Pages

Monday, 24 February 2014

குதிரைவாலி பிரியாணி

குதிரைவாலி பிரியாணி

குதிரைவாலி - 2 கப்
கேரட், பீன்ஸ் - 250 கிராம்
பீட்ரூட் - ஒன்று
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
வரமிளகாய் - 4 (காரத்திற்கேற்ப அவரவர் விருப்பப்படி)
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 6 பற்கள்
சோம்பு - ஒரு மேசைக்கரண்டி
பட்டை - சிறு துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு
தயிர் ஆடை - ஒரு மேசைக்கரண்டி (விரும்பினால்)
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 4 கப்

குதிரைவாலி சிறுதானிய வகையைச் சேர்ந்தது. இது உடலுக்கு மிகவும் நல்லது. சக்கரை நோய் வராமல் தடுக்கவும், கட்டுப்பாட்டிற்குள் வைக்கவும் மிகவும் உதவியாக இருக்கும்.பெரிய வெங்காயத்தை நீளவாக்கிலும், தக்காளியைப் பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும். காய்கறிகளைச் சுத்தம் செய்து தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும். மிக்ஸியில் இஞ்சி, பூண்டு, ஏலக்காய், அரை மேசைக்கரண்டி சோம்பு, கிராம்பு, பட்டை ஆகியவற்றைப் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். (நறுக்கி வைத்துள்ள தக்காளியில் பாதியளவு சேர்த்து அரைத்தால் விழுது நன்றாக இருக்கும்). குதிரைவாலியை நன்றாகக் களைந்து 4 கப் தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். (ஒரு கப் குதிரைவாலிக்கு 2 கப் தண்ணீர் ஊற்றவும்.குக்கரில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சோம்பு போட்டு பொரியவிட்டு, வெங்காயம் போட்டு வதக்கவும்.வெங்காயம் வதங்கியவுடன் அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கி விட்டு, பின்னர் அனைத்து காய்கறிகளையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.பிறகு பாதியளவு தண்ணீரை ஊற்றி, உப்பு சேர்த்து காய்கறிகளை வேக விடவும்.காய்கறிகள் அரை பதமாக வெந்ததும் குதிரைவாலியைப் போட்டு, மீதமுள்ள தண்ணீரை ஊற்றி நன்றாக கலந்துவிட்டு வைக்கவும்.கொதி வந்தவுடன் கலவையை நன்றாக கிளறி விட்டு, மூடி போட்டு வெயிட் போடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கி வைக்கவும். குக்கரை ஒரு டர்க்கி டவலை நனைத்து பிழிந்து விட்டு சுத்தி வைக்கவும். 5 நிமிடம் கழித்து வெயிட் நீக்கி, வெந்த குதிரைவாலி பிரியாணியை நன்றாக கிளறி விடவும்.சூடான குதிரைவாலி பிரியாணி ரெடி. மல்லி, புதினா போட்டு அலங்கரித்து ரைத்தாவுடன் பரிமாறவும்.

                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment