Pages

Friday, 5 December 2014

பெரியவா உச்சிஷ்டம்...






பெரியவா உச்சிஷ்டம்...

அனாதரவான ஓர் அம்மையார்,ஒரே பிள்ளை.
அவனுக்குத்தோல் வியாதி வந்து ,மருத்துவர்களுக்குக்
கட்டுப்படாமல் உடம்பெல்லாம் பரவி விட்டது.
கருமேஅகம். உடல் அரிக்கும்.சொறிந்தால் ரத்த
விளாறுதான்.

அந்த அம்மாளுக்குத் தன் பிள்ளை படும் கஷ்டத்தைப்
பாத்து சகிக்க முடியவில்லை .நேரே பெரியவாளிடம்
நேரே வந்து மகன் படும் கஷ்டத்தைச் சொன்னாள்.
பெரியவா க்ருபையாலே உடம்பு குணமாகணும்,
எனக்கு வேறே கதி இல்லை வக்கும் இல்லை...

பெரியவா அந்த அம்மாவையும் பிள்ளையையும்
மடத்திலேயே தங்கச் சொன்னார்கள். பெரியவர் நாள்
தோறும் ஏற்றுக்கொள்கிற பிக்ஷையின் மீதத்தை
மட்டுமே அந்தப் பையன் சாப்பிடவேண்டும். வேறே
எதுவுமே பால், காபி,டீ உட்பட சாப்பிடக் கூடாது என்ற
உத்தரவோடு!

அம்மையாரும் பரம சந்தோஷத்துடன் ஒத்துக்கொண்டாள்.

பெரியவா "மறு உத்தரவு வரையில் " தன் பிக்ஷைத்
திட்டத்தை சமையற்கட்டில் சொல்லியிருந்தார்கள்.
வெறும் வாழைத்தண்டு மட்டும்தான் பிக்ஷை!சிறிது
உப்புப் போட்டு வேகவைத்து வைத்திருப்பார்
சமையற்கார சிஷ்யர். பெரியவா அதை ஸ்வீகரித்து விட்டு
கொஞ்சம் மோர் சப்பிடுவார்கள்.

இதே வாழைத்தண்டும், மோரும் மட்டும் பையனுக்கும்
கொடுக்கப் பட்டன. முதலில் அலுப்பும் சோர்வும்தான்
வந்தன. அனால் பெரியவா பிக்ஷை செய்த உச்சிஷ்டம்
என்ற நினைவு வந்ததும் அமுத பானமாக உண்டு
வந்தான்.

பத்து நாட்களுக்குப்பின் நாளடைவில் அரிப்பும் ,
கருமையும் குறைந்ததோடு கருமையும் அரிப்பும்
மறைந்து தோலின் இயற்கையான நிறம் வந்து விட்டது.
நாற்பது நாட்களுக்குப் பின் கருமை மறைந்ததோடல்லாமல்
மிக்க தேஜஸோடு விளங்கினான் பையன்.

அவனுடைய தாயாருக்கு எல்லையில்லாத சந்தோஷம்.
"வேறு யாருக்கு இந்த பாக்யம் கிடைக்கும்?" என் பிள்ளைக்கு
வந்த வியாதி பாபத்தின் பலன் என நினைத்தேன் இல்லை,
இது புண்ணியத்தின் பயன் என்பது தெரிஞ்சு போச்சு.
பெரியவா உச்சிஷ்டத்தை தொடர்ந்து நாற்பது நாட்கள்
சாப்பிடும் பாக்யம் யாருக்குக் கிடைக்கும் " என்று
புலம்பித் தீர்த்தாள்.

எல்லாம் வழைத்தண்டு மஹிமை என்றார் பெரியவா.
வாழைத்தண்டு என்பது ஒரு சாக்கு, பெரியவா உச்சிஷ்டம்
என்கிறதுதான்பிரதான காரணம் என்று நெஞ்சாரச் சொன்னாள்
தாயார்.

பெரியவா தரிசன அனுபவங்கள்... கோதண்ட சர்மா....

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.......

 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் 
பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment