Pages

Wednesday, 22 October 2014

தீபாவளி லேகியத்தை செய்து உண்டு ஆரோக்கியத்தைக் காத்துக்கொள்ளுங்கள்

காவி சொந்தங்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்.

பட்சணங்கள் உண்டதால் அஜீர்ணம், புளியேப்பம், போன்ற பிரச்னைகள் வராமல் இருக்க கீழ்க்கண்ட தீபாவளி லேகியத்தை செய்து உண்டு ஆரோக்கியத்தைக் காத்துக்கொள்ளுங்கள்.

கொத்துமல்லி(விதை) - அரை கப்
ஓமம் - 50 கிராம்
சுக்கு, மிளகு, திப்பிலி - தலா 10 கிராம்
இஞ்சி 2 துண்டு -
வெல்லம் அல்லது கருப்பட்டி - 100 கிராம்
நெய் - கால் கப்
ஏலக்காய் தூள் - சிறிது

செய்முறை:

கொத்துமல்லியை அரைமணி நேரம் ஊற வைத்து இஞ்சி சோ்த்து மிக்சியில் நன்கு அரைத்து வைக்கவும். பிறகு சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமத்தை மிக்சியில் போட்டு நைசாக பொடி செய்து கொள்ளவும். வாணலியில் தனியா விழுது, பொடி செய்து வைத்துள்ள கலவை இரண்டையும் சேர்த்து வெல்ல துருவலும் சேர்த்து அடுப்பில் வைத்து நெய் விட்டு கிளறிக் கொண்டே இருக்கவும். கலவை நிறம் மாறி, டார்க் பிரவுன் கலரில் வரும் போது இறக்கி, ஏலக்காய் தூள் சேர்க்கவும். லேகிய பதத்தில் இறக்கி வைத்து நெல்லிக்காயளவு உண்டால் மேற்படி உபாதைகள் நீ்ங்கும்.



 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் 
பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment