Pages

Thursday, 27 February 2014

சிவராத்திரி வரலாறு!

சிவராத்திரி வரலாறு!
பிரம்மாவும் மஹாவிஷ்ணுவும், சிவபெருமானின் முடி&அடி தேடிய வரலாறு நமக்குத் தெரியும். இது நிகழ்ந்தது, மாசி மாதத் தேய்பிறை சதுர்த்தசி தினத்தன்று. அந்த நாளே சிவராத்திரி. இதை ஸ்காந்த மஹாபுராணம் கூறுகிறது.
மாக க்ருஷ்ண சதுர்தஸ்யாம்
அனலாசல மத்புதம்
& ஸ்காந்த மஹா புராணம்
இது தவிர மற்றோர் அற்புதமான கதையும் உண்டு.
பிரளய காலம் முடிந்த அன்றைய இரவு நேரத்தில் அம்பிகை உமா தேவி, நான்கு ஜாமங்களிலும் சிவ பெருமானை ஆகம முறைப்படி பூஜை செய்தார். 
மறு நாள் பொழுது விடிந்தது. சிவபெருமானை வணங்கிய அம்பிகை, ''ஸ்வாமி! தங்களை நான் பூஜித்த இந்த இரவை, எல்லோரும் சிவராத்திரி என உங்கள் பெய ரால் அழைக்க வேண்டும். அத்து டன் சிவராத்திரி அன்று சூரிய அஸ்தமனம் முதல், மறு நாள் காலை சூரிய உதயம் வரை தேவர்கள் உட்பட எல்லோரும் உங்களை பூஜை செய்ய வேண்டும். அப்படி பூஜை செய்பவர்களுக்கு சர்வ மங்கலங்களுடன் முடிவில் முக்தியையும் தாங்கள் அருள வேண்டும்!'' என வேண்டினார். பரமசிவனும், ''அப்படியே!'' என்று அருள் புரிந்தார். அம்பிகை பூஜை செய்த அந்த நாளே (மாசி மாதத் தேய்பிறை சதுர்த்தசி) மகா சிவராத்திரி என அழைக்கப்படுகிறது.
நியதிப்படி பகல் பொழுது சிவபெருமானுக்கும், இரவுப் பொழுது அம்பிகைக்கும் உரியது. அம்பிகை, தனக்குரிய இரவுப் பொழுதை சிவபெருமான் பெயரால் வழங்கச் செய்தார்.

                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment