Saturday 6 September 2014

பரமாச்சார்யார்: காஞ்சி காமகோடி பீடத்தின் 68-ஆவது பீடாதிபதிகள்

பரமாச்சார்யார்: காஞ்சி காமகோடி பீடத்தின் 68-ஆவது பீடாதிபதிகள்
குரு பாதம் வணங்கி குரு அருளைப் பெறுவோம்!
பாரத நாடு பல காலமாக அடிமைப் பட்டுக் கிடந்தது. அந்தக் காலகட்டத்தில் மக்களின் வாழ்வு சிறப்பாக அமையவில்லை. நமது நாகரிகமும், பண்பாடும் மங்கி வந்தன. உணவு, உடை என்ற வசதிகள் மக்களின் மனம்போல கிடைக்கவில்லை. அந்தந்த காலகட்டத்தில் சிற்சில குறைபாடுகள் இருக்கவே செய்தன. மழை இல்லாத பஞ்சமும், விளைச்சல் இல்லாத வறுமையும் இந்த நாட்டில் இடையிடையே ஏற்பட்டதுண்டு.
ஆனால் எந்தக் காலத்திலும் ஞானியர்கள் இல்லாத வறுமை இங்கே உண்டானதே இல்லை. அடிமைக் காலத்தில்தான் வடநாட்டில் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் தோன்றினார். விவேகானந்தர் விளக்கம் பெற்றார். தென்னாட்டில் ராமலிங்க சுவாமிகள் திருவருட்பாவினால் சமரச சன்மார்க்கம் நிலவும்படி செய்தார். ரமண மாமுனிவர் தம் அருள் ஒளியைப் பரப்பி னார். இன்னும் எத்தனையோ ஞானியர் தோன்றினர். 
இந்த நாட்டு மண்ணோடு ஒட்டியது ஞானநெறி. ஞான நெறியும் சமய நெறியும் ஒன்றுதான். உலகம் முழுவதும் இறைவனை வழிபடுகிற சமய நெறிகள் பல உள்ளன. ஆங்காங்கே சமயத் துறையில் சிறந்து நின்ற அருளாளர்களும் மகான் களும் இருந்தார்கள்.
எட்டாம் நூற்றாண்டில் காலடி என்ற திவ்ய தலத்தில் ஆதிசங்கரர் அவதரித்தார். வையம் முழுவதும் வாழ, "எல்லாம் ஒன்றே' என்ற அத்வைத சித்தாந்தத்தை மலரச் செய்தார். ஸ்ரீஆதிசங்கரர் அருளிய அத்வைத சித்தாந்தம் வேதாந்தத்தையும் யோகானந்தத்தையும் கொண்டது.
ஆதிசங்கரர் அருளிய அத்வைத சித்தாந்தத்தை, காஞ்சி காமகோடி பீடத்தின் 68-ஆவது பீடாதிபதியான பரமாச்சார்யார்கள் நம்முடைய காலத்தில் தோன்றி தழைக்கச் செய்தார். 20-5-1894-ல் விழுப்புரத்தில் சுப்ர மணிய சாஸ்திரிகள், மகாலக்ஷ்மி என்ற திவ்ய தம்பதிகளுக்கு குழந்தையாக அவதரித்தார் பரமாச்சார்ய சுவாமிகள். 13-2-1907-ல் தனது 13-ஆவது வயதிலேயே காமகோடி பீடத்தின் 68-ஆவது பீடாதிபதியானார்கள்.

பீடத்திற்கு வந்ததும் சுவாமிகள் மகேந்திர மங்கலம் என்ற கிராமத்தில் பல ஆண்டுகள் தங்கி வேதம், வியாகரணம், வேதாந்தம் முதலிய வற்றைப் பயின்றார். சுவாமிகள் 1919 முதல் 21 ஆண்டுகள் பாரதம் முழுவதும் ஞான யாத்திரை செய்தார். அந்த காலகட்டத்தில் பரமாச்சார்ய சுவாமிகள் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார்கள்.
பரமாச்சார்ய சுவாமிகளின் தவம் தன்னிகரற்றது. அவர் பெற்ற ஞானம் எல்லையற்றது. மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட வல்லமையைப் பெற்றிருந்தார். சந்நியாச தர்மத்திற்கு இலக்கணமாய்த் திகழ்ந்தார்கள். மகா யோகீஸ்வரர்! 
அத்வைத சாஸ்திரத்தைப் பயில்பவருக்கு வசதி களையும், வழிகளையும் செய்தார்கள். தனது உபன்யாசங்களினாலும், அருள் உரைகளினா லும் மக்களுடைய மன மாசுகளை அகற்றி தெய்வ பக்தியை வளரச் செய்தார்கள். மகா பெரியவருக்குத் தெரியாத கலைகளே இல்லை. அவருடைய பேச்சில் வேதம் இருக்கும்; அறிவியல் இருக்கும்; சங்கீதம், சரித்திரம் போன்ற எல்லா விவரங்களும் இருக்கும்.
சுவாமிகள் காஞ்சி காமகோடி பீடத்தில் இருந்தபொழுது, 400 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத பொற்காலமாக அது இருந்தது. பல அற்புதங்கள் நடந்தன. 
"ஸ்ரீ சுவாமிகள் வித்யாப்யாசம் செய்த முறை தனியானது. சாதாரண மக்கள் தமக்கு கல்வி கற்பிக்கின்றவர்களை ஆச்சார்யார்களாக மதித்து, அவர்களிடம் பக்தி செலுத்திக் கல்வி பெறுவார்கள். பரமாச்சார்ய சுவாமிகளுக்கு கல்வி கற்பித்த பண்டிதர்களோ சுவாமிகளை தம் குருவாக ஏற்றுக்கொண்டவர்கள். பாடம் ஆரம்பிக்கும் முன்னரும், முடிந்த பின்னரும் அவர்கள் சுவாமிகளை வணங்குவார்கள்.
சுவாமிகளுக்கு முறையாகக் கல்வி உதவிய வர்களுள் பைங்காநாடு பஞ்சாபகேச சாஸ்திரிகள், மஹா மஹோபாத்யாய சாஸ்திர ரத்னா கர. தி. வெங்கடசுப்பா சாஸ்திரிகள், சாஸ்திர ரத்னாகர விஷ்ணுபுரம் சாமி சாஸ்திரிகள், திருவிசைநல்லூர் வெ. வேங்கடராம சாஸ்திரிகளும் அடங்குவர்.

ஒருசமயம் சுவாமிகளுக்கு கல்வி கற்பிக்க, அகண்ட காவிரியின் நடுவில் அமைந்த திட்டுக்குச் சென்று அங்கு பாடங்களை ஆச்சார்யர்கள் தொடங்கினார்கள். அப்பொழுது சுவாமிகள் பாலகிருஷ்ணனைப்போல லீலைகளைச் செய்தார். ஆற்று மணலைக் குவித்து விளையாடிக் கொண்டும், அங்கு மிங்கும் ஓடிக்கொண்டும் இருந்தாராம். ஆச்சார்யர்கள் நீண்ட நேரம் காத்திருந்து, அஸ்தமனம் ஆகிவிடவே பர்ணசாலைக்குத் திரும்பிவிட்டனர்.
மறுநாளும், அடுத்து சில நாட்களும் இதேபோன்ற லீலைகளை சுவாமிகள் செய்தார். ஆச்சார்யர்களுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. சுவாமிகளை கோபித்துக் கொள்ளவும் முடியாது. பாடங்கள் கற்பிக்கும் பணியை ஏற்றுக்கொண்டவர்கள் ஆயிற்றே.
அடுத்த நாள் ஆச்சார்யர்கள் சுவாமிகளை வணங்கி, ""பெரியவா... நாங்கள் ஊருக்குச் சென்றுவிட்டு சில தினங்களில் வருகிறோம்'' என்றார்கள்.
அவர்கள் நிலையை உணர்ந்த சுவாமிகள் புன்முறுவலுடன், ""நான் பாடம் படிக்க உட்காரவில்லையே என்ற வருத்தம்தானே'' என்று சொல்லி, அற்புதம் ஒன்றை நிகழ்த்தினார். தான் இதுவரையில் கற்ற பாடங்கள், இனிமேல் கற்க வேண்டிய பாடங்கள் எல்லாவற்றையும் அருவிபோல பொழிந்து விட்டாராம்.
ஆச்சார்யர்கள் மேனி சிலிர்த்தது. நெடுஞ்சாண் கிடையாக சுவாமிகளை வணங்கி ஆனந்தப் பரவசமானார்கள்.
சுவாமிகள் இவ்வளவு கல்விகளோடு ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளும் கற்று வந்தார்கள். பல மொழிகளைப் பயின்றார். மகாராஷ்டிர மொழியையும், அதிலுள்ள நூல் களையும் ஆராய்ச்சி செய்துள்ளார்கள். சுவாமி களுக்கு தமிழில் இருந்த ஆர்வம் அதிகமானது. தமிழ் இலக்கண, இலக்கியங்களையும் பயின்று வந்தார். தேவாரம், திருவாசகம், திருவிளையா டல் புராணம், திருக்குறள் போன்ற நூல்களை யும் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வந்தார்கள். சங்கீதக் கலை சுவாமிகளுக்கு மிகவும் பிடித்த மானது.
ஒரு அவதார புருஷராக இருந்தும்- நம்மிடையே நம் நிலைக்கு இறங்கி வந்து, மக்களோடு மக்களாகப் பழகி, அடியவர்களின் துன்பங்களை நீக்கி அருளைப் பொழிந்தார்கள் மகாபெரியவர்கள். சுவாமிகள் முன்பு நின்றாலே அவருடைய பார்வையினால் எல்லா தோஷங் களும் நீங்கி எல்லா நலன்களும் கிடைத்துவிடும். பல்லாயிரக்கணக்கான மக்களின் துயரங்களை நீக்கி அருள் மழையைப் பொழிந்துவிடுவார்கள். இன்றும் சுவாமிகளை நினைத்து உள்ளம் உருகி நாம் செய்யும் பிரார்த்தனைகள் எல்லாம் நலமாக நடக்கிறது. குரு பாதம் வணங்கி குரு அருளைப் பெறுவோம்.


 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator