Pages

Wednesday, 29 January 2014

குட்டிக்கதை:

குட்டிக்கதை:

அவன் மனைவி ஒரு பேரழகி.
ஊரே அவனைப் பொறாமையாகப் பார்த்தது.

அவனுக்கு ஊர் மீதும் நம்பிக்கையில்லை, மனைவி மீதும் நம்பிக்கை இல்லை.

ஒரு சமயம் அவன் படைக்குத் தலைமை ஏற்று போருக்குப் போக வேண்டியிருந்தது. 

மனைவியைத் தனியாக விட்டுப் போக வேண்டியிருப்பது உறுத்தலாக இருந்தது. 

மனைவியின் இடையை இரும்புத் தகடுகளால் மூடிப் பூட்டினான்.

சாவியை உயிர் நண்பனிடம் கொடுத்தான்.

"நண்பா, இந்த உலகத்தில் உன்னைத் தவிர யார் மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை. 

என் மனைவி மேல் கூட நம்பிக்கை இல்லை. 

இந்த சாவியை வைத்துக் கொள். 

ஒருவேளை போரில் நான் இறக்க நேரிட்டால் இவளது அழகும் இளமையும் வீணாகக் கூடாது என்பதால்தான் சாவியை உன்னிடம் ஒப்படைக்கிறேன்." 

என்று நாத்தழுதழுக்க சாவியை ஒப்படைத்தான்.

நண்பனும் கண்களில் நீர் முட்ட விடை கொடுத்தான்.

அவன் குதிரையில் ஏறிப் புறப்பட்டான்.

வீதியின் கோடியை அடைவதற்குள், பின்னால் யாரோ அழைக்கிற சப்தமும், ஓடி வருகிற சப்தமும் வந்தது.
திரும்பினான்.

மூச்சிரைக்க ஓடி வந்தது அவன் நண்பன்.
"என்ன நண்பா?"

"தப்பான சாவியைக் கொடுத்து விட்டாய்"

                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''

follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment