Pages

Tuesday, 11 November 2014

சாயாபீட லலிதை...

சாயாபீட லலிதை.....

ஆடும் சிவன் உன் அரங்கில் பதுமன் 
பாடும் சுருதிப்பனு வல்களையே
நாடும் வருவார் நலனைத் திருமால்
கூடும் சபையில் கொலுசெய் லலிதே

ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம் ஹாரம் இவற்றைக்
குழந்தைகள் மணலில் வீடு கட்டி விளையாடுவது
போன்று , அம்பிகை விளையாட்டாக ச் செய்து 
கொண்டிருப்பதாலேயே அவளு க்கு லலிதை என்ற
பெயரும் ஏற்பட்டிருக்கிறது.

மஹாப்ரளயம் ஏற்பட்ட காலத்திலும் அழியாத 
பரப்ரம்மமாக விளங்குபவள் என் அன்னை பராசக்தி.
இப்ப்ரளயம் ஏற்படும்போது உலகம் எல்லாம்
ப்ரம்மாவிடம் ஒடுங்கும். ப்ரம்மா விஷ்ணுவிடமும், விஷ்ணு
ருத்ரனிடமும்,ருத்ரன் மஹேசனிடமும் ஒடுங்குவார்கள்.
சிவபெருமானின் அம்சமான மஹேசனும், சதாசிவனும்
ஒடுங்காமல் இருக்கிற அந்த காலத்தையே மஹேச் வர 
மஹாகல்பம்என்பர்.
மஹேச் வரருக்கு ப்ரளயம் ஏற்பட்டபின் வேறு வேலை
எதுவும் இல்லாததால் அம்பிகையைக் குறித்துத் த்யானம் 
செய்து அதனால் ஏற்படும் ஆனந்தத்தால் அம்பிகை 
களிக்கும்படி மஹாதாண்டவம் ஆடுகிறார்.அம்பிகையும் 
இதனை சாக்ஷியாக இருந்துன்பார்த்துக்கொண்டிருக்கிறாள்.
இதனையே லலித ஸஹஸ்ரனாமத்தில் ஒரு நாமா மஹேச் வர 
மஹாகல்ப மஹாதாண்டவ சாக்ஷிணி என்று குறிப்பிடுகிறது.
இந்த அம்பிகை லலிதா என்ற பெயரில் வட நாட்டில் ப்ரயாகை
க்ஷேத்ரத்திலும், தமிழ் நாட்டில் திருஈங்கோயில் என்ற இடங்களிலும்
கோவில் கொண்டுள்ளாள்.இரண்டுமே சக்தி பீடங்கள்.
திருச்சி மாவட்டத்தில் முசிரியிலிருந்து மூன்று கல் தொலைவில்
உள்ளது ஈங்கோயில் மலை என்ற க்ஷேத்ரம். அகஸ்த்ய முனிவர்
ஈ வடிவில் அம்பிகையைக் குறித்துத் தவம் இருந்தமையால்
இக்காரணப் பெயர்

காவேரியின் இக்கரையில் குளித்தலையும், அக்கரையில் 
ஈங்கோயிலும் உள்ளது குளித்தலையிலுள்ள கடம்பரைக்
காலையிலும், ரத்னகிரி சிவனை பகலிலும், முசிரி மலையிலுள்ள
ஈங்கோத நாதரை மாலையிலும் தரிசிப்பது மிக விசேஷம்.

ஈங்கோயில் மலைமீது ஸ்ரீ மரகதாலேச்வரர், மரகத லிங்கமாக்
கோயில் கொண்டுள்ளார். இந்தச் சிவன் கோவிலுக்கு கிழக்கு
ஸன்னிதானத்திற்கு எதிரே மலையின் தாழ்வாரத்தில் மேடான
பகுதியில் ஸ்ரீலலிதாம்பிகை கோவில் இருக்கிறது.

அம்பிகையின் ஜோதிச் சாயை விழுந்த இடம் இது 
என்பதால் இதனை சாயாபீடம் எனக் குறிப்பிடுகிறார்கள்.
அகஸ்த்யர் ஸ்ரீவித்யா தீக்ஷை பெற்றபின் ஈ வடிவில் 
சிவனைப் பூஜித்து அதன் பின் லலிதாம்பிகையை 
மானசீகமாகப் பூஜித்துவந்திருக்கிறார்.

இங்கு மூலஸ்தானத்தில் அம்பிகையி உருவம் இல்லை.
அவள் உருவாருவத்தை திருமேனியாக ஸ்ரீசக்ரமாக
பரிபூர்ண மஹாமேரு இருக்கிறது. இங்கு லலிதா த்ரிசதீ 
ஸஹஸ்ரனாமம் தினமும் செய்யப்படுகிறது. பௌர்ணமி
யன்று மிக விசேஷ பூஜை செய்யப்படுகிறது.
தகுதியுள்ள ப்ரம்மச்சாரிணிகளாந கன்னிப் பெண்களே 
பூஜை செய்து வருகிறார்கள். மூல மந்த்ரத்தை நிறுத்தி 
அழகாக சிறந்த உச்சாடனத்துடன் செய்வது அம்பிகையின்
அருள் பாத்திரராவதற்கு ஒரு சான்று.

நாளை ஈங்கஓயில் லலிதையை திரும்ப தரிசிக்கலாம்


 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் 
பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment