Wednesday 2 July 2014

அரிய தகவல்கள் : 100

அரிய தகவல்கள் : 100

* கடல் உப்பை விடவும் சாதாரண உப்பே சிறந்தது. எந்த உப்பாக இருந்தாலும் அதிகபட்சம் தினம் 6 கிராம் மட்டுமே நல்லது.

* ஷார்யீ ஃபின் மேக்கோ என்ற சுறா மீன், நீருக்கு வெளியே 6 மீட்டர் வரை தாவும். இது சுறா வகைகள் தாண்டுவதில் உச்ச உயரம்!

* அதிக பரப்பளவுள்ள 10 நாடுகள்: ரஷ்யா, கனடா, அமெரிக்கா, சீனா, பிரேசில், ஆஸ்திரேலியா, இந்தியா, அர்ஜென்டினா, கஸகஸ்தான், சூடான்.

* 0.0089 மில்லிமீட்டர் அகலத்தில் ஒரு 'பீரியாடிக் டேபிள்' தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அளவை முடிந்தால், அளந்து பார்த்து வியந்து கொள்ளுங்கள்!

* ஸ்பெர்ம் திமிங்கலத்தின் மூளையின் எடை, சராசரியாக 8 கிலோ. யானையின் மூளை 5 கிலோ. பாட்டில்நோஸ் டால்பினுக்கு 1.51.7 கிலோ.

* பால்வீதி மண்டலத்திலேயே மிகக்குளிர்ச்சியான பகுதி பூமராங் நெபுலா. மைனஸ் 272 டிகிரி செல்சியஸ். ஹைட்ரஜனை உறையச் செய்யும் அளவு குளிர் நிறைந்த அப்பகுதி, பூமியிலிருந்து 5 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கிறது.

* ஐந்தரை முதல் மூன்றரை கோடி ஆண்டுகளுக்கு இடையிலான காலத்தைய 379 திமிங்கலப் படிமங்கள் எகிப்தின் மேற்கு பாலைவனப் பகுதி யில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

* ஹெர்குலிஸ் பீட்டில் என்ற வண்டுதான் பூச்சிகளில் மிக நீளமானது. 170 மி.மீ. நீளம். அதன் எடையைப் போல 850 மடங்கு சுமையைத் தாங்கக் கூடியது. இந்த அளவில், பூமியின் மிக வலிமையான உயிரினம் இதுவே!

* 2011ல், பச்சை லேசர் ஒளியை உமிழக்கூடிய வகையிலான மனித சிறுநீரக செல், ஜெல்லி மீன் டிஎன்ஏவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது.


 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator