர்த்த சிராத்தம் செய்ய வேண்டும். விசுவே தேவருக்கு ஒருவர்; அப்பா வர்க்கம் ஒருவர்; அம்மா வர்க்கம் ஒருவர்; தாயின் அப்பா வர்க்கம் ஒருவர்; தாயின் அம்மா வர்க்கம் ஒருவர்; காருண்ய பித்ருக்கள் ஒருவர். மொத்தம் 6 ப்ராமணர்கள். வரித்து விதிப்படி வேஷ்டி அளித்து தீர்த்த சிராத்தம் செய்ய வேண்டும். சிராத்தத்திற்கு முன்பே பரேஹணி தர்பணம் செய்ய வேண்டும்.17 பிண்டங்கள் வைத்து பிண்ட ப்ரதானம் செய்ய வேண்டும்;
அப்பா வழி 3; அம்மா வழி 3; தாயின் அப்பா வழி 3; தாயின் அம்மா வழி 3; காருண்ய பித்ருக்கள்-1; தர்ம பிண்டம் (க்ஷேத்ர பிண்டம்) -4. மொத்தம்=17
தசதானம் அல்லது பஞ்ச தானம் செய்வது அவசியம்..

8.
மூன்றாவது நாள்:- தம்பதீ பூஜை செய்ய வேண்டும். வேட்டி; புடவை; தக்ஷிணை; ஸெளபாக்கிய த்ரவ்யங்கள்; மெட்டி; திருமாங்கல்யம்.. தாம்பூலம் புஷ்பம்; பழம்; நலங்கு சாமான்; பால் கொடுக்கும் கிண்ணம் முதலியன
ஸங்கல்பம் செய்து முடித்துக்கொண்டு படகு (போட்) மூலம் கங்கை, யமுனை; ஸரஸ்வதி என்ற மூன்று நதிகளும் கூடும் த்ரிவேணிக்கு செல்ல வேண்டும் இங்கு .கங்கை ஜலம் பிடிக்க ப்லாஸ்டிக் கேன் கொண்டு செல்ல வேண்டும்

படகில் பண்டா மந்திரம் சொல்லி இந்த மூன்று நதிகளையும் பூஜிக்க சொல்வான் .த்ரிவேணி ஸங்கமத்தில் போட்டை நிறுத்துவான். முதலில் புருஷர்கள் வபனம் செய்து கொள்ள வேண்டும். இனி வபனம் கயா சிராத்தம் முடிந்த பிறகு தான் செய்து கொள்ள வேண்டும் அது வரை வபனம் இல்லை..அதற்கு முன் மனைவி தன் புருஷனை மாதவனாக கருதி பூஜை செய்து கல்யாணம் ஆனது முதல் இதுவரை தான் புருஷனுக்கு செய்த அபசாரங்களை மன்னிக்கும்படி கேட்க வேண்டும். அப்படியே அதை மன்னித்து மனைவியை த்ரிவேணியாக கருதி பூஜிக்க வேண்டும்
.
கணவன் மனைவியின் தலை வாரி பின்னல் போட்டு புஷ்பம் வைத்து தலை முடியின் நுனியில் இரண்டு அங்குலம் கத்திரித்து மஞ்சள் குங்குமம் அக்ஷதை அப்ரஹ பொடி,சந்தனம் காதோலை கருகமணி வெற்றிலை பாக்கு இவைகளுடன் வைத்து மனைவியிடம் கொடுக்க அதை மனைவி பண்டாவிடம் கொடுக்க வேண்டும். பண்டா அதை ஜலத்தில் போடுவார். வெற்றிலை மாத்திரம் மிதந்து சென்று விடும் .முறத்தில் உள்ள மற்ற பொருட்களை பண்டா இந்த இடத்தில் போட மாட்டார்.

முடி மேலே மிதக்காமல் உள்ளே சென்று விடும். த்ரிவேணிக்கு மூங்கில் (வேணு) தாநம் செய்தால் ப்ரியம். எனவே சிறிய முறத்தில் சீப்பு கண்ணாடி . குங்குமசிமிழ்;, மஞ்சள்பொடி, அப்ரஹ பொடி; அரிசி; வெற்றிலை; பாக்கு பழம்; ரவிக்கை; தக்ஷிணை இவைகளை வைத்து மற்றொரு முறத்தால் மூடி தானம் செய்ய வேண்டும்.

வேணி தானம் செய்த பின் தம்பதிகள் இருவரும் சேர்ந்து யமுனையில் ஸ்நானம் செய்து போட்டின் வழியாக கோட்டை அருகே செல்ல வேண்டும்.அங்கு கோட்டைக்குள் பூமிக்கு அடியே ஒரு பெரிய கோவில் உள்ளது.அதில் மனித உரு அளவில் சந்திரன்; சூரியன்; யமன்; வால்மீகி; வ்யாஸர்; துர்வாஸ ர்;தத்தாத்ரேயர் முதலிய விக்கிரஹங்களும் ஆலமரத்தின் அடியும் தெரிகிறது; இந்த ஆல மரம் அக்ஷயமானது இந்த ஆல மரத்தில் மத்ய பாகம் காசியிலும்;நுனி பாகம் கயா விலும் உள்ளது; ப்ரளய காலத்தில் இந்தஇலையின் மீது பகவான் படுத்து இருப்பார்.

இங்கிருந்து வீட்டிற்கு போகும் வழியில் பூமியில் ஹனுமார் படுத்த வண்ணம் இருக்கும் கோவிலில் சென்று பார்த்து விட்டு செல்ல வேண்டும்.. ஆனந்த பவன், பரத்வாஜர் ஆச்ரமத்தில் ஸப்த ரிஷிகள்; பார்வதி பரமேஸ்வரர்; காளி வாசுகி; ஒரு குகை இவைகள் இருக்கின்றன. காஞ்சி சங்கராசார்யார் விமான மணடபம் பார்க்க வேண்டிய ஒன்று வேணி மாதவரை இங்கு பார்க்க வேண்டும். ராமானுஜ மடம்; மத்வ மடம் பார்க்கலாம். 

ப்ரயாகையின் காவல் தெய்வம் வாஸுகி என்ற ஸர்ப்ப ராஜன். இந்த ஆலயத்தில் அம்பு படுக்கையில் பீஷ்மர் படுத்து இருப்பதையும் பார்க்கலாம்.
அலோபி மாதா சோமேச லிங்கம் பார்க்கலாம் பெரு வேள்விகள் கண்ட பூமி ஆனதால் ப்ரயாகை என்று அழைக்க படுகிறதுசிராத்தம் ஆனபிறகு வேணி மாதவரை அவசியம் தரிசனம் செய்ய வேண்டும்.மாதவர் கோவில் ஆதி சேஷன் கோவில் உள்ளது. கங்கை ஜலம் வேண்டியதை வாங்கி ஈய பற்று வைத்து ஊருக்கு எடுத்து செல்ல தயார் செய்து கொள்ளலாம் .கங்கையை பூஜித்து கங்கா ஸமாராதனை செய்து ஆச்சார்ய ஸபாவனை செய்து கிளம்ப வேண்டும் காசிக்கு.

தேசீய நெடுஞ்சாலை அலகாபாத்திலிருந்து காசிக்கு 170 கிலோ மீட்டர். உள்ளது. நடுவில் 85 கிலோ மீட்டரில் விந்தியாசல் உள்ளது. இங்கு துர்க்கா விந்தியா வாஸினி என்ற பெயருடன் அருள் பாலிக்கிறாள்.காசியிலிருந்து கயா 276 கிலோ மீடர். ரயிலில் சென்றால் 220 கிலோ மீட்டர். கோவா சூப்பர் எக்ஸ்ப்ரஸ் ( 12358 ) 4 மணி நேரத்தில் சென்று விடலாம்..

ப்ரயாகையில் ஆண்கள் வபநம் பெண்கள் வேணி தாநம் செய்து வேணி மாதவர் உள்ளிட்ட தெய்வங்களை வழிபட வேண்டும் .இதனால் ஆத்ம ருணம் விலகுகிறது. காசியில் கங்கா ஸ்நானம் செய்து கால பைரவரிடமும் தன்டபாணியிடமும்
தண்டத்தால் அடி பெற்றுக் கொண்டு அங்கு பல தெய்வங்களை வழி படுவதால் தேவ ருணம் விலகும். ராமேஸ்வரம் ப்ரயாகை; காசி; கயா ஆகிய க்ஷேத்ரங்களில் தீர்த்த சிராத்தம் செய்து விஷ்ணு பாதத்திலும் அக்ஷய வட சாயையிலும் பிண்டங்கள் இடுவதால் பித்ரு ருணம் விலகும்.
.
திரிவேணிக்கு முதல் முறை போகும் போது மட்டும் தான் வேணி தானம். அதன் பிறகு எத்தனை முறை சென்றாலும் வேணிதானம் செய்ய வேண்டியது இல்லை.
சாஸ்திரிகள் வீட்டிலேயே ஸ்நானம் செய்து விட்டு பிள்ளையார் பூஜை மஹா ஸங்கல்பம் செய்து கிரஹ ப்ரீதி க்ருச்சர ப்ரதிநிதி தானம் செய்து விட்டு மனைவி கணவனுக்கு பாத பூஜை செய்து கணவனின் நல்வாழ்வு வேண்டி வேணி தானம் செய்ய அநுமதி கேட்டு பெற வேண்டும். பிறகு நதிக்கரை செல்ல வேண்டும்.யுவதிகளும் வேணி தானம் செய்ய வேண்டும். வேணி தானம் செய்வதனால் ஸெளபாக்கியம், செல்வ செழிப்பு சந்ததி ஆயுள் விருத்தி பதியிடம் ப்ரியமும் உண்டாகும்... பரித்ராஜகோபனிஷத் எல்லா பாபங்களும் தலை முடியில் போய் தங்குகிறது. ஆதலால் முடியை சுத்தமாக எடுத்து.காணிக்கையாக அளித்து விட வேண்டும் என்கிறது.

வேணி தானம் செய்யும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள்.
திரிவேணி தேவிக்கு அநேக நமஸ்காரங்கள். எனக்கு எப்போதும் பாதி வ்ரத்யம் கொடுப்பாயாக; .என் ஸெளபாக்கியம் பெருகட்டும்;. நான் இங்கு வந்து வேணி தானம் செய்ததால் இந்த ஜன்மாவிலும் முன் ஜன்மாக்களிலிலும் நான் செய்த பாபங்கள் என்னை விட்டு நீங்கட்டும்..

வேணி தானம் சுக்கில பக்ஷத்தில் செய்ய வேண்டும். திதி, நக்ஷத்திரம் இரண்டும் நன்மை செய்ய க்கூடிய தினம் பார்த்து ப்ரயாகைக்கு சென்ற நாளன்றோ அல்லது மறு நாளோ வேணி தானம் செய்ய வேண்டும். தலைமுடி பிரிந்து விடா வண்ணம் முடிந்து கொண்டு முகத்தில் மஞ்சள் பூசிக்கொண்டு கணவன் மனைவி இருவரும் கைகோர்த்து கொண்டு இருவரும் சேர்ந்து திரிவேணி சங்கம ஸ்நானம் செய்ய வேண்டும் .

பிறகு இருவரும் படகில் (boat) வந்து கிழக்கு அல்லது வடக்கு நோக்கி உட்கார்ந்து மனைவி கணவனிடம் வேணி தானம் செய்ய அனுமதி வாங்கி பின்னர் கணவன் மனைவியின் தலை முடியை பின்னி விட்டு பூச்சூடி தலை முடியை இரண்டு அங்குலம் நுனியில் வெட்டி மனைவியிடம் கொடுக்க வேண்டும். மனைவி அதை ஸெளபாக்கிய த்ரவ்யங்களுடன் சேர்த்து பண்டாவிடம் தானம் செய்து விட்டு பண்டாவிடம் முடியை த்ரிவேணியில் போட சொல்லி கொடுக்க வேண்டும் முடி மிதந்து வெளியே போகாமல் தண்ணிரில் அடியின் செல்வது நல்லது. பிறகு தம்பதிகள் கை கோர்த்து மறுபடியும் ஸ்நானம்: போட்டிற்கு வந்து வேறு காய்ந்த ஆடை உடுத்தி த்ரிவேணிக்கு பூஜை செய்ய வேண்டும். ப்ராஹ்மணர்களுக்கும், சுமங்கலிகளுக்கும் தானம் செய்ய வேண்டும். பிறகு தம்பதியர் வீட்டுக்கு வந்து தம்பதி பூஜை செய்து சாப்பாடு போட வேண்டும். பிறகு தம்பதியர் சாப்பிட வேண்டும். .
தலை முடி நுனியை கத்தரித்து பண்டாவிற்கு தானமாக கொடுத்து அதை கங்கை, யமுனை ஸரஸ்வதி சங்கமிக்கு மிடத்தில் போடச்சொல்லி முத்தேவியற்கும் காணிக்கையாக போடுவதற்கு வேணீ தானம் எனப்பெயர்...


வேனி மாதவர் மணலை தண்ணீரில் கரைக்க வேண்டும். ஸங்கம இடத்திலிருந்து சற்று நகர்ந்து சுத்த கங்கை நீரை கேனில் பிடித்து கொள்ள வேண்டும்.

த்ரிவேணி ஸங்கமம் இடத்திலும் மற்ற இடங்களிலும் சுமங்கலிகளுக்கு தாம்பூலம் பழம் புஷ்பம் ரவிக்கை துண்டு. கண்ணாடி சீப்பு; மஞ்சள் பொடி; குங்குமம்; கண்ணாடி வளையல்;; கண்மை; மருதாணி பவுடர் தக்ஷிணை கொடுக்க வேண்டும் 

வீட்டிற்கு வந்து ஈர வஸ்த்ரம் தானம் செய்ய வேண்டும்.
தீர்த்த சிராத்தம் செய்ய வேண்டும். 17 பிண்டங்கள் பிண்ட தானம்; தர்பணம் செய்ய வேண்டும். சிராத்தம் முடித்த பிற்கு வேணி மாதவர் கோயில் செல்ல வேண்டும். தசதானம் செய்ய வேண்டும்..

த்ரிவேணி கரையில் பூஜை செய்யும் போது அந்தந்த தேவிகளுக்கு இந்த ப்ரார்த்தனைகளும் சொல்லலாம். த்ரிவேணி சங்கமத்தில் கங்கைக்கு பூஜை செய்யும் போது இந்த ஸ்லோகம் சொல்லலாம்.

விஷ்ணு பாதோத்பவே தேவி மாதவ ப்ரிய தேவதே தர்சனே மம பாபம் மே
தஹத்வக்நிரிவேந்தனம். லோக த்ரயேபி தீர்த்தாணி யானி ஸந்தி ச தேவதாஹா. தத்
ஸ்வரூபா த்வமேதாஸி பாஹி ந ஹ பாப ஸங்கடாத்
கங்கே தேவி நமஸ்துப்யம் சிவசூடா விராஜிதே சரணத்ராண ஸம்பன்னே த்ராஹி மாம் சரணாகதம்.

யமுநாவிற்கு பூஜை செய்யும் போது இந்த ஸ்லோகம் சொல்லலாம்.

இந்த்ர நீலோத்பலாகாரே பானுகன்யே யசஸ்வினி ஸர்வ தேவஸ்துதே மாதஹ யமுநே த்வாம் நமாம்யஹம்
ஸர்வ தீர்த்த க்ருதாவாஸே ஸர்வ காம வரப்ரதே ஸர்வ பாப க்ருதத்வம்ஸே நமஸ்தே விஸ்வபூஜிதே.
ஸம்ஞ்ஞாகர்ப ஸமுத்பூதே ஸம்ஜ்ஞோசாரண புண்யதே விஷ்ணு ப்ரியதமே தேவி யமஜ்யேஷ்டே நமோ நமஹ.

ஸரஸ்வதி நதிக்கு பூஜை செய்யும்போது இதை சொல்லலாம்.

ப்ரஜாபதி முக்கோத்பூதே ப்ரணதார்தி ப்ரபஞ்சினி ப்ரயாக மிலிதே தேவி ஸரஸ்வதி நமோஸ்துதே
பத்மராக தலாபாஸே பத்மகர்ப அருணேக்ஷனே பத்மமாலா வினிதாங்கே பாபக்ந்யை தே நமோநமஹ
வீணாவாத ரஸாபிஞ்ஞே வீணயா ஸமலங்க்ருதே கீத வீணாரவே மாதஹ பாஹிமாம் சரணாகதம்;

த்ரீவேணியில் பூஜிக்கும் போது சொல்லக்கூடிய ஸ்லோகம்

த்ரிவர்ணே த்ரியம்பிகே தேவி த்ரிவித –அக- விநாசினி த்ரி மார்கே த்ரிகுணே த்ராஹி த்ரிவேணி சரணாகதம்; ஸம்சார அநல சந்தர்பம் காம க்ரோதாதி வேஷ்டிதம் பதிதம் த்வத் பாதாப்ஜே மாம் சீதளம் குரு வேணிகே
தீர்த்த ராஜே ப்ரயாகே அஸ்மின் ப்ரத்யக்ஷவாஸி ஜகத் ஹிதே நானா ஜன்ம க்ருதா ப்யாஸாத் பாதகாத் உத்தரஸ்வ மாம்

அரச மரத்தின் வேர் அக்ஷயவடம் காணும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்
ஜடரே அகிலமாதாய த்வயி ஸ்வபிதி மாதவஹ; க்ருத்வா முகாம்புஜே பாதெள நமோ அக்ஷயவடே நமஹ
த்வன்மீலே வஸதே ப்ருஹ்மா தவ மத்யே ஜநார்தனஹ த்வதக்ரே வஸதே சூலி தாத்ருசம் த்வாம் நமாம்யஹம்.

ஸெளவர்ணானி தலான்யஸ்ய ஸப்த பாதாலகா ஜடாஹா யாவன் மண்டல விஸ்தாரோ வடராஜாய தே நமஹ.

வேணி மாதவரை காணும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்;

நீல ஜிமூத ஸங்காச பீத கெளசேய பூஷித ப்ரயாக நிலய ஸ்வாமின் வேணி மாதவ தே நமஹ
சங்க சக்ர கதா பத்ம விபூஷித சதுர்புஜ சதுர்வர்க பலாதார வேணி மாதவ தே நமஹ; த்வத் பாத ப்ரணதம் மாம் த்வம் கமல ஸ்ரீ முகா த்ருசா உத்தரஸ்வ மஹோதார வேணீமாதவ தே நமஹ.

சனகாதி முனிவருக்கு ஆதிசேஷன் உரைத்த த்ரிவேணி தேவி ஸ்தோத்ரம் வ்யாஸர் அருளிச்செய்தது. உடல் இந்திரியங்கள். ப்ராணன் மனது, புத்தி. சித்தம் அஹங்காரம் அஞ்ஞான துகள்கள் போன்ற அனைத்தையும் தனது ப்ரகாசத்தால் ப்ரகாசிக்க செய்யம் த்ரிவேணி தேவி எனக்கு ஸித்தி அளிப்பவளாக இருக்கட்டும்.

ஜாக்ரத் ஸ்வப்ணம் சுஷுப்தி ஆகிய மூன்று நிலைகளிலும் ப்ரகாசிக்க செய்பவளும் இவற்றின் விகாரங்களை மாற்றுபவளும் விகாரங்களை அகற்றுபவளுமாக உபனிஷத்துகளால் போற்றப்படும் த்ரிவேணி தேவி எனக்கு ஸித்தி அளிக்கட்டும்.

ஸுஷுப்தி நிலையில் அறிவு அழியும்போதும் இந்திரியங்களின் ஆளும் சக்தி குறையும் போதும் கூட என்னை நடமாட வைக்கும் த்ரிவேணி தேவி எனக்கு ஸித்தி அளிப்பவளாக இருக்கட்டும். அனைத்து உலக விஷயங்களிலும் தினம் கட்டுண்டு கிடக்கும் எம்மோடு தாமே வந்து கலந்து அபரிமிதமான ப்ரியம் செலுத்தி ஆதரிக்கும் ஸாக்ஷாத் திரிவேணி தேவி எனக்கு ஸித்தி அளிப்பவளாக இருக்கட்டும்.

மறைபொருளான விஞ்ஞானம் பரந்த ப்ரபஞ்சத்தின் பலவிதமான வேறுபாடுகளை ப்ரகாசபடுத்தி ஞானமளிக்கும் த்ரிவேணி தேவி எனக்கு ஸித்தி அளிக்கட்டும்.

ஆரம்பத்தில் ப்ருஹ்மாவையும் மத்தியில் விஷ்ணுவையும் இறுதியில் சிவனையும் ப்ரகாசபடுத்தி காட்டும் திரிவேணி தேவி எனக்கு ஸித்தி அளிக்கட்டும்..

அகார வடிவில் ப்ருஹ்மா விசுவேதேவ ஸ்வரூபி; மகார வடிவில் அக்னி ஸ்வரூபி;என்று தேஜஸ் ஸூத்ரம் சொல்வதை உணர்த்தும் த்ரிவேணி தேவி எனக்கு ஸித்தி அளிக்கட்டும்;

சிவபெருமானின் தேகத்திலிருந்து வேறுபடாதவளும் முக்தி தேவி ஸ்வரூபியும் அஞ்ஞானிகளுக்கு சூன்ய மானவளும் ஓங்கார லக்ஷ்மியுமான திரிவேணீ தேவி எனக்கு ஸித்தி அளிக்கட்டும்
இந்த துதியை தினமும் காலை, மதியம் மாலை சொல்பவர்களுக்கு திரிவேணிதேவி பிரசன்னமாகி அருள் புரிவாள் என்பதில் சந்தேகம் இல்லை;

மந்திர ஸாரமான இந்த ஸ்தோத்ரம் வ்யாஸ பகவான் செய்தது. இதை ஜபிப்பதால் திரிவேணி தேவி நம்மோடு எப்போதும் இருந்து காப்பாற்றுவாள்.. 
 w this blog

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator