Pages

Thursday, 27 February 2014

சிவலிங்கம்

உருவ வழிபாட்டுக்கும், உருவ மில்லாத அருவ வழிபாட்டுக் கும் நடுவில் இருப்பது 'அருஉருவ வழிபாடு'. உருவம் இருக்கும். ஆனால், கை&கால் முதலான அவயவங்களுடன் சேர்ந்த உருவத்தைப் போல இருக்காது; அருவமாக இருக்கும். இந்த அருஉருவ வழிபாட்டைக் குறிப்பதுதான் சிவலிங்க வழி பாடு!
சிவலிங்கத்தைத் தாங்கும் பீடத்துக்கு 'ஆவுடையார்' என்று பெயர். இது சக்தியின் வடிவான பூமியைக் குறிக்கும். சிவலிங்கம் ஆகாயத்தைக் குறிக்கும்.
இதைக் கொஞ்சம் ஆராயலாம். ஆகாயம் என்பது கவிழ்த்து வைத்த மரக்கால் (தானியங்களை அளக்கப் பயன்படும்) போல இருக்கிறது. ஆகாயத்தைப் பார்க்க முடிகிறதே தவிர, அதன் வடிவம் புலப்படுவதில்லை. உருவமாகத் தெரிந்தும் உருவமில்லாமல் இருக்கும். இந்த ஆகாயத்தைத்தான் சிவலிங்கம் குறிக்கிறது. அசையும் பொருள்& அசையாப் பொருள் என (நாம் உட்பட) அனைத்துமே, ஆகாயம் என்னும் அந்த ஒரே கூரையின் கீழேதான் இருக்கின்றன.
சிவலிங்க வடிவமாக இருக்கும் அந்த ஆகாயத்தை 'அண்ட லிங்கம்' என்று மகான்கள் சொல்வார்கள்.
கோயிலில் உள்ள சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்ய வேண்டுமென்றால், ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து வைத்துக் கொள்வோம். அதுபோல ஆகாய லிங்கத்துக்கு அபிஷேகம் செய்வதற்காகக் கடலில் நிறைய நீர் உள்ளது. ஆகாய லிங்கம் மிகப் பெரியது அல்லவா? அதனால்தான் அதற்கு அபிஷேகம் செய்யும் தீர்த்தமும் அதிக அளவில் உள்ளது.
அபிஷேகம் முடிந்து விட்டது. அடுத்து அர்ச்சனை அல்லது பூக்களைச் சார்த்த வேண்டும். ஆகாய லிங்கத்துக்கு எந்தப் பூக்களைச் சார்த்துவது? ஆகாயத்தில் இருக்கும் நட்சத்திரங்கள்தான், ஆகாய லிங்கத்துக்குப் பூமாலை.
இவ்வளவு பார்த்த பிறகும் ஒரு சந்தேகம் வருகிறது. கோயில்களில் இருக்கும் ஸ்வாமிக்கு எல்லாம், ஏதாவது ஒரு முறையில் எப்படியாவது ஆடை சார்த்துகிறோம். மிகவும் உயரமான ஆஞ்சநேய வடிவங்களுக்கு எல்லாம் ஏணி வைத்தாவது ஆடை சார்த்துவதைப் பார்க்கிறோம். ஆனால், இந்த ஆகாய லிங்கத்துக்கு எப்படி அல்லது எதை ஆடையாகச் சார்த்துவது?
இந்த லிங்கத்துக்குத் திசைகளே ஆடையாக உள்ளன. இதுதான் சிவலிங்கத்தின் உண்மையான விளக்கம். 
இதை யாரோ, பக்குவப்படாதவர் சொல்லவில்லை. சிவபெருமானை நேருக்கு நேர் தரிசித்த சித்த புருஷரான திருமூலர் சொன்ன தகவல். இவர் 63 நாயன்மார்களில் ஒருவராக விளங்குகிற மகான். இவரது வாழ்க்கை வரலாற்றைப் பெரிய புராணம் விரிவாகப் பேசுகிறது.
சைவத் திருமுறைகள் பன்னிரண்டில், பத்தாவது திருமுறையாக இருக்கும் 'திருமந்திரம்' நூலை எழுதியவர் திருமூலர். மூவாயிரம் பாடல்கள் கொண்ட திருமந்திரத்தில் சிவலிங்கத்தின் உண்மை விளக்கத்தைத் திருமூலர் வெளிப்படுத்தி இருக்கிறார்.
இதோ அவர் சொல்லும் பாடல்:
தரை உற்ற சக்தி தனி லிங்கம் விண்ணாம்
திரை பொரு நீரது மஞ்சன சாலை
வரை தவழ் மஞ்சு வான் உடுமாலை
கரை அற்ற நந்திக்குக் கலை திக்குமாமே
& திருமந்திரம்
இதன்படி நாம் அனை வருமே ஒரே கூரையின் கீழ் இருக்கிறோம். வேறுபாடும் வெறுப்புமின்றி இருக்க வேண்டியது நமது பொறுப்பு; கடமையும்கூட.
உருவ வழிபாட்டுக்கும், உருவ மில்லாத அருவ வழிபாட்டுக் கும் நடுவில் இருப்பது 'அருஉருவ வழிபாடு'. உருவம் இருக்கும். ஆனால், கை&கால் முதலான அவயவங்களுடன் சேர்ந்த உருவத்தைப் போல இருக்காது; அருவமாக இருக்கும். இந்த அருஉருவ வழிபாட்டைக் குறிப்பதுதான் சிவலிங்க வழி பாடு!  சிவலிங்கத்தைத் தாங்கும் பீடத்துக்கு 'ஆவுடையார்' என்று பெயர். இது சக்தியின் வடிவான பூமியைக் குறிக்கும். சிவலிங்கம் ஆகாயத்தைக் குறிக்கும்.  இதைக் கொஞ்சம் ஆராயலாம். ஆகாயம் என்பது கவிழ்த்து வைத்த மரக்கால் (தானியங்களை அளக்கப் பயன்படும்) போல இருக்கிறது. ஆகாயத்தைப் பார்க்க முடிகிறதே தவிர, அதன் வடிவம் புலப்படுவதில்லை. உருவமாகத் தெரிந்தும் உருவமில்லாமல் இருக்கும். இந்த ஆகாயத்தைத்தான் சிவலிங்கம் குறிக்கிறது. அசையும் பொருள்& அசையாப் பொருள் என (நாம் உட்பட) அனைத்துமே, ஆகாயம் என்னும் அந்த ஒரே கூரையின் கீழேதான் இருக்கின்றன.  சிவலிங்க வடிவமாக இருக்கும் அந்த ஆகாயத்தை 'அண்ட லிங்கம்' என்று மகான்கள் சொல்வார்கள்.  கோயிலில் உள்ள சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்ய வேண்டுமென்றால், ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து வைத்துக் கொள்வோம். அதுபோல ஆகாய லிங்கத்துக்கு அபிஷேகம் செய்வதற்காகக் கடலில் நிறைய நீர் உள்ளது. ஆகாய லிங்கம் மிகப் பெரியது அல்லவா? அதனால்தான் அதற்கு அபிஷேகம் செய்யும் தீர்த்தமும் அதிக அளவில் உள்ளது.  அபிஷேகம் முடிந்து விட்டது. அடுத்து அர்ச்சனை அல்லது பூக்களைச் சார்த்த வேண்டும். ஆகாய லிங்கத்துக்கு எந்தப் பூக்களைச் சார்த்துவது? ஆகாயத்தில் இருக்கும் நட்சத்திரங்கள்தான், ஆகாய லிங்கத்துக்குப் பூமாலை.  இவ்வளவு பார்த்த பிறகும் ஒரு சந்தேகம் வருகிறது. கோயில்களில் இருக்கும் ஸ்வாமிக்கு எல்லாம், ஏதாவது ஒரு முறையில் எப்படியாவது ஆடை சார்த்துகிறோம். மிகவும் உயரமான ஆஞ்சநேய வடிவங்களுக்கு எல்லாம் ஏணி வைத்தாவது ஆடை சார்த்துவதைப் பார்க்கிறோம். ஆனால், இந்த ஆகாய லிங்கத்துக்கு எப்படி அல்லது எதை ஆடையாகச் சார்த்துவது?  இந்த லிங்கத்துக்குத் திசைகளே ஆடையாக உள்ளன. இதுதான் சிவலிங்கத்தின் உண்மையான விளக்கம்.   இதை யாரோ, பக்குவப்படாதவர் சொல்லவில்லை. சிவபெருமானை நேருக்கு நேர் தரிசித்த சித்த புருஷரான திருமூலர் சொன்ன தகவல். இவர் 63 நாயன்மார்களில் ஒருவராக விளங்குகிற மகான். இவரது வாழ்க்கை வரலாற்றைப் பெரிய புராணம் விரிவாகப் பேசுகிறது.  சைவத் திருமுறைகள் பன்னிரண்டில், பத்தாவது திருமுறையாக இருக்கும் 'திருமந்திரம்' நூலை எழுதியவர் திருமூலர். மூவாயிரம் பாடல்கள் கொண்ட திருமந்திரத்தில் சிவலிங்கத்தின் உண்மை விளக்கத்தைத் திருமூலர் வெளிப்படுத்தி இருக்கிறார்.  இதோ அவர் சொல்லும் பாடல்:  தரை உற்ற சக்தி தனி லிங்கம் விண்ணாம்  திரை பொரு நீரது மஞ்சன சாலை  வரை தவழ் மஞ்சு வான் உடுமாலை  கரை அற்ற நந்திக்குக் கலை திக்குமாமே                         & திருமந்திரம்  இதன்படி நாம் அனை வருமே ஒரே கூரையின் கீழ் இருக்கிறோம். வேறுபாடும் வெறுப்புமின்றி இருக்க வேண்டியது நமது பொறுப்பு; கடமையும்கூட.
COURTESY SAKTHI VIKATAN





                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment