Wednesday 8 October 2014

தீபாவளி டிப்ஸ் By சீதா ஹரிஹரன், புது தில்லி




தீபாவளி டிப்ஸ்
சீதா ஹரிஹரன், புது தில்லி 
* மைசூர் பாகு செய்யும் போது 2:1 என்ற அளவில் பாசிப்பருப்பையும், கடலைப்பருப்பையும் அரைத்து செய்தால் மைசூர்பாகு மிருதுவாகவும், வாசனையாகவும் இருக்கும். அதேபோன்று கடலைமாவுடன் முந்திரிப் பருப்பை தூள் செய்து போட்டு மைசூர்பாகு செய்தாலும் சுவையாக இருக்கும்.
* ரவாலட்டு செய்யும்போது வறுத்துப் பொடித்த ரவையுடன் அவலையும் வறுத்துப் பொடித்துச் சேர்த்து சிறிதளவு பால்பவுடர், சூடான நெய் சேர்த்து உருண்டைகள் பிடித்தால் ரவாலட்டுவின் சுவையும் மணமும் சூப்பராக இருக்கும்.
* மூன்று பங்கு மைதாமாவு, ஒரு பங்கு கடலைமாவு, அரைபங்கு அரிசிமாவுடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து காராபூந்தி தயாரித்தால் எண்ணெய் குடிக்காதது மட்டுமின்றி மிக்ஸருக்கும் தனிசுவை கிடைக்கும்.
* பொட்டுக் கடலையைத் தூள் செய்து சர்க்கரை, நெய், கிராம்புத்தூள், சிறிதுபால் தெளித்து லேசாக சூடாக்கி விட்டு பிடித்தால் மிக எளிதில் சுவையான பொட்டுக்கடலை லட்டு ரெடியாகிவிடும்.
* தீபாவளிக்கு செய்த பட்சணங்களை டப்பாவில் போட்டு மூடிவைக்கும் போது அதில் உப்பை ஒரு துணியில் மூட்டை கட்டி போட்டு வைத்தால் பட்சணங்கள் மொறுமொறுப்பு குறையாமல் இருக்கும்.
* அதிரசம் பாகு எடுக்கும்போது பாகு தக்காளிப்பழம் பதமாக இருக்க வேண்டும். பாகு முறுகினால் அதிரசம் உதிர்ந்துவிடும்.
* அல்வா மிக்ஸ் வாங்கி அல்வா செய்யும்போது ஜவ்வரிசி அரை கப் எடுத்து இரண்டுமணிநேரம் ஊறவைத்து மிக்சியில் அரைத்து அந்த விழுதுடன் அல்வா மிக்ஸ் கலந்து அல்வா செய்தால் அல்வா கண்ணாடி போன்று பளபளப்பாகவும் நிறையவும் இருக்கும்.
* ஜாங்கிரி செய்யும்போது நீரில் ஊறவைத்த உளுந்தம் பருப்பை விழுதாக அரைத்தவுடன் ஒரு கப் உளுந்து விழுதுக்கு ஒரு டீஸ்பூன் அரிசிமாவைக் கலந்து பின் பிழிய ஜாங்கிரி உடைந்து போகாமல் முழுசாக வரும்.
* குலாப்ஜாமூன் செய்யும்போது உருண்டைகளினுள் பொடியாக, நறுக்கிய முந்திரி, பிஸ்தா ஆகியவற்றை வைத்துப் பொரித்தால் சுவை கூடுதலாக இருக்கும்


 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் 
பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator