Thursday 7 August 2014

ஆவிகளைப் பற்றி

பாகம் -1

திடீரென்று ஒரு நாள் காலை தஞ்சாவூலுருக்கும் நண்பரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. முருகவேல் எப்படி இருக்கிறான் என்று என்னிடம கேட்டார். நன்றாகத்தானே இருக்கிறார். நேற்று இரவு கூட வெகுநேரம் பேசிக்கொண்டு இருந்தோம். ஏன் திடீரென்று அவரைப் பற்றிக் கேட்கிறாய் என்று நான் கேட்டேன்.
ஒன்றுமில்லை…. இப்போது 10 நிமிடத்திற்கு முன்பு முருகவேல் என் அலுவலக வாசலில் நின்றதைப் பார்த்தேன். ஒருவேளை அவன் தஞ்சாவூர் வந்திருக்கிறானோ என்று தெரிந்து கொள்ளவே போன் செய்தேன். இருந்தாலும் மனது ஏதோபோல் இருக்கிறது. சரி பரவாயில்லை என்றார்.
நானும் முருகவேல் அரகண்ட நல்லூரில்தான் இருக்கிறார். அவரைப் போன்று வேறு யாரையாவது பார்த்திருப்பாய் எனக்கூறி தொலைபேசியை வைத்து விட்டேன். வைத்த 10வது நிமிடம் ஒரு ஆள் மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்க என்னிடம் விரைவாக வந்தார். உங்களுக்கு விஷயம் தெரியுமா என்றார்.
அவர் குரலில் படபடப்பும் தடுமாற்றமும் இருந்தது. அவர் முகபாவம் அவரின் விழிகள் அலைந்த விதம் இவர் ஏதோ அதிர்ச்சியான விஷயத்தைச் சொல்லப் போகிறார் என்பதை எனக்குத் தெளிவாக காட்டியது. ஏன் என்ன விஷயம் நிதானமாகச் சொல்லுங்கள் எதற்காகப் பதட்டப்படுகிறீர்கள் என்று அவரை ஆசுவாசப்படுத்தினேன். அவர் தான் அமைதி பெறாமலே அடுத்த அதிர்ச்சியை எடுத்து வைத்தார். உங்கள் நண்பர் முருகவேல் அரைமணி நேரத்திற்கு முன் செத்து விட்டார் என்றார்.
அதிர்ச்சியில் ஒரு நிமிடம் ஆடிப்போய் விட்டேன். சற்று நேரத்தில் நிதானமான பிறகு தஞ்சை நண்பர் முருகவேலை அலுவலக வாசலில் பார்த்ததாகக் கூறியதை நினைத்தப் பார்த்தேன். தனது மரணம் ஏற்பட்டவுடன் தன் உயிர் நண்பர்க்குத் தன்னை வெளிப்படுத்திய முருகவேலின் நெஞ்சார்ந்த நட்பு என்னைக் கலங்கவைத்தது.
இதே போன்று நிறைய சம்பவங்கள் எனக்கு மட்டுமல்ல உங்களில் பலருக்கும் ஏற்பட்டு இருக்கும். ஆவிகள் தான் நேசித்த இடத்திற்கு வந்து செல்வதையும் தான் நேசித்த நபர்கள் வாழும் இடத்திற்குச் செல்வதை இப்படி பல நூறு அனுபவங்களில் நிருபிக்கலாம்.
மக்களிடத்தில் ஆவிகளைப் பற்றி வேறு ஒரு அபிப்ராயம் உள்ளது. ஆவிகள் பாழடைந்த மண்டபங்களிலும் மயானங்களிலும் அதிகமாக வாழுகின்றன என்று. இதில பாழ்மண்டபங்களில் ஆவிகள் வசிப்பது அவ்வளவு தூரம் உண்மையானது அல்ல. அந்த மண்டபங்களின் தோற்றம் பயமுறுத்துவதாக இருப்பதனால் பெருவாரியான ஜனங்கள் ஆவிகளோடு அவைகளைச் சம்பந்தப்படுத்தி பேசுகிறார்கள்.
ஆனால் சில மண்டபங்களில் ஆவிகள் வசிப்பது உண்டு. அந்த மண்டபங்கள் வாழ்ந்த போது அந்த ஆவிக்குப் பிடித்தமான இடமாகவோ அல்லது ஏதோ ஒரு வகையில் சம்பந்கப்பட்ட இடமாகவோ இருக்கலாம். பொதுவாக அப்படிப்பட்ட மண்டபங்களில் வசிக்கும் ஆவிகள் அமைதி அடையாமல் ஏதோ ஒரு வகையான ஆக்ரோஷத்துடன் அந்த மண்டபங்களில் இருக்கலாம்.
ஆனால் மரங்களில் ஆவிகள் வசிப்பது உண்மையானதுதான். முருங்கை மரம், கருங்காலி மரம், அசோகமரம் போன்ற மரங்களிலிருந்து வெளிவரும் கரியமிலவாயுவின் தன்மை ஆவிகளின் காற்று உடம்பை பிடித்துவைத்துக் கொள்ள ஏதுவாக இருப்பதனால் இத்தகைய மரங்களில் ஆவிகள் வசிப்பது அவைகளுக்கு மிக சௌகரியமாக இருக்கும்.
மேலும் பெருவாரியான ஆவிகள் மயானங்களில் வாழ்வதை விரும்புகின்றன. புதியதாக வரும் ஆவிகளை வரவேற்பதற்கும் துன்புறுத்துவதற்கும் இறந்து போனவர்களுக்குத் தவறுதலாகப் படைக்கப்படும் பிண்டங்களை எடுத்துக்கொள்ளவும் புதைக்கப்பட்ட அல்லது எரிக்கப்பட்ட தனது உடல் மீண்டும் கிடைக்காதா என்பதற்காகவும் இன்னும் வேறு சில மாந்திரீகர்களால் கட்டப்பட்டும் ஆவிகள் மயானத்தில் நிறைந்திருப்பது இயற்கை ஆகும்.
இது தவிர பழங்கால அரண்மனைகள் போன்றவற்றில் தண்டனை பெற்ற ஆவிகள் மூர்க்கத்துடன் அலைவதையும் சாலை ஒரங்களில் விபத்துக்குள்ளான ஆவிகள் திருப்தி இல்லாமல் அலைவதையும் பழங்கால கிணற்று ஓரங்களில் தற்கொலை செய்து கொண்ட ஆவிகள் அமைதி இல்லாமல் அலைவதையும் வாஸ்து முறைப்படி கடடப்படாத வீடுகளில் சில ஆவிக் குழுக்கள் வாழ்வதையும் அனுபவத்தில் காணலாம்.
அடுத்ததாக ஆவிகளை எல்லோராலும் பார்க்க முடிவதில்லை ஏன்? அப்படிப் பார்த்ததாகக் கருதுபவர்களில் முக்கால வாசிபேரின் அனுபவங்களி சுய கற்பனையாகவும் மனப்பிரமையாகவும் இருக்கிறது அப்படி இருக்க உண்மையில் ஆவிகளைப் பார்க்க முடியாதா? ஆவிகள் நடமாடக் கூடிய சில இடங்ளில் நான்கு ஐந்து பேர் குழுக்களாகச் சென்றால் அதில் குறிப்பிட்ட ஒருவர்தான் ஆவிகள் தெரிவதாகக் கூறுகிறார்கள். அப்படிக் கூறுபவர்களின் மன இயல்புகளையும் உடற் கூறுகளையும் பகுத்துப்பார்க்கும் போது அவர்கள் ஏதாவது ஒரு ரீதியில் பலஹீனர்களாகவும் அடுத்தவர்களைப் பயமுருத்திப் பார்ப்பதில் இன்பம் கான்கிறவர்களாகவும் இருப்பதை அறிய முடிகிறது. இதனாலேயே ஆவிகளைப் பார்த்தாகக் கூறும் பல சம்பவங்களை நம்ப முடியாததாக ஆகிவிடுகிறது.
ஆவிகளைப் பார்க்கும் உண்மையான சந்தர்ப்பம் ஆயிரத்தில் ஒருவருக்குத்தான் அமைகிறது. அனாலும் அதில் உண்மை எவ்வளவு பொய் எவ்வளவு என்பதை அவர்கள் பேச்சிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். திருச்சியிலிருந்து சமீபத்தில் ஒரு இளைஞர் என்னிடம் வந்தார். அவர் நன்றாகப் படித்தவர். அயல் நாட்டில் வேலையும் செய்கிறார். தான் கல்லூப் படிப்பை மேற்கொண்ட போது மாணவர் விடுதியில் தங்கி இருந்ததாகவும் அப்போது தனது அறையினுள் திடீர் திடீர் என மல்லிகைப் பூ வாசம் வீசியதாகவும்அந்த நேரம் மெல்லியதாக வளையல் சத்தம் கேட்டதாகவும் தான் அதை அன்றைய சூழலில் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் தொடர்ச்சியாக இதே போன்ற நிகழ்வுகள் தனது அறையில் சில மாதங்கள் நடந்ததாகவும் ஒருநாள் தான் வெகுநேரம் கழித்து அறைக்கு வந்து கதவைத் திறந்தபோது அறையின் உள்ளிருந்து வெண்மையான புகைவடிவில் ஒரு பெண் உருவம் விருட்டென்று வெளியேறியதாகவும் அப்படி வெளியேறும் போது காற்றுபோல் தன்னைத் தள்ளிவிட்டுச் சென்றதாகவும் அப்போது மிகவும் குளிர்ச்சியான சூழலைத் தான் உணர்ந்ததாகவும் கூறினார்.
அந்தச் சம்பவம் நடந்த பிறகு தனக்கு 2 நாட்கள் கடுமையான ஜுரம் இருந்தது என்றும் ஆயினும் தான் அந்தக் காற்றுப் பெண்ணைப் பற்றி எந்த விவரத்தையும் யாரிடமும் சொல்லவில்லை என்றும் நாளடைவில் தனக்கு உடல் பலஹீனமும் படிப்பில் தடுமாற்றமும் நண்பர்களிடத்தில் விரோதமும் ஏற்பட்டு விட்டதாகவும் கூறிய அவர்
கல்லூரிப் படிப்பை விருப்பம் இல்லாமலே ஏனோதனோ வென்று படித்து முடித்தேன். கல்லூரி வாழ்க்கை முடிந்த சில மாதங்களில் யாரோ என்னைத் தொடுவது போன்றும் யாருடனோ படுக்கையைப் பதிர்ந்து கொள்வது போலவும் சம்பவங்கள் நடக்க ஆரம்பித்தது. பெற்றவர்களிடம் சொன்னால் பயந்து விடுவார்கள் என்று மறைத்தே வைத்து இருந்தேன். அயல் நாட்டில் வேலை கிடைத்த பிறகும் அதே போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நீடித்தது.

நன்றி .திரு .சிங்காரம்



 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator