Sunday 12 May 2019

காசி யாத்திரை

IndiBlogger - The Largest Indian Blogger Community

\
சித்தி விநாயகர் துணை ஸ்ரீ வேங்கடாசலபதி துணை
ஸ்ரீ கோமதி அம்மன் துணை ஸ்ரீ தர்ம சாஸ்தா துணை

காசி யாத்திரை
எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி


பல நாட்களாக காசி யாத்திரை போகவேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்தது. இதற்காக பல்வேறு யாத்திரை நிறுவனங்கள், சாஸ்த்ரிகள், நண்பர்கள் என்று விசாரித்து வந்தேன். ஒவ்வொரு இடத்திலும் தகவல்கள் வந்து குவிந்தன. என் துணைவியார் என்னத்துக்கு வீணாக கவலைபடுகிறீர்கள்? வேளை வந்தால் எல்லாம் தானாக நடக்கும் என்று எனது மனத்தை தேற்றினார். காசியில் வசிக்கும் ஒரு தூரத்து உறவினர் ஒருவர் இத்தகைய சேவைகளை செய்து வருவதாக ஒருநாள் எனது துணைவியாருக்கு அவர் சகோதரன் தெரிவித்தார், தொலை பேசி எண்ணும் கொடுத்தார். பிறகு என்ன உடனடியாக அவரை தொடர்பு கொண்டு விபரங்கள் அறிந்தேன். நாங்கள் இருவரும் (நானும் துணைவியாரும்) போவது என தீர்மானித்தோம். நாங்கள் கூட்டு குடும்பமாக புது டில்லியில் ஒரே வீட்டில் நான்கு சகோதரரகளும் இருக்கிறோம் ஆகையால் அவர்களுடனும் கலந்து ஆலோசித்தோம். நீண்ட ஆலோசனை, பட்ஜெட், லீவு, பயணம், உடல் சௌகரியம் எல்லாம் உத்தேசித்து நாங்களும் என் தம்பி கணேஷ், அவர் துணைவியும் போவதாக தீர்மானித்தோம். பிறகு என்ன புறப்பாடு, ஏற்பாடு, கும்மாளம், கொண்டாட்டம், களேபரம் கூட்டு குடும்பமல்லவா… எல்லாமே ஒரு திருவிழா போலத்தான் எங்கள் வீட்டில். பயண ஏற்பாடுகள், ரயில் டிக்கெட் பதிவு, பணத்திற்கு ஏற்பாடு, துணி மணி, அலுவலகத்தில் லீவு, என்று ஒவ்வொன்றாய் நடக்க ஆரம்பித்தது. எங்கள் அண்ணா உடல் அசௌகரியத்தினால் வர இயலாது ஆனாலும் தேர்தல் நேரம் ஜாக்கிரதையாய் பயணம் செய்யுங்கள் என்று அறிவுரை கூறினார். தொலைபேசி மூலம் திரு ரவி (எங்கள் உறவினர்) அவர்களை  தொடர்பு கொண்டு 4 பேர் வருகிறோம் ஏப்ரல் 17 முதல் 21 தேதி வரை எங்கள் ப்ரோக்ராம் என்று எல்லா ஏற்பாடுகளையும் செய்ய அட்வான்ஸ் பணமும் அனுப்பி வைத்தோம்.  அந்த நாளும் வந்தது.
16 ஏப்ரல் இரவு Mandwadih சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மூலம் காசிக்கு பயணம் தொடங்கியது. 17ம தேதி திரு ரவி அவர்கள் ரயில் நிலயதிற்கு வந்து ஓட்டலுக்கு அழைத்து சென்றார். ஓட்டலில் உணவு அருந்தி சற்று களைப்பாறினோம். அன்று மதியம் 3 மணியளவில் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு புறப்பட்டோம். ஒரு கோவிலுக்கு போகிறோம் அதன் வரலாறு அறிந்து தரிசனம் செய்தல் நலம்.
காசி விசுவநாதர் கோயில் (ஹிந்தி:काशी विश्वनाथ मंदिरகாசி விஸ்வநாத் மந்தீர்) என்பது மிகவும் புகழ்வாய்ந்த சிவபெருமானின் கோயிலாகும். இக்கோயில் உத்திரப்பிரதேச மாநிலம்வாரணாசி எனும் இடத்தில் அமைந்துள்ளது. வாரணாசி என்று தற்போது அழைக்கப்பட்டாலும்பழங்காலத்தில் காசி என அழைக்கப்பட்டமையினால் இத்தலம் காசி விஸ்வநாதர் கோயில் என அழைக்கப்படுகின்றது. இது ஒரு தேவார வைப்புத்தலமாகும்[1] விஸ்வநாதர் என்றால் அகிலத்தினை ஆள்பவர் என்று பொருளாகும்.

இக்கோயிலில் மணி அடிக்கும் சத்தம் கேட்கும்போது மக்கள் அனைவரும் தலையை குனிந்துகொள்கின்றனர். சிவனை இலைகளைப் போல் நிறைய நல்ல பாம்புகளுடன் அலங்கரித்த நிழல்கள் இருக்கும்போது அவர் தலையில் கங்கை நீரை ஊற்ற வைத்தும்ஐந்து தடவை செய்யும் ஆரத்தி முக்கியமானது. பூஜை நடக்கும்போது நூற்றுக்கணக்கான மணி ஓசைகளும்மேள தாளங்களும் வாசிக்கும்போது கோயிலின் உள்ளே நுழைய மிகவும் உற்சாகம் கொடுக்கிறது.[2]
கோயில் அமைப்பு
இக்கோயிலின் உயரம் 51 அடிகளாகும். கோயிலின் உள்ளே சிவலிங்கம் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த சிவலிங்கம் காசியில் பிரசித்தி பெற்றது. கோயிலின் உள்ளே நேபாள மன்னரால் கொடுக்கப்பட்ட ஒரு பெரிய மணி தொங்கவிடப்பட்டு இருக்கிறது. இதன் சத்தம் நீண்ட தூரம் கேட்கிறது. காலையிலும் மாலையிலும் விசுவநாதருக்கு பூசைகள் நடத்தப்பெறுகின்றன. காசி விசுவநாதரால் காசி முக்கிய ஸ்தலமாக இருக்கிறது.[2] கோயிலுக்குச் செல்லும் பாதை மிகவும் குறுகியதாக உள்ளது.
ஸ்கந்த புராணத்தில் காசி கண்டத்தில் இத்தளத்தை வர்ணிக்கிறது. மும்மூர்திகளில் யார் பெரியவர் என்று கேள்வி எழுந்தவுடன் சிவன் ஒரு ஒளிப்பிழம்பாய் மாறி அடி முடியில்லாத ஸ்வரூபாமை காட்சி அளிக்கிறார் மகாவிஷ்ணு அந்த ஓளியின்ஆரம்பம் எங்கே என்று தேட போகிறார் பிரம்மனோ முடியை நோக்கி பயணிக்கிறார் பல யுகங்கள் சென்ற போதிலும் அடியும் முடிவும் காண முடிய வில்லை பிரம்மா மேல் நோக்கி செல்லுகையில் ஒரு தாழம்பூ மேலிருந்து விழுகிறது பிரம்மா அதனை தான் முடியைக்கண்டதற்கு சாட்சியாக இருக்க வேண்டுகிறார் . தாழம்பூவும் ஒப்புக்கொள்கிறது . பிரம்மன் சிவனிடம் வந்து தான் முடியை கந்ததாகவும், தாழம்பூ அதற்கு சாட்சியென்றும் கூறுகிறார். அங்கு விஷ்ணு தம் அடியை காண முடியாமல் தோற்றதாக ஒப்புக்கொள்கிறார். பொய் சொன்னதனால் சிவன் பிரம்மாவிற்கு எங்கும் வழி பாடு நடக்காது என்றும், தாழம்பூ அதற்கு சாட்சி சொன்னதால் அது சிவா பூஜைக்கு சேர்க்க கூடாது என்றும் கூறுகிறார். மகா விஷ்ணு சிவனை விஸ்வேஸ்வர ரூபமாய் தரிசனம் அளிக்க வேண்டுகிறார். சிவனும் அவர் வேண்டுகோளுக்கு  இணங்கி லிங்க ரூபமாய்  காட்சி அளிக்கிறார்.  அதைத்தான் நாம் காசி விஸ்வநாதராக இன்று காண்கின்றோம்.

  
காசி விஸ்வநாதர் கோயில் தொன்று தொட்டு இருந்தாலும் இதனை கி பி 1194ம ஆண்டு முகமது கோரியின் படை தலைவன் குதுபுத்தின் நிர்மூல மாக்கினான். அதன் பிறகு குஜராத் மன்னர்கள் கட்டினார் இது போன்று ஒவ்வொரு முறையும் இஸ்லாமிய மன்னர்களால் சூறையாடப்பட்டு சின்னாபின்னப் படுத்த்தப்பட்டது அதை இந்து மன்னர்கள் மறுபடியும் கட்டினர். இந்தோர அரசியான அகல்யா பாய் ஹோல்கர் காலத்தில் ஔரங்காஜீப் இதனை இடித்து ஞான வாபி மசூதியை கட்டினான். ஆனால் ராணி அகல்யாபாய்  மற்றும் பண்டாக்கள் மரகத சிவலிங்கத்தை அருகிலுள்ள கிணற்றில் போட்டு மூடி விட்டார்கள். இந்த கினரையும் மசூதியையும் இன்றும் காணலாம். ராணி அகல்யா பாய் மறுபடியும் கோயில் எழுப்பினார் அதற்கு மகாராஜா ரஞ்சித் சிங் 18ம நூற்றாண்டில் ஒரு டன் தங்கம் தானமளித்து தங்க கோபுரம் அமைத்தார்.

தசாஸ்வேமேத் (காட்) நதிக்கரையிலிருந்து ஒரு குறுகிய தெரு கோயில் பக்கம் செல்கிறது. கோயிலின் மூலஸ்தானத்தைக் கொண்ட சிறிய ஆலயத்தை 1780ஆம் ஆண்டு இந்தூர் மகாராணி அகல்யா பாய் ஹோல்கரால் கட்டப்பட்டது..1835ஆம் ஆண்டு பஞ்சாப் மன்னர் மகாராஜா ரஞ்சித் சிங்ஒரு டன் தங்கத்தைப் பரிசாக அளித்து இப்போதிருக்கும் தங்கக் கோபுரத்தை அமைத்தார். 1841ஆம் ஆண்டு நாக்பூரைச் சேர்ந்த போஸ்லே குடும்பத்தினர்கருவறையின் மூன்று நுழைவாயில்களுக்கு வெள்ளிக் கவசங்களை அமைத்தனர். வடக்கு வாயிலுக்கு மட்டும் வெள்ளிக்கவசம் இல்லாமலேயே இருந்தது. அதற்கான கவசம் அண்மையில் அமைக்கப்பட்டது.[3]
தற்போது பிரதம மந்திரி மோடி ஜி அவர்கள் இதன் புராதன சிறப்புக்களை மீட்க முயற்சி செய்து வருகிறார்.

விஸ்வநாதர்அன்னபூரணி தேவி ஆலயங்களுக்கு செல்ல வேண்டுமென்றால்மிக குறுகலான அடிக்கும் குறைவான அகலம் உள்ள சந்துக்கள்தான் உள்ளன. மேலும் கோவிலுக்குச் செல்லும் வழி எங்கும் மிகவும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்பதற்காக மிக அதிகமான அளவில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விஸ்வநாதர் சிலைக்கு அருகே சுமார் இருபதடி தொலைவில் பார்க்கும் இடமெல்லாம் ஒரே போலீஸ் மயமாகத்தான் உள்ளது. இப்படி பாதுகாப்பு செய்யப்பட்டுள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் இருப்பது மிக மிகச் சிறிய அளவில். அதைவிட ஆச்சரியம் என்னவென்றால் கோயிலினுள் இருக்கும் காசி விஸ்வநாதர் சிலைமிகச்சிறிய சிவலிங்கம் போன்று காணப்படுகிறது. இதை வைத்துத்தான் நம் முன்னோர்கள் மூர்த்தி சிறியதானாலும் கீர்த்தி பெரியது என்று சொன்னார்கள் போலும்!

காசி விஸ்வநாதர் மிகச்சிறிய சிவலிங்கம் Image: 

ஒவ்வொரு கட்டத்திலும் தரிசனம் செய்து ,பாலாபிஷேகம் நமது கரங்களினால் செய்து  மாலை சார்த்தி, புஷ்ப அர்ச்சனை செய்து மகிழ்ந்தோம். வட நாட்டில் நாமே பூஜை செய்ய லாம்.  அங்கு உள்ள பண்டாக்கள் பணம் தருமாறு வற்புறுத்துவார்கள் ஆனால் செவிமடுக்காமல் தொடர்ந்து உங்கள் கவனம் பூஜையின் மீதும், பர்ஸின் மீதும் இருக்கட்டும். அங்கு கையில் சில்லறையாக பணம் எடுத்து செல்வது நன்று.  காசி விஸ்வநாதர், அன்னபூரணியை தரிசித்து ஆடுது உள்ளே சென்றோம் அங்கு ஞான வாபி என்னும் கிணறு உள்ளது. இந்த கிணற்றில் தான் ஒரிஜினல் சிவலிங்கம் உள்ளது. கிணற்றை முழுமையாக மூடிவிட்டனர். அங்கு உள்ள பண்டாக்கள், பூசாரிகளிடம் பேச்சுக்கு மயங்க வேண்டாம் இல்லையேல் உங்களிடம் கறந்துவிடுவார்கள்.  


அடுத்து காசி அன்னபூரணியின் கோயில் சென்றோம். என்ன அழகு அம்பாள் சிகப்பு நிற ஆடையில் தங்க கிரீடத்தில் ஜொலிக்கிறாள். அப்படியே மெய்மறந்து நின்றோம்.

வற்றாத உணவினை அளிக்கும் அட்சயப் பாத்திரத்தை ஏந்தி இருப்பதால் தான் சக்தி தேவி ‘அன்னபூரணி’ என்று போற்றப்படுகிறாள். காசியில் உருவான கடும்பஞ்சத்தினை போக்கவே அன்னை சக்தி திருமாலிடம் வேண்டி இந்த அட்சயப் பாத்திரத்தை பெற்று எல்லோருக்கும் உணவளித்து வந்தாள்.

திருமாலே ‘அட்சய’ என்று சொல்லி முதலில் உணவிட்டதால் இந்த பாத்திரம் அட்சயப் பாத்திரம் என்றானது. பிரம்மனின் தலையைக் கொய்த சிவபெருமானின் கரத்தில் அந்த கபாலம் ஒட்டிக்கொண்டது. எங்கெங்கோ சிவபெருமான் பிட்சாடனராக பிச்சை பெற்றபோதும் அந்த கபாலம் அவருடைய கையை விட்டு நீங்கவே இல்லை. இறுதியில் அன்னபூரணி தமது பாத்திரத்தில் இருந்து பிச்சை இட்டதும் அவரது கரத்தில் இருந்து கபாலம் நீங்கியது.

அன்னபூரணியின் அட்சயப் பாத்திரம் அள்ள அள்ளக்குறையாத அருளை வழங்கக்கூடியது. அன்னபூரணியை வணங்கும் பக்தர்கள் இந்த அட்சயப் பாத்திரத்தையும் சேர்த்தே வணங்குகிறார்கள்.
அனைத்து உயிர்களின் களைப்பையும் நீக்கி இறுதியில் உறுதுணையாக இருந்துவினைப் பிணிகளாகிய முடிச்சுகளை அவிழ்த்துநம் தீவினை களைத் திருவருட் பார்வையால் போக்கிஎன்றும் மீளாத இன்பத் திருவடியை அளிக்கின்றாள் அன்னபூரணி. ஞானம்வைராக்கியம் என்ற மோட்ச சாதனங்கள் இரண்டையும் நமக்கு ப்பிச்சையிடுகின்றாள் அன்னபூரணி. இந்த அன்னபூரணிஒரு திருக்கரத்தில் கரண்டியையும் ஒரு திருக்கரத்தில் அன்ன பாத்திரத்தையும் தாங்கிய வளா கத் திகழ்கின்றாள். கேட்டதைக் கொடுக்க கூடிய கற்பக விருட்சம் போன்றது அன்னபூரணியின் கரத்தில் இருக்கும் அட்சய பாத்திரம். காசியில் வீற்றிருக்கும் அன்னை அட்சய பாத்திரம் தாங்கியிருக்கிறாள். காசிக்குப் போகும் போதுஅன்னபூரணியை வழிபடும் போதுமறக்காமல் அந்த அட்சய பாத்திரத்தையும் கண் குளிரப் பார்த்து வழிபடுங்கள். உங்கள் செல்வம் அட்சயமாக வளரும்.

அன்னை விசாலாட்சியின் கோயில் காசி விசுவநாதர் கோயிலில் இருந்து சுமார் இரண்டு பர்லாங்குகள் தூரத்தில் அமைந்துள்ளது. தன்னை வணங்கி வழிபட வருவோரின் கஷ்டங்களை போக்கிவேண்டுவனவற்றை அருளும் விசாலாட்சிகருவறை நடுவில் திருவருள் சுரக்கும் திருநோக்குடன் திருக்காட்சி அருள்கின்றாள்


காசி விசாலக்ஷி அம்மன் சிவனின் வரவுக்காக கண் இமை சிமிட்டாமல் பல ஆண்டுகள் தவசிருந்ததாக கூறப்படுகிறது. துர்கமாசுரன் என்னும் அரக்கன் 12 ஆண்டுகள் எந்த ஒரு ஸ்த்ரீ கண் சிமிட்டாமல் தவமிருப்பாளோ அவர் கையால் மட்டுமே அழிவு என பிரம்மாவிடம் வாரம் பெற்று தேவர்களையும், மனிதர்களையும், ரிஷி, முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். அவனை அழித்து அன்னை துர்கை என்றும், கண் சிமிட்டாமல் இருந்ததால் விசாலக்ஷி என்றும் பெயர் பெற்றாள்.  
விசாலாட்சி எனில் அகண்ட கண்களை கொண்டவள் என்று பொருள். காசி விசாலாட்சியின் பெயர்மதுரை மீனாட்சி மற்றும் காஞ்சி காமாட்சியுடன்  ஒப்பிட்டுப் பார்க்கப்படுகிறது..1971-இல் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தினர் விசாலாட்சி அம்மன் கோயிலுக்கு திருப்பணி செய்தனர்.[4][5] சிறிய சந்துகள் வழியே செல்ல வேண்டியுள்ளது. இருப்பினும் லட்சக்கணக்கான மக்கள் பக்தி பரவசத்துடன் ஆலயம் வந்து செல்கின்றனர்.
காலபைரவர்






காசியில் ஆட்சி செய்யும் காவல் தெய்வமான கால பைரவர்..
காசி காலபைரவர் கோயில் (Kaal Bhairav Mandir (இந்திकाल भैरव मंदिरஎன்பது வாரனாசியில் உள்ள பழமையான சிவன் கோயில்களில் ஒன்றாகும்.  பரநாத்விஸ்வேஸ்வரகனியில் (வாரணாசிஅமைந்துள்ள இந்த கோவில் இந்து சமயத்தின் வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்ததாக இடமாககுறிப்பாக உள்ளூர் மக்களால் கருதப்படுகிறது. இக்கோயிலானது சிவபெருமானின் கடுமையான வடிவங்களில் ஒன்றாகமண்டை ஓடுகளை மாலையாக அணிந்து காணப்படுகிறார். "கால்" (காலம்/காலன்) என்ற சொல்லானது "இறப்பு" மற்றும் "விதி" ஆகிய இரண்டு பொருள்களைக் கொண்டதாகும். "கால பைரவரைக்" கண்டு மரணம்கூட அஞ்சுவதாக நம்பப்படுகிறது. கால பைரவரின் சிலை உள்ளது. காலவபைரவர் விரிந்த கண்களுடனும்பெரிய மீசையுடனும்முழங்காலளவு நீண்ட கைகளுடனும் காட்சியளிக்கிறார்.அவருக்கு அருகில் அவரது வாகனமான நாய் உள்ளது. கோயிலின் பின்பகுதியில்சேத்ரபால பைரவர் சிலை உள்ளது.[2][3][4] காலபைரவரின் வாகனமாக நாய் உள்ளது. கோவிலின் உட்புறம் உள்ள சன்னதியில வெள்ளி முகம் கொண்ட இந்த கால பைரவரின் கோயிலைக் கட்டிய காலம் சரியாக தெரியவில்லை ஆனால் கி.பி. 17 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கட்டப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. கால பைரவர் காசியின் காவலராக அதாவது காவல்தெய்வமாக கருதப்படுகிறார். காசியில் வாழ வேண்டுமானால் இவரது அனுமதியை  பெற வேண்டி யது அவசியமாக கருதப்படுகிறது.
காசியின் மிக முக்கியமான தெய்வம் கால பைரவர். இவர் காசி திருத்தலத்தின் முக்கியமான தெய்வம் மட்டுமல்ல; க்ஷேத்திர பாலகரும், நகரத்தின் காவலரும் இவரே. இவரை தரிசனம் செய்யாமல் காசி யாத்திரை பூர்த்தி ஆகாது. விரிந்த கண்களுடனும், கரிய பெரிய மீசையுடனும் ஆஜானுபாகுவாகக் காட்சி அளிக்கிறார் கால பைரவர். இவரைப் புகழ்ந்து ’கால பைரவாஷ்டகம்’ என்னும் பாடலை இயற்றியுள்ளார் ஆதிசங்கரர். அதில்
தேவராஜஸேவ்யமானபாவனாம்க்ரிபங்கஜம்
வ்யாலயக்யஸுஉத்ரமின்துஷேகரம் க்ருபாகரம் .
நாரதாதியோகிவ்ரு‍ந்தவந்திதம் திகம்பரம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே
என்றெல்லாம் பலவாறாகப் புகழ்ந்துரைத்துள்ளார்
காசியில் உள்ள கால பைரவர் சன்னதி பிரசித்தி பெற்றது. காசிக்குத் சென்றவர்கள் இரவு கால பைரவ பூஜை பார்க்காமல் திரும்புவதில்லை. கால பைரவர் காசி நகரத்தின் சேனாதிபதி. காசியில் இறந்தவர்களுக்கு யமபயம் கிடையாது.  தண்டனை கொடுக்க யமனுக்கு அதிகாரமும் கிடையாது. காலனின் அதிகாரம் பைரவர்களுக்குக் கிடைத்தால் கால பைரவர் என்று  அழைக்கப்படுகிறார்.

பிரம்மாவின் சிரசு கபாலமாக மாறிபிரமஹத்தி தோஷத்திற்கு பைரவர் சக்தி ஆளாகி முடிவில் காசி மாநகர எல்லையில் கால் வைத்தபோது சிவபெருமான் காட்சி தந்து பிரமஹத்தி தோஷத்தை நீக்கி காசிமாநகர காவல் தெய்வமாக எழுந்தருள அருள்புரிந்தார். இன்றும் காசி மாநகரம்  பைரவர் ஆட்சி செய்யும் இடமாக உள்ளது. காசிமாநகர எல்லையில் எட்டு திக்கிலும் அஷ்ட பைரவர்கள் எழுந்தருளி எல்லையை  பாதுகாக்கின்றனர்.

காசி அனுமன் காட்டில் உருபைரவர் ரிஷப வாகனத்தில் தென்கிழக்கு மூலையிலும்,ஸ்ரீதுர்க்கை கோவிலில் சண்ட பைரவர் மயில் வாகனத்தில்  தெற்கு மூலையிலும்விருத காலர் கோவிலில் அன்ன வாகனத்தில் கிழக்கு மூலையில் அசி தாங்க பைரவரும்லாட் பஜாரில் கபால பைரவர்  யானை வாகனத்தில் வடமேற்கு திசையிலும்ஸ்ரீகாமாட்சி ஆலயத்தில் கருட வாகனத்தில் குரோதன பைரவர் தென்மேற்கு திசையிலும்,  பீமசண்டியில் குதிரை வாகனத்தில் உன்மத்த பைரவர் மேற்கு திசையிலும்திரிலோசன சங்கமத்தில் வடகிழக்கு திசையில் சம்ஹார பைரவர் நாய் வாகனத்திலும்பூத பைரவரத்தில் சிங்க வாகனத்தில் வடக்கு திசையில் பீஷண பைரவர் ஆகிய அஷ்ட பைரவரும் அஷ்ட திக்கிலும்  எழுந்தருளி ஆட்சி செய்கின்றார்கள்.

அதனால்தான் காசி மாநகர எல்லையை விட்டு வெளியேறுகின்ற ஒவ்வொரு பொருளும் காசி கால பைரவர் முன் அனுமதி பெற்றே வெளிவர வேண்டும். அதேசமயம் காசியில் யாராவது இறந்தால் யமவர்த்தனை கிடையாது. பைரவ வர்த்தணை நிச்சயம் உண்டு. காசி மாநகர  எல்லையை தொடும்போது எமனும் திரும்பி போவார் என்பது ஐதீகம். அதனால்தான் என்னவோ காசி பைரவர் மஹா பைரவர் சன்னதிக்கு தனி  சக்தி உள்ளது. காசி கறுப்பு கயிறு எமபயம் நீங்கி வாழ வைக்கின்றது.

காசி மாநகரத்தின் ஆலயங்களில் மேலும் சிறப்புற்றது காலபைரவர் ஆலயம். இந்த ஆலயம் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த சுவாமி சிலையும் மிகச்சிறிய அளவிலேயே உள்ளது. பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது ''ஸ்ரீகால பைரவர் சுயம்புத் திருமேனி. 'இவருடைய அனுமதியில்லாமல்காசியில் காற்று கூட நுழையாதுகாசி மரத்து இலைகள்கூட அசையாது’ என்றொரு சொல் வழக்கு உண்டு. இவரை வணங்கினால்பஞ்சமா பாதகங்களும் விலகிவிடும்முக்தி கிடைக்கப் பெறலாம். இங்கு இவருக்கு சைவ- அசைவ உணவு ஆகிய இரண்டுமே படைக்கப்படுகின்றன. அஷ்டமிசதுர்த்தசி மற்றும் அமாவாசை ஆகிய நாட்களில் இவரை வழிபடுவது சிறப்பு'' என்கிறார் பைரவர் கோயிலின் பரம்பரை அர்ச்சகர் விஸ்வநாத் பாண்டே காலபைரவருக்கு எதிரே பூசாரி ஒருவர் உட்கார்ந்து இருக்கிறார். அவரிடம் செல்கிறார்கள். கீழே குனிந்து வணங்குகிறார்கள். குனிந்து வணங்கியப் பின் அந்த பூசாரி குனிந்தவர் முதுகில் ஓங்கிக் குத்துகிறார். குத்து வாங்கியவர் உடனே தன்னிடம் உள்ள 50 அல்லது 100 ரூபாயை அவரிடமுள்ள தாம்பூல தட்டில் போட்டுவிட்டு செல்கிறார்கள். ஆச்சரியம்தான் ஆனால் உண்மை. இப்படி பல ஆச்சரியங்கள் காசி மாநகரில் இருக்கின்றன. இங்கு தான் ஜாசி கயிறு மந்திரித்து கொடுக்கிறார்கள். நாம் நம் குடும்பதினருக்காக நண்பர், உறவினர்களுக்காக வாங்கி செல்லலாம். கால பைரவர் சக்தி வாய்ந்தவர். இவரை வழிபடஎதிரிகளின் தொல்லை ஒழியும்'' என்றார். 'ஸ்ரீகால பைரவரை வணங்குகாசி கயிற்றைக் கட்டு’ என்பார்கள். காசிக்குச் சென்றுஸ்ரீகால பைரவரை தரிசிக்க இயலாதவர்கள்கூடஅங்கிருந்து பிரசாதமாகக் கொண்டு வரப்பட்ட காசி கயிற்றைமனதாரப் பிரார்த்தித்துக் கட்டிக் கொண்டால்கவசமென அந்தக் கயிறு நம்மைக் காக்கும்! .




அடுத்து நாம் காண இருப்பது சங்கட் மோசன் அனுமார் கோயில். இது ஒரு தொன்மையான கோயில். இங்கு தான் துளஸிதாஸர் ராம்சரித் மானஸ் எழுதியதாக .ஐதீகம்.

இந்த ஆஞ்சநேயரை தரிசித்து அடுத்ததாக் சோழியம்மன் எனும் கௌடி மாதா வை தரிசிக்க சென்றோம் . தெலுங்கில் கவ்வாலம்மா என்று கூறுகின்றனர். இவர் கிராம தேவதையாய் ஆந்திர தெலுங்கானாவில் குடி கொண்டுள்ளார். சிவனின் மீது உள்ள பக்தியால் இங்கு சிவனின் அருள் பெற காசிக்கு வந்து அன்னை அன்னபூரணியின் கட்டளைப்படி சிவனின் சகோதரியாய் இங்கு அருள் பாலிக்கின்றாள். சோழியும் ஒரு ரவிக்கை துணியும் தான் படையல். "அம்மா இந்த சோழி உனக்கு காசி யாத்திரை பலன் எனக்கு" என்று இங்கு அனைவரும் பிரார்த்தனை செய்து தனது காசி யாத்திரையை முடிக்கின்றனர். இந்த அம்மனை தரிசனம் செய்யாமல் காஸி யாத்திரை முடிவுருவதில்லை.





இந்த தரிசனதிற்கு பிறகு கங்கை கரையில்  நடக்கும் ஆரத்தியைக்கான சென்றோம். 
 
 

வேத மந்த்ரங்களின் உச்சரிப்பு, சங்க நாதம், தீபாராதனை, நெய்வேத்யம் என ஷோடச (16) உபசாரங்களும் செய்து தினமும் மாலையில் 7 பண்டாக்கள் கங்கை மாதாவிற்க்கு ஆரத்தி செய்கின்றனர். ஆயிரக்கணக்கில் மக்கள் இங்கு கூடி கங்கை கரையிலும், படகுகளிலும் அமர்ந்து ஆனந்தமாய் கண்டு களிக்கின்றனர். நிறைய வெளிநாட்டவர்களும் வருகின்றனர்
  
                

.. இந்த தெய்வீக அனுபவத்திற்கு பிறகு ஓட்டலுக்கு திரும்பினோம். கார்த்திகை தீப மன்று தேவ தீபாவளி கொண்டாடப்படும். கங்கையின் அனைத்து படித்துறைகளிலும் எண்ணற்ற அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு ஜெகஜ்யோதியாய் மிளிரும்.

அடுத்து வைதீக முறைப்படி பித்ரு காரியங்கள் செய்தது பற்றிய விபரங்கள் எழுதுகிறேன். ஓம் நம சிவாய,

தொடரும்
 Follow this blog

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator