Tuesday 31 December 2013

சீழ்க் கட்டிகள் - வெயில் கால நோய் பற்றிய தகவல்கள்:-

சீழ்க் கட்டிகள் - வெயில் கால நோய் பற்றிய தகவல்கள்:-

சீழ்கட்டிகள் என்பது ஆபத்தான நோயல்ல என்ற போதும் வேதனை அளிக்கின்றவையாக இருக்கின்றன. சருமத்தில் உள்ள முடி வேர்களில் கிருமித் தொற்று ஏற்படுவதால் இவை உண்டாகின்றன. சொறிவது உராய்வது போன்றவற்றால் சழுமத்தில் ஏற்படக் கூடிய நுண்ணிய காயங்களுடாக கிருமிகள் சருமத்தைத் தாண்டி உள்ளே ஊடுருப் பெருகுவதால் கட்டிகள் ஏற்படுகின்றன

பொதுவாக முகம், கழுத்து, அக்குள், முதுகு, தொடை போன்ற இடங்களிலேயே இவை அதிகம் தோன்றுவதுண்டு. இருந்தாலும் வேறு முடி உள்ள வேறு இடங்களிலும் தோன்றலாம். காது, மூக்கு போன்ற நொய்த இடங்களில் தோன்றும் கட்டிகள் கடுமையான வேதனையைக் கொடுக்கும்.

எவ்வாறு இருக்கும்?

கட்டி தோன்றும்போது ஆரம்பத்தில் சற்று வலி இருக்கும், தடவினால் வீக்கம் இருப்பதாக உணர்வீர்கள். உற்று நோக்கினால் அவ்விடம் சற்றுச் சிவந்து தடித்திருப்பதாகத் தென்படும். நாட்கள் செல்ல வீக்கம் அதிகரிக்கும். பின்பு கடினமமாக இருந்த வீக்கம் சற்று மெதுமையாகி தொள தொளவென மாறும். உள்ளே கட்டி கரைந்து சீழ் தோன்றியிருக்கும். சீழ் அதிகரிக்க வலியும் அதிகரிக்கும்.

கட்டிகளின் அளவுகளில் வித்தியாசங்கள் இருக்கும். கச்சான் கொட்டை அளவு முதல் டெனிஸ் பந்தளளவு அல்லது அதனிலும் பெரிதாகவும் வீங்கலாம். கட்டி பழுக்க ஆரம்பிக்கும்போது அதன் மத்தியில் சற்று மஞ்சள் நிறமாக மாற்றமுறும். இதனை மருத்துவத்தில் Pரளவரடந என்பார்கள். 
சில அருகருகாக பல கட்டிகள் தோன்றும்போது ஒன்றுடன் மற்றது இணைந்து பெரிதாக மாறக் கூடும்.

வலி அதிகமாகி வீக்கமும் அதிகரிக்கிறது எனில் நீங்கள் மருத்துவரை நாட நேரிடலாம். ஆனால் சில கட்டிகள் தானாகவே உடைந்து சீழ் வெளியேற வலி தணிந்துவிடும். உடைந்து சீழ் வெளியேறிய பின்னரும் சில நாட்களுக்கு அதிலிருந்து கசிவு ஏற்படக் கூடும். அவ்வாறு கசிவதனால் அவ்விடத்தில் தானாகவே காய்ந்து படிவதுண்டு.

சீழ்கட்டிகள் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல கிருமியின் தாக்கத்தால் ஏற்படுவதாகும். கிருமித் தொற்றுக் காரணமாக உடலில் அலுப்பு வேதனை ஏற்டலாம். சில நேரங்களில் காய்ச்சலும் தோன்றக் கூடும். சிலருக்கு அது தோன்றுவதற்கு முன்னர் அவ்விடச் சருமத்தில் சற்று அரிப்பு ஏற்படுவதுண்டு.

நீங்கள் செய்யக் கூடியது எவை?

சிறிய வேதனை அதிகமற்ற கட்டி எனில் உடடியாக மருத்துவரை நாட வேண்டியதில்லை. அது தானாகவே உடைந்து சீழ் வெளியேறிய பின்னர் குணமாகும்.

சுத்தமான துணியை சுடுநீரில் நனைத்து ஒத்தடம் கொடுக்கலாம். ஒரு நாளில் பலதடவைகள் செய்ய வேண்டும். இது வேதனையைத் தணிக்க உதவும். அத்துடன் கிருமி பெருகுவதையும் குறைக்கும்.

கைகளால் அழுத்தியோ அல்லது பிளெட் போன்ற கூரிய ஆயதங்களால் வெட்டியோ சீழை நீங்களாக அகற்ற முற்பட வேண்டாம். சீழ் அகலுவதற்குப் பதிலாக கிருமிகள் பரவி நோயை தீவிரப்படுத்தலாம். 

கட்டி தானாக உடைத்துவிட்டால் தொடர்ந்தும் சுடுநீர் ஒத்தடம் கொடுத்து அழுக்குகள் முழுமையாக வெளியேற உதவுங்கள். சீழ் வடிந்து கொண்டிருந்தால் அந்த இடத்தை அடிக்கடி சுத்தம் செய்வது அவசியம்.
அந்த இடத்தை நீங்கள் தொட்டால் சுத்தமாக நன்கு கை கழுவிய வேண்டும்.

அதேபோல நோயாளி உபயோகித்த, துணி. டவல், படுக்கை விரிப்புகள் போன்றவற்றை மற்றவர்கள் உபயோகிக்கக் கூடாது. அவர் உபயோகித்த துணிமணிகளை நன்கு கழுவி உலர்ந்த பின்னரே மற்றவர்கள் உபயோகிக்கக் கூடாது. அவற்றை சுடுநீரில் கழுவுவதும் சிறந்தது.








நன்றி= ஹாய் நலமா

                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''

follow me @twitter lokakshema_hari

Saint Eknath

Three hundred years ago, there lived a Saint called Eknath in Maharashtra, India. He used to perform his daily ablutions and rituals at the banks of the river Godavari, every morning. A man, who did not like Saint Eknath, lived in a house on the way to the river. This man would hurl abuses at Saint Eknath as the Saint passed by his house. However, the Saint would not react.
One morning, the man was determined to do something that would irritate the Saint. So when the Saint was on His way back after bathing, the man threw some dirty water on Him. Saint Eknath still did not react and quietly went back to the river, to bathe again.
The man was shocked and furious that the Saint had not reacted. So when Saint Eknath returned, he threw some dirty water on Him again. The Saint went back to bathe in the river, without a comment, again.
The man was expecting some reaction from Saint Eknath, so he was furious and disappointed when he did not get one. He waited for Saint Eknath to return and again threw some dirty water on Him. Again, the Saint calmly went to the river for another bath.
This happened eighteen times - the man would throw dirty water on the Saint and the Saint would calmly go back for a bath. When the man saw Saint Eknath calmly returning from the river for the nineteenth time, he was filled with remorse and shame for what he had done to this great Saint. He fell at Saint Eknath's feet and apologised profusely. Saint Eknath gently helped the man get back to his feet and consoled him. The man then asked Saint Eknath how He could stay calm and ignore such an insult, eighteen times.
Saint Eknath replied, "What insult? Today is a Holy day. I was thankful to you for giving me the opportunity, to purify myself so many times, on this Holy day!" The Saint then left, calmly chanting The Lord's Name.
The man was in awe of the Saint and never troubled Him again.
Moral of the story: We must look at every situation, however unjust it might be with a positive attitude, with a firm belief that this is happening for my betterment only. If we continue having strong faith in God and constantly remember Him by chanting, outside events do not affect us negatively and we are able to see positivity in every situation.


                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''

follow me @twitter lokakshema_hari

-சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா

கல்லணை: இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அணையைக் கட்ட முடிவெடுத்தான் . ஆனால், அது சாதாரன விஷயம் அல்லவே . ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள். நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்புஏற்பட்டு நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதையும். இதைத்தான் சூத்திரமாக மாற்றினார்கள் அவர்கள். காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டார்கள். அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் போகும். அதன் மேல் வேறொரு பாறையை வைப்பார்கள். நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள். இப்போது இரண்டும் ஒட்டிக்கொள்ளும். இப்படிப் பாறைகளின் மேல் பாறையைப் போட்டு, படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணைதான் கல்லணை. ஆங்கிலப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் தான் இந்த அணையைப் பற்றிப் பலகாலம் ஆராய்ச்சி செய்து இந்த உண்மைகளைக் கண்டறிந்தார் . காலத்தை வென்று நிற்கும் தமிழனின் பெரும் சாதனையைப் பார்த்து வியந்து அதை ' தி கிராண்ட் அணைக்கட் ' என்றார் சர் ஆர்தர் காட்டன் . அதுவே பிறகு உலகமெங்கும் பிரபலமாயிற்று. உலகிற்கு பறைச்சாற்றுவோம் தமிழனின் பெருமைகளை... 

-சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா

                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''

follow me @twitter lokakshema_hari

மூக்கு குத்துவது

மூக்கு குத்துவது
-----------------------------------------------

மூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை ,காற்றை வெளியேற்றுவதற்கு.

கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம்.

ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும்.

ஞானிகளும் ரிஷிகளும் தியானம் செய்துபோது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியானம் செய்வார்கள். இதற்கு காரணம் இடது காலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும். வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள். வலது பக்கமாக சுவாசம் செல்லும்போது தியானம்,பிராத்தனை எல்லாம் கண்டிப்பாக பலன் தரும்.

இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது பக்க சுவாசத்திற்கு மாற்றவேண்டும். அதே மாதிரி ஒரு அமைப்புத்தான் மூக்குத்தி.

நமது மூளைப் பக்கத்தில் ஹிப்போதெலமஸ் என்ற பகுதி இருக்கிறது. நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக் கூடிய, செயல்படக் கூடிய அளவு சில பகுதிகள் உள்ளன.

அந்தப் பகுதியில் சில உணர்ச்சி பிரவாகங்கள் உள்ளன. இதனைச் செயல்படுத்துவதற்கு அந்தப் பகுதி துணையாக இருக்கிறது. இப்படி இந்தப் பகுதியை அதிகமாக செயல் படுத்துவதற்கும் பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில் குத்தக்கூடிய முக்குத்தி வலது பக்க மூளையை நன்றாக செயல் படவைக்கும்.

இடது பக்கத்தில் முளை அடைப்பு என்றால் வலது பக்கத்தில் நன்கு வேலை செய்யும். வலது பக்கம் அடைத்தால் இடது பக்கம் உள்ள மூளை அதிகமாக இயங்கும்.

இன்றைய நம்முடைய மனித வாழ்க்கைக்கு அதிகமாக இந்த இடது பக்க மூளையை அடைத்துவலது பக்கமாக வேலை செய்ய வைக்கிறோம். அதனால் வலது கை, வலது கால் எல்லாமே பலமாக உள்ளது.

பெண்கள் முக்குத்தி அணியும்போது, முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல்சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழே வரும். இப்படி விழுதுகள் மூக்குப் பகுதியிலும், ஜவ்வு போல மெல்லிய துவாரங்களாக இருக்கும். ஆலம் விழுதுகள் போல உள்ள மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க முக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெட்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும்.

பருவப் பெண்களுகே முக்குத்தி அணிவிக்கப்ப்டுகிறது. பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும்.இந்த வாயுக்களை வெளிக்கொண்ருவதற்கு ஏற்படுத்தட்டதுதான் இந்த மூக்கு குத்துவது. மூக்கு குத்துவதால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறு சரி செய்யப்படுகின்றன்.

இடப்பக்கம்தான் பெண்கள் மூக்குத்தி அணியவேண்டும். இடது பக்கம் குத்துவதால் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனா சக்தியை ஒரு நிலைப்படுத்துகிறது. மனதை அமைதிப்படுத்துகிறது. தியானம், பிராத்தனையில் ஈடுபட உதவுகிறது.


                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''

follow me @twitter lokakshema_hari

ஆபத்தாகும் மாத்திரைகள்


ஆபத்தாகும் மாத்திரைகள்

சிலர் காய்ச்சல் தலைவலி என எதற்கு எடுத்தாலும் அதிகம் எடுத்து கொள்ளும் ஒரு மாத்திரை பாராசிடம்மல் தொடர்ந்து அதிகமாக பாராசிடம்மல் வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொள்வதால் உடலில் தேங்கும் அந்த மருந்தின் அளவு அதிகமாகி உயிரிழப்பு ஏற்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

நாம் உட்டகொள்ளும் வலி நிவாரணி சிறிது சிறிதாக உடலில் தேங்கினாலும் அது ஒரு குறிப்பிட் அளவு சேர்ந்ததும் மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவிக்கின்றனர்.

முந்தைய ஆண்டுகளில் 150 க்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறாக உயிரிழந்து உள்ளதை எடின்பர்க் என்ற ம
த்துவமனை பதிவு செய்யதுள்ளது என்று பல்கலை கழக ஆராய்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பராசிட்டம்மால் உட்கொண்ட சில மணி நேரத்திலே வலி பறந்து ஒடுகிறது என பலர் இதனை எடுத்து கொள்கின்றனர்.இதில் ஒரு நபர் உட்கொள்ளும் அளவை விட சற்று கூடுதலான அளவில் பாரசிட்டம்மால் மருந்தை உட்கொள்கிறோம் என்பதை உணராமலேயே பலர் இருந்துள்ளனர் என்று அவர்கள் கூறுகின்றனர்

நீங்களும் வலி நிவாரணி மாத்திரைனகை உட்டகொள்பவராக இருந்தால் இதை கவணத்தில் கொள்ளுங்கள் உங்கள் உடல் நலம் உங்கள் கையில் தான் உள்ளது.

                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''

follow me @twitter lokakshema_hari

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator