ஜய ஜய சங்கர...... மஹாபெரியவாளின் லீலா வினோதங்கள் எண்ணிலடங்காதவை. சமீபத்தில் எனக்கு காஞ்சியில் ஏற்பட்ட ஓர் அனுபவமும், என் அகத்தில் சென்னையில் ஓர் அனுபவமும் என்னை ப் புளகாங்கிதமடையச் செய்தவையாகும். என் இனிய நண்பர் ஒருவருக்கு கனவிலும் நினைவிலும் வந்து அருளிய மஹிமையை எவ்வாறு விவரிப்பேன் என எனக்குத் தெரியவில்லை. முடிந்த வரையில் பகிர்ந்தளிக்க ஆசைப் படுகிறேன்.
இரண்டு மாதங்களுக்கு முன் என் உறவினருடன் காஞ்சி சென்றிருந்தேன். அதிஷ்டானத்தில் பூஜை இத்யாதிகளைக் கண்டு களித்தபின் திடீரென்று எனக்கு பெரியவா பாதுகைகளை வாங்கி எடுத்து வந்து பெரியவா அதிஷ்டானத்தில் ப்ராண ப்ரதிஷ்டை செய்து வந்து பூஜிக்க வேண்டும் என ஓர் பேராவல். என்னிடம் அவருடைய பாதுகை படம் இருந்ததைத்தவிர நிஜ பாதுகைகள் இல்லை. என் அஞ்க்னானம் காரணமாகவும் சூழ் நிலையாலும் அத்தகைய ஒரு பெரும் பேற்ரை நான் இழந்திருக்கிறேன் பூஜை செய்பவரிடம் கேட்டபோது அவர் என்னை வாங்கி வந்தால் ப்ரதிஷ்டை செய்து தருவதாக வாக்களித்தமையால் நான் பாதுகைகளை வாங்கச் சென்றேன். போகும் வழியில் நான் யோசித்தேன் இதனை மிகுந்த ஆசாரத்துடன் அமெரிக்கா எடுத்துச் செல்ல முடியுமா? சென்றாலும் நான் திரும்ப இந்தியா வரும்போது அவ்வாரே செய்ய முடியுமா? இங்கும் அங்கும் இவ்வளவு பெரிய பாதுகைகளை எடுத்துச் சென்று சரிவர பராமரிக்க ஆராதனை செய்ய முடியுமா? என. நாங்கள் சாப்பிட வெளியே செல்லும் சமயம் என் உறவினர் எனக்கு வயதானதாலும் உடல் நலமில்லாததாலும் கையைப் பிடித்து என்னை வெளியில் கூட்டிச் சென்றுகொண்டிருந்தார். அப்போது ஆபீஸ்க்கு வெளியில் பூஜைக்கு பணம் சேகரிக்கும் பணியில் இருந்த ஒருவர் என் உறவினரை அழைத்து ஏதோ சொன்னார். அவர் உடன் திரும்ப வந்து உன்னைத்தான் அவர் பார்க்க வேண்டுமாம் என்று கூறவும் நான் அவரிடம் செல்ல அவர் என்னிடம் உங்களுக்குப் பாதுகை வேண்டுமாபூஜைக்கு என்றார். நான் அமெரிக்கா செல்வதால் சில சிரமங்கள் உள்ளன எனக் கூறவும் சிறிய உலோகத்தால் ஆன தங்க முலாம் பூசிய எடுத்துச்செல்ல வசதியாய் தருகிறேன் அதிஷ்டானத்தில் பூஜை செய்து எடுத்துப்போங்கள் என்று அன்புடன் கூறவும் அதனைப் பெரியவா அருள் வாக்ககவே நினைத்து வாங்கி பூஜையில் வைத்து இங்கு எடுத்தும் வந்துவிட்டேன் .நித்யம் அபிஷேக ஆராதனைகள் செய்து வருகிறேன்.புறப்படுவதற்குமுன் கணேஷ் சர்மா செய்யும் அனுஷ பூஜையில் வைத்துஎடுத்து வந்தேன். பெரியவாளுக்கு நமக்கு எந்த வேளையில் என்ன தரவேண்டும் என நன்றாகவே தெரியும். நான் அதிஷ்டானத்தில் ப்ரார்த்தனை செய்தது வெளியில் இருந்தவருக்கு எப்படித்தெரியும்? அதுதான் பெரியவா!!
ஒரு நாள் நான் பெரியவாளிடம் பேசிக்கொண்டிருந்தேன்(இது அடிக்கடி நான் செய்யும் பழக்கம்) உங்களுக்கு பூஜை செய்ய வில்வ தளம் கூட வாங்க இயலாமல் இருக்கிறேன் நான் இருந்து என்ன என ப் புலம்பியது பெரியவா காதில் விழுந்து அவர் அருட் பார்வையும் உடனே எனக்குக் கிடைத்தும் விட்டது ஒரு பெண்ணின் ரூபமாக. வாசலில் மணி அழைப்புச் சத்தம் கேட்டு த் திறந்தால் அந்தப் பெண் எனக்கு ஒரு புஷ்பப் பொட்டலம் கொண்டு வந்து அவ்ள் வேளைசெய்யும் எஜமானி என் ஸ்னேஹிதி இதனைக் கொண்டு கொடுக்குமாறு அனுப்பியதாகக் கூறினாள். நான் முன்பு சொன்னதால் பூஜைக்குப் பூ வாங்கி வந்திருக்கிறாள் . நான் அவளிடம் அடுத்த முறை சென்றால் வில்வதளம் வாங்கிவர இயலுமா எனக் கேட்டதற்கு என்ன மாமி பாருங்கள் வில்வம்தாந் வாங்கியுள்ளேன் எனக் கூறவும் என்னால் என் காது கண்களை நம்ப இயலவில்லை. அவர் பூஜைக்கு வேண்டியதை என் ஆசைகிணங்கி உடனே தருவ்த்ததை உணர்பவருக்கே புரியும்!!
என் ஆப்த நண்பன் மகனுக்கு இணையானவன் வாழ்க்கையில் சமீபத்தில் ஓர் நிகழ்ச்சி.. பெரியவா தரிசனத்துக்கு மடத்துக்குச் சென்று அதிஷ்டானத்தில் பூஜை இத்யாதிகள் செய்தபின் ஸ்ரீ ஜயேந்திரப் பெரியவர் சன்னிதியில் தன் மனைவியுடனும் குடும்பத்துடனும் சென்று வழிபட்டான். மனைவியின் ஆபீசில் சில தர்ம சங்கடங்கள் அவளுக்கு ப்ரமோஷன் வந்து அதனால் ஏற்படும் சில விஷயங்கள் கஷ்டமானவை. அவற்ரை எப்படி சமாளிப்பது என்று பெரியவா அனுக்ரஹம் வேன்டும் எந ஸ்ரீ ஜயேந்திரரிடம் கூற அவர் ப்ரஸாதம் அருளினார். பின் ஓரிக்கை கோவில் சென்று வழிபட்டுத் திரும்பும்போது அங்கு பூஜாஸ்தானத்தில் இருக்கும் வேதபாடசாலை சிறுவன் இவனுடைய மனைவியை அழைத்து உங்களுக்கு பெரியவா உத்தரவு ஆயிருக்கு, உங்கள் வேலையில் எந்த வித ப்ரஸ்னையும் வராது நீங்கள் தைர்யமாகச் செல்லலாம் எனக் கூறியது பெரியவா வாக்கன்றி வேறென்ன? அவளுக்கு அதுபோலவே எந்த ப்ரச்னையும் இல்லை. இதை விட ப்ரத்யக்ஷமான தெய்வத்தை எங்கு காணமுடியும்? அவன் பெரியவாளிடம் அஸாத்ய பக்தி கொண்டவன். அவனுடைய அனுபவங்கள் நாளையும் தொடரும்..........
ஹரஹர சங்கரா.......... |
No comments:
Post a Comment