Tuesday, 2 September 2014

மஹாளய பித்ருபக்ஷம் 09.09.14 செவ்வாய் முதல் 23.09.14 செவ்வாய்வரை…

மஹாளய பித்ருபக்ஷம் 09.09.14 செவ்வாய் முதல் 23.09.14 செவ்வாய்வரை…

நமது வாழ்க்கை உயர்வதற்கு உதவி செய்துள்ள இறந்த தாய், தந்தை, தாத்தா, பாட்டி, மாமா, மாமி,அத்தை முதலிய அனைவருக்கும் நாம் நன்றி செலுத்துவதற்கான ஒரு வாய்ப்பை அளிக்கும் காலமே மஹாலயபக்ஷம் எனப்படும். பக்ஷம் என்றால் 15 நாட்கள், மஹாளயம் என்றால் மஹான்களின் இருப்பிடம். இறந்து போனாலும் கூட நமது முன்னோர்கள் இந்த மஹாளய பக்ஷம் 15 நாட்களும் பூமிக்குவந்து நம்முடன் தங்குவதாக சாஸ்திரம். ஆகவேதான் இந்த 15 நாட்களிலும் பித்ருக்களுக்கு நாம் அன்னமளிக்க வேண்டுமே தவிர, மற்ற விசேஷமான பூஜைகளையோ, ஹோமங்களையோ செய்யகூடாது என்கிறது சாஸ்திரம்.

மஹாளயத்தை 1. பார்வணம் 2. ஹிரண்யம் , 3. தர்ப்பணம் என்று மூன்று வழிகளில் செய்யலாம்.

1) பார்வணம் என்பது ஆறு ப்ராஹ்மணர்களை ( பித்ருக்களாக ) வரித்து, தந்தை, தாய், தாத்தா, பாட்டி முதலியவர்களுக்கு ஹோமம் செய்து, ப்ராம்ஹணர்களுக்கு சாப்பாடு போடுவது ,

2) ஹிரண்யம் என்பது அரிசி வாழைக்காய் முதலியவைகளை தந்து தர்ப்பணம் செய்வது,

3) தர்ப்பணம் என்பது தானாகவே அமாவஸைபோல் தர்ப்பணமாகச் செய்வது.

இவற்றில் ஏதாவது ஒருவிதத்தில் கட்டாயம் தனது பித்ருக்களுக்குச்செய்து கடமைகளை நிறைவேற்ற வேண்டும்.

ஏதாவது ஒரு நாள் மட்டும் மஹாளயம் செய்பவர்கள்
மஹாபரணி ( 13.09.14– சனி) , மஹாவ்யதீபாதம் (17-.09.14 புதன்), மத்யாஷ்டமி ( 16.09.14செவ்வாய் ) கஜச்சாயா (21.09.14 ஞாயிறு), ஆகிய நாட்களில் ஏதாவது ஒரு நாளில் மஹாளயம் செய்யலாம். இவை மிகச் சிறந்த நாட்கள் ஆகும்.

ஸன்யாஸியாக ஸித்தியானவர்களுக்கு ( 20-09-14 சனி ) அன்றும்,
ஆக்ஸிடென்ட் முதலியவைகளால் துர்மரணமடைந்தவர்களுக்கு ( 22-09-14 திங்கள் ) அன்றும்,

கணவருக்காக மனைவி செய்யும் மஹாளயம் மற்றும், ப்ருஹ்மசாரி செய்யும் மஹாளயத்தை ( 23-09-14 செவ்வாய் – அமாவாஸையன்றும் செய்யலாம்.

மஹாளயபக்ஷத்தில் தாய் தந்தையருக்கு வருஷாவருஷம் செய்யும் சிரார்த்தம் நேர்ந்தால், சிரார்த்த நாளன்று சிரார்த்தம் செய்து விட்டு அதற்குப்பிறகு மற்றோரு நாளில் மஹாளயத்தைச் செய்ய வேண்டும்


 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

உலகிலேயே மிகப்பெரிய வழிப்பாட்டு தளம்

ஆன்மிகம்  செய்தி
 
உலகிலேயே மிகப்பெரிய வழிப்பாட்டு தளம்

 

உலகிலேயே மிகப்பெரிய வழிப்பாட்டு தளம்

உலகிலேயே மிகப்பெரிய வழிப்பாட்டு தளம் "கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய "அங்கோர் வாட்" கோயில்.

இரண்டாம் "சூர்யவர்மன்" இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான். இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது. ஒரு பெருமையான விஷயம் சொல்லாட்டுமா?, வைணவத் தளமான இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே பெரியது!!

இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம், திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர். இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே3.6 கிலோமீட்டர்கள் !!! அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டபட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.( மீண்டும் ஒரு முறை ), இதன் சுற்றி சுவர் மட்டுமே 3.6கிலோமீட்டர்கள் !!!

இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட "சூர்யவர்மன்" இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது .இதன் பின்னர் ஆறாம் "ஜெயவர்மன்" கைக்கு மாறியது .

பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக "புத்த" வழிபாடு தளமாக மாற்றப்பட்டு. இன்று வரை இது புத்த வழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றது!.

பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது , அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதலமடயத்தொடங்கியது.பின்னர் 1586 ஆம் ஆண்டு"António da Madalena" என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது, 

அதை அவர் "is of such extraordinary construction that it is not possible to describe it with a pen, particularly since it is like no other building in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of." என்று கூறியுள்ளார்.

பின்னர் Henri Mouhot என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெயிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது. அவர் அந்த புத்தகத்தில் One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo—might take an honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged என்று குறிப்பிட்டுள்ளார்!! பின்னர் இங்கு ஆய்வு பணிகளை 
மேற்கொண்ட பிறகு தான் இது நாம் கட்டியது என்று தெரியவந்தது!!

இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட,இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார்.ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது இதில் இன்னொரு சிறப்பு "கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் "தேசிய சின்னமாக"ஆட்சிப் பொறுப்பு பொறிக்கப்பட்டுள்ளது!.

இதை பற்றி எழுத சொன்னால் இந்த நாள் முழுவதும் இதன் சிறப்புகளை வரிசை படுத்திக்கொண்டே இருக்கலாம், கடைசியாக ஒன்று இந்த 2012 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை!! வானத்தில்1000 அடிக்கு மேல் விமானத்த்ல் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது!! 
 
இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை! குறிப்பாக இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும் கேள்விக்குறியே!!

இன்றும் தாய்லாந்தில் மன்னர், ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்கு முன் நமது திருப்பாவையை தாம் பாராயணம் செய்து பின்னர் பதவி ஏற்பதுதான் வழக்கத்தில் உள்ளது.

நன்றி: திரு. செல்வம், தமிழ்நாடு 


 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

Struggles of our Life : A short inspiring story.

Struggles of our Life : A short inspiring story.

Once upon a time a daughter complained to her father that her life was miserable and that she didn't know how she was going to make it. She was tired of fighting and struggling all the time. It seemed just as one problem was solved, another one soon followed.

Her father, a chef, took her to the kitchen. He filled three pots with water and placed each on a high fire. Once the three pots began to boil, he placed potatoes in one pot, eggs in the second pot and ground coffee beans in the third pot. He then let them sit and boil, without saying a word to his daughter. The daughter, moaned and impatiently waited, wondering what he was doing. After twenty minutes he turned off the burners. He took the potatoes out of the pot and placed them in a bowl. He pulled the eggs out and placed them in a bowl. He then ladled the coffee out and placed it in a cup.

Turning to her, he asked. "Daughter, what do you see?" "Potatoes, eggs and coffee," she hastily replied.

"Look closer", he said, "and touch the potatoes." She did and noted that they were soft.

He then asked her to take an egg and break it. After pulling off the shell, she observed the hard-boiled egg.

Finally, he asked her to sip the coffee. Its rich aroma brought a smile to her face.

"Father, what does this mean?" she asked.

He then explained that the potatoes, the eggs and coffee beans had each faced the same adversity-the boiling water. However, each one reacted differently. The potato went in strong, hard and unrelenting, but in boiling water, it became soft and weak. The egg was fragile, with the thin outer shell protecting its liquid interior until it was put in the boiling water. Then the inside of the egg became hard. However, the ground coffee beans were unique. After they were exposed to the boiling water, they changed the water and created something new.

"Which one are you?" he asked his daughter. "When adversity knocks on your door, how do you respond? Are you a potato, an egg, or a coffee bean?"

In life, things happen around us and things happen to us, but the only thing that truly matters is how you choose to react to it and what you make out of it. Life is all about leaning, adopting and converting all the struggles that we experience into something positive.

L
 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

"ரைஸ் பக்கெட் சேலஞ்சுக்கு" நீங்கள் தயாரா ? (மறக்காமல் இதை பகிருங்கள்)

"ரைஸ் பக்கெட் சேலஞ்சுக்கு" நீங்கள் தயாரா ? (மறக்காமல் இதை பகிருங்கள்)

ஏ.எல்.எஸ்., எனப்படும் நரம்பு சம்பந்தமான நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அந்த தொண்டு நிறுவனத்துக்கு நிதி திரட்டவும் உருவாக்கப்பட்டதுதான் "ஐஸ் பக்கெட் சவால்". சமூக வலைதளங்களின் மூலம் உலகில் வேகமாக இது பரவி வருகிறது.

நோய் குறித்து விழிப்புணர்வு மற்றும் நன்கொடை கிடைக்கிறது என்றாலும் பல நாடுகளில் இதனை எதிர்க்கின்றனர். தண்ணீரை வீணாக்குகின்றனர் எனவும், விளம்பரம் தேடுகின்றனர் எனவும் சர்ச்சை கிளம்பியுள்ளது. மேலும் குளிர்ந்த நீரை தலையில் ஊற்றுவதால் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவிக்கின்றனர். ஸ்காட்லாந்தில் ஒரு இளைஞர் இந்த சவாலை மேற்கொண்டதால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

இதற்கு மாற்றாக இந்தியாவில் ரைஸ் பக்கெட் சவால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த மஞ்சு லதா (38) எனும் பத்திரிகையாளர் ஏழை மக்களின் பசியை போக்கும் எண்ணத்துடன் இதை அறிமுகப்படுத்தியுள்ளார். 
கொடுக்கும் சக்தி படைத்த யாராயினும், வசதி இல்லாத ஏழை ஒருவருக்கு ஒரு வாளி அரிசி கொடுக்க வேண்டும். அரிசி கொடுத்த புகைப்படத்தை 'பேஸ்புக்கில்' பதிவேற்றம் செய்கையில் ஆயிரக்கணக்கான 'லைக்'களும், 'ஷேர்'களும் குவிந்து அந்த கொடையாளரின் புகைப்படமும், இந்த செய்தியும் பரவத் தொடங்கி, புகழை நோக்கி இழுத்துச் செல்கின்றது.

தனது பங்குக்கு முதல் பயனாளிக்கு 20 கிலோ அரிசி வழங்கி இந்த அரிய சேவையை தொடங்கி வைத்த மஞ்சு லதா கலாநிதி, 'சமைக்காத அரிசி மட்டுமல்ல.., ஒரு பக்கெட் சமைத்த உணவு, வசதி இருந்தால் ஒரு பக்கெட் பிரியாணி, அல்லது சுமார் 100 ரூபாய் அளவிலான மருந்துகளை தங்கள் பகுதிக்கு அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கி, யார் வேண்டுமானாலும் இந்த மக்கள் சேவையில் பங்கேற்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த சவாலை ஏற்று தெலுங்கானாவின் கரீம்நகர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் மாணவர்கள் கடந்த புதன்கிழமையன்று 2200 கிலோ அரிசியை ஒரே நேரத்தில் தானமாக வழங்கி சாதனை படைத்துள்ளனர். மேலும், இதுவரை நாடுதழுவிய அளவில் ஆயிரக்கணக்கான கொடையாளர்கள், இந்த திட்டத்தின் வாயிலாக லட்சக்கணக்கான ஏழை மக்களின் பசியை போக்கியுள்ளனர். இதன் மூலம் தண்ணீர் வீணடிக்கப்படுவதில்லை. மாறாக, வறுமைப் பேயை விரட்டி, பசி நோயை போக்கும் சமுதாயத்துக்கான சிறந்த மாற்று மருந்தாக இந்த சேவை கருதப்படுகின்றது.

மஞ்சு லதா கலாநிதி என்பவரின் மூளைக்குழந்தையான இந்த "ரைஸ் பக்கெட் சவால்" நிகழ்ச்சியில் பங்கேற்க நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.. உங்கள் வீட்டில் உள்ள ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அரிசியை நிரப்பி, தேவையுள்ள நபர்களுக்கு வழங்கி உதவுங்கள். அந்தக் காட்சியை புகைப்படம் எடுத்து, 'பேஸ்புக்'கில் பதிவேற்றம் செய்து, பிறரும் இந்த நல்லபழக்கத்தை கடைபிடிக்க உதவுங்கள்.

நன்றி தினமலர் மற்றும் 'செய்தி' இனையதளம்.




 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator