Pages

Thursday, 5 June 2014

புதிராய் இருக்கும் புத்திர தோஷம்

புதிராய் இருக்கும் புத்திர தோஷம்

மனித வாழ்க்கையில் முக்கிய அங்கமான திருமணம் முறையான வாரிசுகளை, சந்ததிகளை உருவாக்குவதற்காக தான்.

இப்பிரபஞ்சத்தில் சிந்திக்க தெரிந்த மனித இனம் மட்டுமே, இயற்கையுடன் போராடிய பல நூற்றாண்டுகளாக மனித இனத்தை விருத்தி செய்து வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

சிந்திக்க தெரியாத உயிரினங்கள் எத்தனையோ பூமியில் இருந்து அழிந்து விட்டன.

பூமியில் பிறந்த பெரும்பாலான மனிதர்கள் தன் மூலம் ஒரு வாரிசு உலகில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் இருப்பார்.

மழலை செல்வத்தை விரும்பாத மனிதன் இல்லை.

திருமணம் ஆகும் வரை "திருமணம் ஏன் இன்னும் ஆகவில்லை வயது போய் கொண்டே இருக்கிறது.

சீக்கிரம் திருமணம் செய்யுங்கள்." என்று பெற்றோர்களை விட, அதிகம் அக்கறை கொண்ட அக்கம், பக்கத்தினர், உறவினர்கள் அன்றாடம் கவலைபடுவார்கள்.

அதே போல் திருமணம் ஆனவுடன், ஏதாவது விசேசம் உண்டா? என்று உடனே ஆரம்பித்து விடுவார்கள் .

திருமணமான பெரும்பாலான தம்பதிகளே சீக்கிரம் குழந்தை பெற்று கொஞ்சி மகிழ ஆசையுடன் தான் இருப்பார்.

ஏதாவது, சூழ்நிலை காரணமாக தாமதமானால் அவர்களை காயப்படுத்தி, பேசி மகிழ்வதில் நம் நாட்டில் உள்ளவர்களை மிஞ்ச முடியாது.

குழந்தை தாமதமாக பெற்று கொள்ளலாம் என்ற எண்ணம் கொண்டவர்களையும், கூட பேசியே விரைவாக குழந்தை பெற்று கொள்ள செய்து விடுவார்.


புத்திர ஸ்தானம் :

லக்னத்திற்கு ஐந்தாமிடம் புத்திர ஸ்தானம் ஐந்தாமிடம், 5-ல் உள்ள கிரகங்கள், 5-ம் இடத்தை பார்க்கும் கிரகங்கள், 5-ம் அதிபதி, இருக்கும் வீடு, 5-ம் அதிபதியுடன் சேர்ந்த கிரகங்கள், பார்க்கும் கிரகங்கள், புத்திர காரக கிரகமான குருவின் நிலை,

இவற்றை ஆராய்ந்து புத்திர யோகத்தை கண்டறியலாம்.

ஆணா ? பெண்ணா ?

நாட்கடந்து குழந்தை பிறக்குமா ?

புத்திர தோஷம் உண்டா ?

தத்து புத்திர யோகமா ?

போன்ற அனைத்தையும் புத்திர ஸ்தானத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

புத்திர தோஷம் :

லக்னத்திற்கு 5- ம் இடத்தில் பாவ கிரகங்கள், நீச கிரகம் இருந்தாலும், 5-ம் அதிபதி பாவ கிரக சேர்க்கை, பார்வை பட்டாலும் , 5-ம் அதிபதி நீசம், காரககிரகமான குரு நீசம், குரு சூரியன் சாரம் பெற்றாலும் புத்திர தோஷம் ஏற்படும்.

புத்திர தோஷத்தினால் கருகலைதல், குழந்தை பிறந்து இறத்தல், தாமதமாக பிறத்தல், உடல் அங்கீனம் ஏற்படுதல், ஆண், பெண் குழந்தைகளில் ஏதேனும் ஒன்று மட்டும் பிறத்தல், புத்திர பிரிவு போன்றவை ஏற்படும்.

ஐந்தாமிடத்தில் நிற்கும் கிரக பலன்கள் :

சூரியன் :

உஷ்ண கிரகமான சூரியனால் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பு உண்டு. மிதுனம், கன்னி, மகரம், மீனம் ஆகிய ராசி (அ) லக்னக்காரர்களுக்கு குழந்தைகளால் சிக்கல், தொல்லை ஏற்படும்.

செவ்வாய் :

பாவகிரகமான செவ்வாய் குழந்தை பிறப்பை தாமதப்படுத்தும். செவ்வாய் நீசம் அடைந்தாலும், வலுவிழந்து இருந்தாலும் கருச்சிதைவு ஏற்படும்.

ரிஷப, மிதுன லக்னம் (அ) ராசிக்காரர்களுக்கு தீய குணங்கொண்ட புத்திரர்களால் துன்பம் ஏற்படும்.

சனி :

ஒன்று (அ) இரண்டு குழந்தைகள் தான் உண்டு. 
பெண் குழந்தையால் நன்மை உண்டு.

குரு :

காரகோபாவ நாஸ்தி ஏற்பட்டு, தாமதமான குழந்தை பிறப்பை தரும். விருச்சிகம், சிம்மம், மீன லக்கினகாரர்களுக்கு தோஷமில்லை.

சந்திரன் :

சந்திரன் பலம் பெற்றால், பெண் குழந்தைகள் அதிகம் பிறக்கும். கடகம், சிம்மம், தனுசு, கும்பம் ராசி (அ) லக்னகாரர்களுக்கு புத்திரர்களால், பலன் குறைவு.

புதன் :

பெண் குழந்தை பிறக்கும். எந்த குழந்தை பிறந்தாலும், சுப பார்வையின்றி, இருந்தால் அலி தன்மை உடையவர் போல தென்படுவார்.

சுக்கிரன் :

பெண் குழந்தை அதிகம் பிறக்கும். லக்னம் (அ) ராசியை பொறுத்து மாறுபடும்.

ராகு – கேது :

கரு கலைப்பு, கரு சிதைவு ஏற்படலாம். 
முதல் குழந்தை பெண் பிறந்தால், நலம். 
நாக தோஷம் உண்டு.

குரு நீச்சம் :

குழந்தை பிறப்பிற்கு அடிப்படையாக இருக்கும் காரக கிரகம் குரு முழுசுபகிரகம். எந்த லக்னமாக இருந்தாலும், குரு நீசம் பெற்றிருத்தல் நல்லதல்ல.

குழந்தை பிறப்பு தாமதம், வயோதிக வயதில் பிறத்தல், பிறந்து இறந்து போதல், குழந்தைகளால் நன்மை இல்லாமல் இருப்பது, பிரிவு போன்றவை ஏற்படும்.

சிம்மராசி (அ) லக்னத்திற்கு 5,8 க்குரிய குரு நீசம் பெற்றால், புத்திர சம்பத்து குறைவு.

ஆனால், சிம்மத்திற்கு 5-ல் வேறு எந்த கிரகமும் மூலதிரிகோண ஆட்சி, உச்சம், பெற முடியாது.

யோககிரகமான செவ்வாய், சுக்கிரன், சேர்ந்தோ (அ) தனித்தோ 5-ல் இருந்தால், புத்திரபாக்கியம் உண்டு.

கன்னி லக்னம் (அ) ராசிக்கு 5-ம் இடத்தில் குரு நீச்சம் பெற்று அந்த வீட்டு அதிபதியும், 6,8,12-ல் இருந்தால் புத்திர்களால் நன்மை இல்லை.

ஆண்பிள்ளை பிறந்தாலும், தந்தையை விட்டு பிரிவார்.

இந்த அமைப்பு உடையவரின் முதல் மனைவியும், ஜாதகரை விட்டு பிரிவார். விருச்சிக லக்னம் (அ) ராசிக்கு 5-ம் அதிபதி குரு நீசமானாலும், ஆண் வாரிசு இல்லாமல் இருப்பது, காலத்திற்கு உதவாமல் போவது, பிறர்க்கு தத்து கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

ஐந்தாம் அதிபதி நீசம் :

புத்திர பாக்கியம் ஏற்பட பூர்வ புண்ணிய பலன், இருக்க வேண்டும்.

புத்திர பாக்கியத்திற்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாமிடத்தை அதனால்தான் பார்க்கிறோம்.

ஒவ்வொரு லக்கினத்திற்கோ (அ) ராசிக்கோ வரும் 5- ம் அதிபதி நீசம் பெற்றால், புத்திர ஸ்தானம் பாதிக்கப்படும்.

மேஷ ராசி (அ) லக்னத்திற்கு சூரியனும், ரிஷபம், கும்பத்திற்கு புதனும், மிதுனம், மகரத்திற்கு சுக்கிரனும், சிம்மம், விருச்சிகத்திற்கு குரு வும், கன்னி, துலாமிற்கு சனியும், கடகம், தனுசுக்கு செவ்வாயும், மீன லக்னத்திற்கு 5-ம் அதிபதி சந்திரனும், நீசமானதால், பூர்வ புண்ணியம் கெட்டு புத்திரவிருத்தி, புத்தி முதலான இன்றியமையாத விசயங்கள் எல்லாம் பலம் குறைந்து விடும்.

இதனால் புத்திர தோஷம் ஏற்பட்டு விடும்.

நாட்கடந்து குழந்தை பிறத்தல் :

நல்ல உடல் நலத்துடன் இருக்கும் சிலருக்கு திருமணமாகி, இரண்டு, மூன்றாண்டுகள் கடந்தும் குழந்தை பாக்கியம் ஏற்படாமல் புதிராகவே இருக்கும்.

அதற்குள் சுற்றியிருப்பவர்கள், பெண்களுக்குள் ஜாடை பேசுவது, மலடி என்ற வார்த்தைகளால் வசை போடுவது, நேரடியாகவோ, மறைமுகமாகவோ குறையாக குத்தி காட்டி பேசுவதால், ஆண்களை விட பெண்கள் அதிகம் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள்.

சிலருக்கு ஏன் இப்படி குழந்தை பிறப்பு தாமதமாகிறது?

சனி, ராகு, கேது, குரு ஆகிய கிரகங்கள் தனித்தோ, சேர்ந்தோ 5-ம் இடத்தில் இருந்தால், புத்திர பாக்கியம் தாமதமாகும்.

லக்னாதிபதி, 5-ம் அதிபதி சொந்த வீட்டில் இல்லாமல் மற்ற வீடுகளில் இருந்து 5-ம் இடத்தை பார்க்கவில்லை என்றால், 5 வருடத்திற்கு மேல்தான் குழந்தை பிறக்கும்.

லக்னத்தில் சனி, 8-ல் குரு, 12-ல் செவ்வாய் இருந்து 5-ம் இடத்திற்கு சுப கிரக பார்வை இருந்தால், காலங்கடந்து பிறக்கும்.

5-ம் இடத்தில் 6,8,12-ம் அதிபதி தனித்தோ, சேர்ந்தோ, இருந்து குரு, சுக்ரன் பார்வை பெற்றால் நாட்கடந்து குழந்தை பிறக்கும்.

நன்றி – மாத ஜோதிடம்..

http://tamizhankural.com/puthra-bhagyam-puthira-thosam-puthra-sthanam/

L

 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment